பிரதிலிபியின் போட்டிகள் பகுதி குறித்து நான் மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

ரொக்கப் பரிசுகள் தொடங்கி பிரத்யேகமான அடையாளத்தைப் பெறுவது வரை, ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு அற்புதமான பரிசுகளை வழங்க நாங்கள் திட்டமிடுகிறோம்!

 

போட்டிகள் என்பவை பரிசுகள் வழங்குவதைப் பற்றியது மட்டுமல்ல, முடிந்தவரை அவற்றின் மூலம் பல எழுத்தாளர்களை அங்கீகரிப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். வெற்றி பெற்றால்தான் தளத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? பிரதிலிபியில் அவ்வாறு இல்லை! நீங்கள் பிரதிலிபி நடத்துகிற ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்றால், தளத்தில் நீங்கள் கவனம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், மேலும் அதன்மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெறலாம்!

 

உங்கள் படைப்புகள் பிரதிலிபியில் உள்ள மிகப்பெரிய வாசகர்வட்டதிற்குள் சென்றடைவதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம். வெற்றியாளர்களின் நேர்காணல்களை பிரதிலிபியின் சமூக வலைதள பக்கங்களில் நாங்கள் இடம்பெறச் செய்கிறோம். தளத்தின் அதிகமான எழுத்தாளர்களுடன் உங்களை ஒன்றிணைக்க இது உதவும்.

 

ஆயிரக்கணக்கான வாசகர்களுடன் உங்கள் படைப்புகள் ஏற்படுத்தும் ஈடுபாடு மற்றும் உங்களது கதைகள் அல்லது தொடர்கதைகள் எங்களது ஆராய்ச்சிக் குழுவால் கவனிக்கப்படுகிறது. இந்தக் குழு தளத்திலிருந்து சிறந்த கதைகளை எடுத்து அவற்றை அச்சுப் புத்தகங்கள், காமிக்ஸ், ஆடியோ புத்தகங்கள், வெப் தொடர்கள், குறும்படங்கள் போன்றவையாக மாற்றுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குகிறது.

 

அற்புதமான பகுதி: இதுபோன்ற IP ஒப்பந்தங்களுக்கு எங்கள் குழு போட்டிகளில் பங்கெடுத்த படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது, எனவே நீங்கள் எங்கள் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் (வெற்றி பெற்றாலும் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை!) பங்கேற்கிறீர்கள் என்றால், எங்கள் IP குழுவால் நீங்கள் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  

 

பிரதிலிபியால் உங்கள் தொடர்கதை/நாவல்களை அச்சு அல்லது காமிக்ஸ் புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள், வெப் தொடர்கள் போன்றவையாக உருவாக்க முடியும். படைப்பின் காப்புரிமை எழுத்தாளரிடம் இருப்பதால், எழுத்தாளரின் படைப்பைத் தயாரிப்பதற்கு முன் எங்கள் IP குழு எழுத்தாளரை தொடர்புகொண்டு, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறது.

 

இந்தப் பதிவு உதவியதா?