எழுத்தாளர் வழிகாட்டுதல்கள்

ஒவ்வொரு எழுத்தாளரும் பிரதிலிபியை சொந்தமாகக் கருதி, எங்கள் படைப்பு வழிகாட்டுதல்கள், பதிப்புரிமைக் கொள்கை மற்றும் குறியீட்டுக் கொள்கை ஆகியவற்றுடன் பொருந்தாத படைப்பு/ உள்ளீடுகளிலிருந்து இணையதளம்/செயலியைப் பாதுகாக்க உதவிடுங்கள். தயவுசெய்து பின்வரும் வழிகாட்டுதல்களை மனதில் கொள்ளுங்கள்:

 

1. பதிப்புரிமைப் பாதுகாப்பு காலாவதியானவை (எ.கா: பொது களத்தில் உள்ள கிளாசிக் நாவல்கள்) அல்லது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடியவை உட்பட, உங்களுக்குச் சொந்தமில்லாத அல்லது வெளியிட சரியான அனுமதி இல்லாத எந்தப் படைப்புகளையும் பதிப்பிக்க வேண்டாம்.

 

2. நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தையும் மீறி பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளை வெளியிட வேண்டாம்.

 

3. பதிப்பிக்கப்படும் படைப்புகள் எங்கள் படைப்பு வழிகாட்டுதல்கள், பதிப்புரிமைக் கொள்கை மற்றும் குறியீட்டு வழிகாட்டுதல்களுடன் பொருந்த வேண்டும், மேலும் பதிப்பிக்கப்படும் படைப்புகள் பலதரப்பட்ட வாசிப்புக்கு ஏற்றதாக இருப்பதை எழுத்தாளர் உறுதிசெய்ய வேண்டும்.

 

4. அவதூறான, வெறுக்கத்தக்க படைப்புகள்/உள்ளீடுகளை வெளியிட்டு இணையதளம்/செயலியை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அனுமதியின்றி யாருடைய தனிப்பட்ட தகவலையும் வெளிப்படுத்துதல் அல்லது எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களால் அனுமதிக்கப்படாத படைப்புகளை வெளியிடுதல் போன்றவை கூடாது. 

 

5. நிறுவனத்தால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை எப்போதும் பின்பற்றவும்.

 

6. தகவல்தொடர்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க இணையத்தளம்/செயலி தொடர்பான எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும் போது, ​​பிற பயனர்களால் வெளியிடப்பட்ட படைப்புகளின் மதிப்புரைகளுக்குப் பதிலளிப்பது அல்லது இணையதளம்/செயலி மூலம் பிற பயனர்களுடன் அரட்டை அடிப்பது உட்பட அனைத்திலும் மற்ற பயனர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.

 

7. எந்தவொரு தொண்டு நோக்கங்கள் உட்பட பிற பயனர்களிடமிருந்து பணம் வசூலிக்க இணையதளம்/செயலியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அத்தகைய பரிவர்த்தனைகளின் எந்த விளைவுகளுக்கும் நிறுவனம் பொறுப்பேற்காது.

 

8. வெளியிடப்படும் படைப்புகள் மற்றும்/அல்லது உள்ளீடுகள் எங்கள் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறிந்தால் அவற்றை அகற்றுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. ஏதேனும் புகார்களைப் பெறும்போது நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் மற்றும் எந்தவொரு வற்புறுத்தல் நடவடிக்கையையும் தவிர்க்க தானாகவே முன்வந்து பிரச்சினைகளைத் தீர்க்க உங்களை ஊக்குவிப்போம்.

 

9. எந்தக் காரணத்திற்காகவும் ஒரு ப்ரொஃபைல் இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டாலோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர் ப்ரொஃபைலை  உருவாக்காதீர்கள் அல்லது மற்றொரு ப்ரொஃபைல் மூலம் உள்நுழைய வேண்டாம்.

 

10. தவறான தகவல்களைப் பயன்படுத்தி போலியான ப்ரொஃபைலை உருவாக்காதீர்கள், எங்கள் தளத்தில் வேறொரு நபரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி அல்லது நீங்கள் நீங்கள் அல்லாத வேறொருவர் எனக் கூறி அல்லது வேறு வழிகளில் ஆள்மாறாட்டம் செய்யாதீர்கள்.

 

11. எங்களுடைய நண்பராக இருந்து எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் படைப்புகள் அல்லது உள்ளீடுகளை உடனடியாகப் புகாரளிக்கவும்.

 

12. எந்தவொரு பதிப்பிக்கப்பட்டப் படைப்பின் பதிப்புரிமை அதன் அசல் எழுத்தாளருக்கு சொந்தமானது, தானாக மற்றும்/அல்லது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி அது அவர்களிடம் உள்ளது. நீங்கள், ஓர் எழுத்தாளராக, அசல் மற்றும் உங்களால் பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளின் பதிப்புரிமையாளராக இருக்கிறீர்கள். 

 

13. உங்களது பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளில் ஏதேனும் உரிமைக்காக மூன்றாம் தரப்பினர் உங்களை அணுகினால், அதைக் கவனமாகப் பரிசீலித்து, அத்தகைய மூன்றாம் தரப்பினரால் முன்மொழியப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த தொழில்முறை சட்ட ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் நீங்கள் மேற்கொள்ளும் அத்தகைய ஏற்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.

 

14. நிறுவனம் பணம் சம்பாதிக்கும் அம்சங்கள் அல்லது திட்டங்களை அவ்வப்போது இணையதளம்/செயலியில் தொடங்கலாம், அதற்காக உங்களின் பதிப்பிக்கப்பட்டப் படைப்புகள் தேர்வு செய்யப்படலாம். தயவு செய்து தொடர்புடைய FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) பகுதிக்குச் சென்று அதைப் பற்றி அறிந்துகொண்டு, அத்தகைய அம்சங்கள் அல்லது திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் சுய- முடிவின்படி நடக்கவும். எங்கள் இணையதளம்/செயலியில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் பதிப்பிக்கப்பட்டப் படைப்புகளை நியாயமான முறையில் பணமாக்கிட உதவி, எழுதும் ஆர்வத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

 

15. இணையதளம்/செயலியில் பதிப்பிக்கப்படும் படைப்புகள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எழுத்தாளருக்கு நாங்கள் உதவ முயற்சிப்போம், இணையதளம்/செயலிக்கு வெளியே அது பொருந்தாது, மேலும் அத்தகைய உதவிகள் அனைத்தும் நிறுவனத்தின் சுய விருப்பப்படியே இருக்கும்.

 

16. எந்த நேரத்திலும் இணையதளம்/செயலி தவிர்த்து வேறு பொருத்தமான இடத்தில் தங்களது படைப்புகளின் நகல்களைப் பராமரித்து பாதுகாப்பாக வைத்திருப்பது ஒவ்வொரு எழுத்தாளரின் பொறுப்பாகும்.

 

இந்தப் பதிவு உதவியதா?