உங்கள் கதையைப் படிக்க மற்ற பயனர்களை ஊக்குவிக்க மற்றும் அதை இன்னும் தனித்துவமாக்க முகப்புப் படத்தைச் சேர்க்கவும்!
உங்கள் ஃபோன் மற்றும் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்ட படங்களிலிருந்து உங்களது கதைக்கான படத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது பிரதிலிபியின் படத்தொகுப்பைப் பயன்படுத்தி ஒரு முகப்புப் படத்தை உருவாக்கலாம்.
புகைப்படங்கள் png, jpg அல்லது jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.
2. உங்கள் கதைக்கு செல்லவும்
3. பதிப்பிக்க பொத்தானை அழுத்தவும்.
4. ஃபோன் கேலரியிலிருந்து படங்களைச் சேர்க்க படத்தைச் சேர்க்க என்பதற்குக் கீழே உள்ள கேலரியை அழுத்தவும் அல்லது பிரதிலிபியின் படத்தொகுப்பிலிருந்து படத்தைப் பயன்படுத்த முகப்பு படம் உருவாக்க என்பதை அழுத்தவும்.
குறிப்பு:
1. உங்கள் ஃபோன் கேலரியிலிருந்து படங்களைச் சேர்க்க, உங்கள் கேலரி, கோப்புகள் மற்றும் அதன் ஃபோல்டர்களை அணுக பிரதிலிபிக்கு அனுமதி தேவை. இதற்கு உங்கள் மொபைலின் அனுமதி அமைப்புகளைப் பார்க்கவும்.
2. பிரதிலிபியின் பட கேலரிக்கு வெளியிலிருந்து சேர்க்கப்படும் எந்தப் புகைப்படமும் பதிப்புரிமை பெற்றிடாத இலவச புகைப்படங்களாக இருக்க வேண்டும். வேறொருவருக்குச் சொந்தமான புகைப்படங்களாக இருந்தால், படைப்பிலிருந்து புகைப்படம் அகற்றப்படலாம்.