பதிப்புரிமை குறித்த மிக முக்கியமான குறிப்புகள்
பிரதிலிபியில் நாங்கள் எப்போதும் எழுத்தாளர்களுக்கு சிறந்த மற்றும் நியாயமான வாய்ப்புகளுக்காக பாடுபடுகிறோம். ப்ரீமியம், புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள், காமிக்ஸ், வெப்சீரிஸ், திரைப்படங்கள், அனிமேஷன் போன்ற திட்டங்களில் பல எழுத்தாளர்கள் இப்போது வாய்ப்புகளைப் பெறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆனால் சமீபத்தில், பிரதிலிபி எழுத்தாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் மோசடி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய பல அறிக்கைகளையும் நாங்கள் பெறத் தொடங்கினோம். இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில், அவர்கள் முழுமையற்ற தகவல்களை வழங்குகிறார்கள், போலி சலுகைகளை அளிக்கிறார்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குத் தெரியாத உட்பிரிவுகள் மற்றும் புள்ளிகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்குகிறார்கள். எனவே யாராவது உங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கும்போது மற்றும் உங்கள் கதைகளின் ‘உரிமைகளை’ வாங்க விரும்பினால், நீங்கள் எதில் கையொப்பமிடுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
எனவே, பிரதிலிபி எழுத்தாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவுவதற்காக, முக்கியமான கேள்விகள் மற்றும் தகவல்களை நாங்கள் தொகுத்துள்ளோம், உங்கள் கதைகளின் எந்த ‘உரிமைகளையும்’ பெற உங்களை அணுகும் நிறுவனம்/நபரிடம் நீங்கள் அவற்றை கேட்க வேண்டும்.
நாம் மேலும் செல்வதற்கு முன், 'பதிப்புரிமை' அல்லது 'உரிமைகள்' என்றால் என்ன என்பதை விளக்க விரும்புகிறோம். ஒரு எழுத்தாளராக, நீங்கள் முதலில் ஒரு புதிய கதை அல்லது எந்தவொரு இலக்கியப் படைப்பையும் உருவாக்கும் போது, அந்தக் கதையின் (அல்லது இலக்கியப் படைப்பு) பதிப்புரிமை உங்களுக்குச் சொந்தமானது. யாராவது உங்கள் கதையை எந்த வகையிலும் பயன்படுத்த விரும்பினால், பதிப்புரிமை உரிமையாளரான உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும். இந்த அனுமதிகள் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் ‘உரிமைகள்’. எடுத்துக்காட்டாக, உங்கள் கதையின் அடிப்படையில் ஒரு ஆடியோ புத்தகத்தை உருவாக்குவதற்கான ‘உரிமையை’ ஒரு நிறுவனம்/நபருக்கு வழங்கும்போது, ஆடியோ புத்தகத்தை உருவாக்கி அதைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்குகிறீர்கள்.
குறிப்பு: பிரதிலிபியில் நீங்கள் ஒரு படைப்பை வெளியிட்டிருந்தால், அனைத்து பதிப்புரிமையும் உங்களுடையது. பிரதிலிபி எந்த உரிமையிலும் உங்கள் அனுமதியை விரும்பினால், எங்கள் குழு உங்களைத் தொடர்புகொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று, பரஸ்பர நம்பிக்கைக்காக ஒவ்வொன்றையும் விளக்குகிறது.
ஓர் எழுத்தாளரின் கதைகளின் உரிமையைப் பெற யாராவது அவரை அணுகும்போது அவர் கேட்க வேண்டிய கேள்விகள்.
உரிமைகளை வாங்க விரும்பும் நிறுவனம்/நபர் தொடர்பான கேள்விகள்.
-
உரிமைகளை வாங்க ஆர்வமுள்ள நிறுவனம் அல்லது தனிநபர் யார்?
கதைக்கு தேவையான உரிமைகள் பற்றிய கேள்விகள்.
-
எந்தக் கதை பரிசீலிக்கப்படுகிறது மற்றும் தேவையான உரிமைகளின் சரியான தன்மை என்ன?
-
வாங்குபவருக்கு அனைத்து உரிமைகளும் வேண்டுமா? (கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் நீங்கள் ஒருவருக்கு வழங்கினால், அவர்கள் உங்கள் கதையை எந்த வகையிலும் பயன்படுத்தலாம்)
எடுத்துக்காட்டாக: கிடைக்கும் அனைத்து உரிமைகளிலும் வெளியீட்டு உரிமைகள், ஆடியோ உரிமைகள், மின்புத்தக வெளியீட்டு உரிமைகள், வீடியோ தயாரிப்பு உரிமைகள், காமிக் உரிமைகள் போன்றவை அடங்கும்.
-
சில குறிப்பிட்ட வடிவங்களுக்கு மாற்றுவதற்கு வாங்குபவர் சில பகுதி உரிமைகளை விரும்புகிறாரா? (நீங்கள் ஒருவருக்கு சில குறிப்பிட்ட உரிமையை வழங்கினால், அவர்கள் உங்கள் கதையை அதற்குரிய குறிப்பிட்ட முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்)
எடுத்துக்காட்டாக: வாங்குபவருக்கு ஒரு கதையின் ஆடியோ உரிமை மட்டும் வேண்டுமா? அப்படியென்றால் அதைக்கொண்டு புத்தகம் வெளியிட முடியாது. அதே வழியில் நீங்கள் எந்த பகுதி உரிமைகளை வழங்குகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
-
தற்போதைய இலக்கிய வடிவத்திலயே கதையைப் பயன்படுத்த வாங்குபவருக்கு உரிமைகள் தேவையா?
உதாரணத்திற்கு : ஒரு கதையை மின்புத்தகமாக வெளியிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே வாங்குபவர்களுக்கு அந்தக் கதையை அதே வடிவத்தில் பயன்படுத்தவும் மற்ற சேனல்களில் விநியோகிக்கவும் உரிமைகள் தேவையா?
-
இது ஒரு பிரத்யேக உரிமையா? அதே உரிமையை வேறு யாருக்கும் அவர்கள் வழங்க முடியுமா?
பிரத்தியேக ஏற்பாடு என்பது வாங்குபவருக்கு நீங்கள் உரிமைகளை (கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகள் அல்லது பகுதி உரிமைகள்) வழங்கியவுடன். மற்றவருக்கு அதே உரிமைகளை வழங்க முடியாது.
எடுத்துக்காட்டாக: ஆடியோ கதைக்கான பிரத்யேக உரிமையை நீங்கள் ‘XYZ’ நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால். அதே கதையின் ஆடியோ உரிமையை ‘ஏபிசி’ நிறுவனத்துக்கு கொடுக்க முடியாது.
-
உரிமைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கதையின் பதிப்புரிமை யாருக்குச் சொந்தமாக இருக்கும் (அடிப்படை கதை). மேலும், உரிமைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்பின் பதிப்புரிமை யாருக்குச் சொந்தமாக இருக்கும்?
உதாரணமாக: உங்கள் நாவலின் திரைப்படத் தயாரிப்பு உரிமையை வாங்குபவருக்கு வழங்கியுள்ளீர்களா? அப்படியானால் ‘அடிப்படைக் கதை’யின் (இந்நிலையில் உங்கள் நாவலின்) காப்புரிமை உங்களுக்குச் சொந்தமா? அல்லது அவர்கள்? உங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தின் உரிமையும் அப்படியே, அந்தப் படத்தின் உரிமையை நீங்கள் வைத்திருப்பீர்களா அல்லது வாங்குபவரா?
-
உரிமைகள் மற்றும் மற்றொரு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கம் எவ்வளவு காலம் பயன்படுத்தப்படும்?
எடுத்துக்காட்டாக: உங்கள் கதையிலிருந்து வீடியோ விளம்பரம் செய்ய உரிமை வழங்கியுள்ளீர்கள். அல்லது உங்கள் கதையை அச்சு புத்தகமாக வெளியிடும் உரிமையை வழங்கியுள்ளீர்கள். எவ்வளவு காலத்திற்கு அவர்கள் விளம்பரத்தைப் பயன்படுத்த முடியும் அல்லது அந்தப் புத்தகத்தை அச்சிட முடியுமா?
கதையின் அடிப்படையில் எதிர்கால படைப்புகளை உருவாக்குவது பற்றிய கேள்விகள்.
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கதையில் ஏதேனும் சேர்த்தல் அல்லது திருத்தம் செய்யப்பட்டால், புதுப்பிக்கப்பட்ட கதையின் உரிமைகள் என்னவாகும்?
எடுத்துக்காட்டாக: உங்கள் கதை 14 ஆம் நூற்றாண்டில் அரசர்கள் மற்றும் ராணிகளை அடிப்படையாகக் கொண்டது. இப்போது வாங்குபவர் அதை மாற்றியமைத்து இன்றைய காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றி சில கதாப்பாத்திரங்களை சேர்க்கிறார். அப்படி புதுப்பிக்கப்பட்ட கதையின் உரிமையை யார் வைத்திருப்பார்கள்?
-
அடிப்படைக் கதையுடன் இணைக்கப்பட்ட பின்கதையோ , முன்கதையோ அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தின் தனிப்பெரும் கதையோ உருவாக்கப்பட்டால், அந்தப் புதிய படைப்புகளின் உரிமைகள் என்னவாகும்?
எழுத்தாளரின் கதைகள் பற்றிய மற்ற கேள்விகள்.
-
இந்த ஒப்பந்தம் எனது மற்ற கதைகளின் பயன்பாட்டை ஏதேனும் சாத்தியமான வழியில் பாதிக்குமா?
பண ஆதாயம் மற்றும் தலைப்பு தொடர்பான கேள்விகள்.
-
கட்டண முறை என்ன? வருவாய் பங்கு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? வருவாய் பங்கு மற்றும் முன்பணம் எப்போது, எப்படி செலுத்தப்படும்? முன்பணம் செலுத்துவதில் பேரம்பேசுதல் இருக்குமா?
-
கதையின் உரிமையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எந்த உள்ளடக்கத்திலும் எழுத்தாளருக்கு எவ்வாறு பெயர்/அங்கீகாரம் அளிக்கப்படும் ?
ஒப்பந்த ஏற்பாடு பற்றிய கேள்விகள்.
அனுமதியில்லாத வகையில் கதை பயன்படுத்தப்பட்டாலோ அல்லது சரியான நேரத்தில் பணம் கிடைக்காவிட்டாலோ, எழுத்தாளருக்கு உதவிட என்ன வழிமுறை இருக்கிறது?
இந்தக் கேள்விகளைப் பகிர்ந்துகொள்வதன் நோக்கம், உங்கள் கதைகளின் உரிமைகள் குறித்து உரையாடக் கற்றுக்கொடுத்து, உங்களுக்கு உதவுவதே. எழுத்தாளர்கள் தாங்கள் கையெப்பமிடும் ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க இது உதவும் என்று நம்புகிறோம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில்களைக் கேளுங்கள். உங்கள் கடின உழைப்பையும் கற்பனையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், [email protected] இல் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் உதவிக்கு, இது போன்ற கூடுதல் தகவல்களுக்கு Pratilipi IP tamil ப்ரொஃபைலை பின்தொடரவும்.