பிரதிலிபி சமூகம் ஒரு பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலைக் கொண்டிருக்கிறது, மேலும் அனைத்து பயனர்களும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் மரியாதைக்குரிய மற்றும் பொருத்தமான வடிவங்களில் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். படைப்புகளைப் பற்றிய கருத்துக்களைப் பற்றி விவாதிப்பது, மற்றவர்களுடன் உரையாடுவது, ஒன்றாக இணைந்து புதிய யோசனைகளை உருவாக்குவது ஆகியவை பிரதிலிபியில் ஈடுபாட்டுடன் இருக்க சிறந்த வழிகள். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், சர்ச்சைகள் ஏற்படலாம் அதனால் பயனர்கள் புகாரளிக்கும் நிலை ஏற்படலாம்.
இணைய அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கம் ஆகிய காரணங்களால் ஒரு பயனரைப் புகாரளிக்க விரும்பினால், கீழே உள்ள வழிமுறையைப் பின்பற்றவும்:
1. நீங்கள் புகாரளிக்க விரும்பும் பயனரின் ப்ரொஃபைல் பக்கத்தைப் பார்வையிடவும்.
2. திரையின் மேல் வலது மூலையில் உள்ள கேள்விக்குறி ஐகானை அழுத்தவும்.
3. பயனரைப் புகாரளிப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து, சிக்கலைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கவும்.
4. கீழே உள்ள 'சமர்ப்பிக்க' என்பதை அழுத்தவும். புகார் அறிக்கை பிரதிலிபி சேவைக் குழுவைச் சென்றடைந்து, அங்கு அது மதிப்பாய்வு செய்யப்படும். உங்கள் புகார் அறிக்கையின் நிலை குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.
நான் ஒரு பயனரைப் புகாரளித்த பிறகு என்ன நடக்கும்?
சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு அறிக்கையும் மதிப்பாய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில சூழ்நிலைகளில், புகார் அறிக்கையின் தீர்மானம் குறித்த நோட்டிஃபிகேஷன் வராமல் இருக்கலாம்.
சிக்கல்களைத் தாமாகவே தீர்த்துக்கொள்ள, பிற பயனர்களுடன் வலுவான தொடர்பை உருவாக்கிக்கொள்ள பிரதிலபி பயனர் சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல கருவிகள் எங்களிடம் உள்ளன. உங்களது புகார் அறிக்கைகள் பிறர் அறியமுடியாதவை மற்றும் பாதுகாப்பானவை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் அவை சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு இடையில் எந்தத் தீர்வும் எட்டப்படாத சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும்.