பிரதிலிபி சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டம் என்பது என்ன?

சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் என்பது, உங்களுக்கு பிடித்தமான அதே சமயம் இந்த சப்ஸ்கிரிப்சன் முறைமைக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு மாதாமாதம் ரூ. 25 செலுத்தி தொடர்ச்சியான அடிப்படையில் சப்ஸ்கிரைப் செய்துகொள்வது. அப்படி செய்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க முடியும். அதோடு சில கூடுதல் நன்மைகளையும் பெற முடியும். ரூ. 25 என்பது ஒரு எழுத்தாளருக்கான சப்ஸ்கிரிப்சன் கட்டணம். 

 

குறைந்தபட்சம் 200 ஃபாலோவர்ஸ் இருந்து, கடைசி 30 நாட்களில் 5 படைப்பாவது பதிப்பித்திருந்தால், அவர் சப்ஸ்கிரிப்சன் முறைமைக்கு தகுதி பெற்றவர் ஆவார். நீங்கள் அதற்குத் தகுதியானவரா என்பதைச் சரிபார்க்க, கூகுள் ப்ளேஸ்டோரில் பிரதிலிபி செயலியை அப்டேட் செய்துகொள்ளவும். பின் உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் தங்கநிற பேட்ஜைக் கண்டால், நீங்கள் சப்ஸ்கிரிப்சன் திட்டத்திற்குத் தகுதியானவர்.

 

உங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்வதன்மூலம், நீங்கள் எழுதும் தொடரின் புதிய பாகங்கள் 5-நாள் முன்கூட்டியே வாசிக்க கிடைத்தல், உங்கள் பதிப்பிக்கப்பட்ட படைப்புகளில் விமர்சனம் அல்லது கமெண்ட் செய்தால் அவர்கள் ப்ரொபைலில் சூப்பர் ஃபேன் பேட்ஜ் தெரிவது, உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் இருக்கும் சூப்பர் ஃபேன்ஸ் பட்டியலில் இடம்பெறுவது மற்றும் சூப்பர் ஃபேன்களுக்கான பிரத்யேக சாட்ரூமில் இடம்பெறுவது போன்ற நன்மைகள் வாசகர்களுக்கு கிடைக்கும். 

 

இந்தத் திட்டத்தின்கீழ், நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் சில தொடர்கள் முன்கூட்டியே வாசிக்க கிடைக்கும் வசதியின்கீழ் இருக்கும். முன்கூட்டியே வாசிக்க கிடைக்கும் வசதியின்கீழ், உங்களது சூப்பர் ஃபேன்கள் புதிய பாகங்களை உடனுக்குடன் வாசிக்க முடியும். உங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யாத ஃபாலோவர்களுக்கு 5 நாள் காத்திருப்புக்குப்பின் புதிய பாகம் வாசிக்க கிடைக்கும். அதாவது, உங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்து பாகங்களை உடனுக்குடன் வாசிக்கலாம் அல்லது 5 நாள் காத்திருந்து பாகங்களை வாசிக்கலாம். 

 

நீங்கள் சப்ஸ்கிரிப்சன் திட்டத்திற்கு ஒருமுறை தகுதி பெற்றுவிட்டீர்கள் என்றால், நிரந்தரமாக தகுதி பெற்றவர் ஆவீர்கள். ஒருவேளை நீங்கள் அதிலிருந்து வெளியேற விரும்பினால், தகுந்த காரணத்தோடு எங்களுக்கு கோரிக்கை அனுப்பலாம். அதேசமயம் ஒருமுறை நீங்கள் இந்த திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டால், திரும்ப இணைய இயலாது. 

 

இந்தப் பதிவு உதவியதா?