முகப்பு
வகைகள் எழுத

ஆளுமைகள்

2 mins 2 - 5 mins 5 mins - 30 mins 30 mins - 1 hr > 1 hr
2.3
1029

வணக்கம். அன்பர்களே நான் ஒரு கணித ஆசிரியர். நான் எனது M.Phil., ஆய்விற்கு எடுத்துக் கொண்டத் தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும். கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிற்ந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் கணித ஆண்டாக அறிவிக்கப் பட்ட ஆண்டு (2012) இவ்வாண்டாகும்.

கணித ஆண்டாகிய இவ்வாண்டில், கணித மேதையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி சிறிதுதூரம் நடக்கலாமா தோழர்களே. M.Phil., ஆய்வில் நான் கண்ட, உணர்ந்த சீனிவாச இராமானுஜனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

இராமானுஜன் கண்டுபிடித்த கணக்குகளை,  புதிய தேற்றங்களைப் பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, கணித மேதை சீனிவாச இராமானுஜனை, எலும்பும், தசையும், இரத்தமும், உணர்வுக் குவியல்களை உள்ளடக்கிய, நம்மைப் போன்ற சக மனிதராக உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

உண்ண உணவிற்கே வழியின்றி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த, இராமானுஜனின் உண்மை உருவத்தை, உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

தோழர்களே. இதோ கால இயந்திரம் நமக்காகக் காத்திருக்கின்றது. வாருங்கள், வந்து இருக்கைகளில் அமருங்கள். சற்று பின்னோக்கிப் பயணிப்போமா?.

2012, 2010,………..2000…….1947,…….1900,…..1887. இதோ கும்பகோணம். உச்சிப் பிள்ளையார் கோவிலும், சாரங்கபாணிக் கோவிலும் தெரிகின்றதல்லவா. வாருங்கள் கால இயந்திரத்திலிருந்து, இறங்கி, சாரங்கபாணிக் கோவிலுக்கு அருகிலுள்ள கிழக்கு சந்நிதி தெருவிற்குச் செல்வோம். இதோ இந்த ஓட்டு வீடுதான், இராமானுஜனின் வீடு. வாருங்கள் உள்ளே செல்வோம்.

4
1115

பிரபலங்கள் வாழ்விலே

1. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

2. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

3. என்.சி.வசந்தகோகிலம்

4. பி.யு.சின்னப்பா

5. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்

6. டி.ஆர்.சுந்தரம்

7. டி.ஆர்.மகாலிங்கம்

8. டி.கே.எஸ் சகோதரர்கள்

9. 'இலங்கேஸ்வரன்' ஆர்.எஸ்.மனோகர்

10. எம்.எம்.தண்டபாணி தேசிகர்

11. டி.எம்.செளந்தரராஜன்.

12. கொத்தமங்கலம் சுப்பு

13. மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்

14. ஆளவந்தார் கொலை வழக்கு

15. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

16. எம்.எல்.வசந்தகுமாரி

17. தமிழுக்குக் கதி மகாகவி பாரதி.

18. ஊத்துக்காடு வேங்கட கவி

19. கோபாலகிருஷ்ண பாரதியார்

20. அப்சல்கான்

21. அருணாசல கவிராயர்

22. பாரதிதாசன்

23. எம்.கே.தியாகராஜ பாகவதர்

24. அப்பூதியடிகள்.

25. சுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று!

26. கவியோகி சுத்தானந்த பாரதியார்

27. தியாகராஜ சுவாமிகள் வரலாறு

28. வேதநாயக சாஸ்திரியார்

29. சிவகங்கை மருது பாண்டியர்

30. பூலித்தேவன்

31. விந்தன்

32. கரிச்சான்குஞ்சு

33. ராஜாஜி

34. ராஜாஜியும் காமராஜரும்

35. காந்திஜிக்கு ராஜாஜியின் நட்பு

36. ஆலத்தூர் சகோதரர்கள்

37. கவி காளமேகம்

38. ஆர். வெங்கட்ராமன்

4.5
250

தேவன் பிறந்த நூறாண்டுகள் கழிந்த நிலையில் இவரைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது உண்மைதான், அதே சமயத்தில் தேவன் என்கிற தனிப்பட்ட மனிதரைப் பற்றி எழுதுவதை விட அந்த தேவன் என்கிற மாமனிதரை வெளிப்படுத்திய அந்த தேவ எழுத்துக்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் இன்று நேற்றல்ல எத்தனையோ நாட்கள் என் உள்ளத்தின் அடியில் புதைந்திருந்ததுதான். அந்த புதைந்த எழுத்துகள்தான் அவரைப் பற்றி எழுத எழுத பெரும்புதையலாக வெளிப்பட் இந்த பதினான்கு அத்தியாயங்களிலும் அந்தப் புதையலில் கிடைத்த செல்வத்தை எல்லா வாசகருக்கும் சேர்த்துப் பகிர்ந்துள்ளேன்.

தேவன் எழுத்தாளர் மட்டுமாக அல்லது ஆனந்த விகடன் ஆசிரியராக மட்டுமாக பார்க்கமுடியுமா? எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கியவர், ஆனந்த விகடனை பரிபூரண வாராந்தரியாக வாரந்தோறும் இல்லங்களில் எதிர்பார்க்க வைத்தவர், எழுத்துலக ஜாம்பவான், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர், தன் இருபத்திரண்டு ஆண்டுகால இலக்கிய வாழ்வில் எத்தனையோ புதினங்கள், கதைகள், கட்டுரைகள் எனச் ஒவ்வொரு நாளும் ரசிக்கத்தக்க வகையில் எழுதிக்கொண்டே  சாதித்தவர், வாழ்க்கையின் அடிமட்ட வாழ்வையும், உயர்கட்ட வாழ்வையும் பற்றி மட்டுமே சொல்லாமல் நடுவில் வந்து தத்தளித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றிய எதார்த்தத்தையும் எடுத்துக் கூறி எத்தனையோ மனங்களை மகிழ்வித்தவர். தேவனின் பாத்திரங்களைப் பற்றிச் சொன்னாலே இன்றைய தினம் கூட மக்கள் முகம் ஒளிரப் பேசவைக்கும் திறன் கொண்ட அந்த மாமேதையைப் பற்றி என்னவென்று சொல்லிப் புகழ்வது..

தேவன் மட்டும் இத்தனை குவாலிஃபிகேஷனோடு (அவர் பாஷையில்) வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்கா அல்லது பிரிட்டனில் பிறந்திருந்தால் அவர் எப்போதோ நோபல் போன்ற உலகப் புகழ்பெற்ற பரிசுகளையும் விருதுகளையும் அள்ளிக் குவித்திருப்பார் என்றுதான் அவர் எழுத்துக்க்களை ஊன்றிப் படித்தவர்களுக்குத் தோன்றும். இது நிச்சயம் மிகை அல்ல.. அவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்தையும் பல காலமாகப் படித்து வருகிறவன் என்கிற முறையிலும், நானும் ஏதோ சில புத்தகங்கள் எழுதிய எழுத்தாளன் என்கிற முறையிலும்  எதார்த்தத்தைச் சொல்வதுதான் இது. ஆனாலும் பாரத சனாதனத்தை மனதில் கடைசி வரை ஊன்றி அதை எழுத்திலும் வெளிப்படுத்திய தேவன் தான் இந்த பாரதத்தில் பிறந்ததையே நிச்சயம் விரும்பியிருப்பார் என்றும் அதை அவர் எழுத்துகள் பறை சாற்றும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் அவரைப் பற்றிய. எனது எண்ணங்களையெல்லாம்  அவரது எழுத்துகளின் ஊடே அள்ளித் தெளித்திருக்கிறேன். என் எழுத்துக்கு அடித்தளம் எடுத்துக் கொடுத்த எழுத்தல்லவா அவர் எழுத்துகள்…

அவர் பிறந்து நூறாண்டுகள் கழித்துப் பேசும் இந்தக் கட்டுரைகள் தேவன் என்கிற உயரிய ஆன்மாவுக்கு அடியேனால் சமர்ப்பிக்கப்படும் சாதாரண புஷ்பமாலைதான். ஆனால் மணம் வீசும் புஷ்பமாலையாக இதைப் படிக்கும் வாசகர்கள் கருதினால் அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகத்தான் போடுவதாக இருந்தது. ஆனால் உலகமுழுவதுமுள்ள வாசகர்களை சென்றடையவேண்டும் என்ற உந்துதலும் காலம் வேகமாக மாறி வசதிகள் பெருகிய வேளையில் அந்த வசதியை ஒரு நல்ல நன்மைக்காக தத்தெடுக்கவேண்டுமென்று கருதியும் இந்தக் கட்டுரைகள் மின்னூலாக வடிவமெடுத்திருக்கிறது. கட்டுரைப் படித்து நன்றாக இருந்தது என்று நீங்கள் கருதினால் அந்த நல்லுணர்ச்சி முழுவதும் தேவன் எழுத்துக்களுக்கே சமர்ப்பணம் என்றும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.

இந்தப் புத்தகத்தை மின்னூலாகக் கொண்டு வரவேண்டுமென்ற என் ஆவலைப் பூர்த்தி செய்த கிரியேடிவ் காமன்ஸ் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவன் புகழ் ஓங்குக!!