pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இனிவரும் உலகம் நம்ப மறுக்கும்! கவிஞர் இரா. இரவி

5
62

இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தியடிகளைச் சொன்னார்கள் ; அது மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கும் பொருந்தும். இந்தியாவின் பாதத்தில் உள்ள குட்டித்தீவான ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கவிஞர் இரா. இரவி

கவிஞர் இரா .இரவி, 48 வடக்கு மாசி வீதி மதுரை . 625001.rnதமிழ்நாடு .இந்தியா .அலைபேசி 9842193103 மின் அஞ்சல் [email protected]இணையம் www.kavimalar.com வலைப்பூ www.eraeravi.blogspot.com முகநூல் https://www.facebook.com/rraviravi POET R.RAVI 48 NORTH MASI STREET ,rnMADURAI 625001,TAMILNADU.INDIA CELL 9842193103 email [email protected] தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக இரா. இரவி பணிபுரிந்து வருகிறார். 26.01.1992 குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் இவருக்குச் சிறந்த அரசுப்பணியாளருக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். ‘தமிழ்த்தேனீ” பேராசிரியர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் இரவி பேசினார். பொதிகை உள்ளிட்ட பலவேறு தொலைக்காட்சிகளில் இவரது உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன.மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிதை பாடினார் .மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலராக இருந்து செயல்பட்டு வருகிறார் . இவரது நேர்காணல்கள், ‘பொதிகை’, ‘ஜெயா’, ‘கலைஞர்’ முதலான தொலைக்காட்சிகளி ஒளிபரப்பாகி உள்ளன. இரவி இதுவரை 23 நூல்கள் எழுதியுள்ளார். ‘ஹைக்கூ திலகம்’, ‘கவியருவி’, ‘கவிமுரசு’ உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கியக் கழகங்கள் இவருக்கு வழங்கி உள்ளன. இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பல இலட்சம் வாசகர்கள் பார்த்த kavimalar.com, eraeravi.blogspot.in உள்ளிட்ட இணையங்களின் ஆசிரியராக இருந்து, இரவி கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார், ‘RRAVIRAVI’ என்ற முகநூலிலும் எழுதி வருகிறார். உலகின் புகழ்பெற்றத் தமிழ் இணையங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேனீ இரா.மோகன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுவை எழுத்தாளர் சங்கம் இவரது ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்தது. பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களும் புதுவை ஆளுநர் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் புதுவை பல்கலைக் கழகத் துணைவேந்தரால் வழங்கப் பெற்றன. இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய முறையில் நடத்திய கவிதைப் போட்டியில் இரவி இருமுறை பரிசு பெற்றுள்ளார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து இரவி ‘வளரும் கலைஞர்’ விருதினைப் பெற்றுள்ளார். கணினித்தமிழ்ச் சங்கம் மதுரையில் நடத்திய ‘கணிப்பொறித் திருவிழாவில் ‘தமிழும் அறிவியலும்’ என்ற தலைப்பில்லான கவிதைப் போட்டியிலும் இரவி பரிசு பெற்றுள்ளார். ‘இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் க.செல்வக்குமார் (பார்வையற்றவர்) ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் மு. பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ.சிவசங்கர் தமது ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டத்திற்காக ‘கவிஞர் இரா.இரவியின் ஹைகூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வேட்டினை ஒப்படைத்துள்ளார். 15-10-2015 அப்துல் கலாம் பிறந்த நாளன்று அருள்மிகு மீனாட்சி அரசினர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மூன்றிலும் பேசியதைப் பெருமையாகக் கருதுகின்றார் இரவி. ‘கவிதை உறவு’ ஆண்டு விழாவில் தெய்வத்திரு ‘கலைமாமணி விக்கிரமன்’ விருதை இரவிக்கு நீதியரசர் வள்ளிநாயகம் வழங்கியுள்ளார். கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் ‘எழுத்தோலை’ விருதைத் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் இரவிக்கு வழங்கியுள்ளார். ‘கவிதை உறவு’ மாநில அளவில் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘கவியமுதம்’ நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. 27-05-2017 அன்று செந்தமிழ்க் கல்லூரியில் நடந்த தனித்தமிழ்க் கவியரங்கில் கவி பாடியதற்கு செந்தமிழ் அறக் கட்டளையினர் இரவிக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர். 08-10-2017 அன்று சிவகாசியில் கந்தகப் பூக்கள் & நீல நிலா இணைந்து நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இரவிக்கு ‘ஹைக்கூ செம்மல்’ விருதினை வழங்கினர். 15-10-2017 அன்று புதுவையில் ‘மூவடி’, ‘மின்மினி’, ‘துளிப்பா’ இதழ்கள் இணைந்து நடத்திய துளிப்பா நூற்றாண்டு விழாவில் இரவிக்குத் ‘துளிப்பாச் சுடர்’ விருது வழங்கினர். கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் இரவியின் ‘ஹைக்கூ உலா’ நூல் மதிப்புறு பரிசைப் பெற்றுள்ளது. 29-07-2018 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில் அமைச்சர் க. பாண்டியராசன், கவிஞர் இரா.இரவிக்கு ‘பாரதி விருது’ வழங்கினார். கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலா ‘நூலில் உள்ள தன்னம்பிக்கை ஹைக்கூ’ கவிதைகள், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம்பெற்றுள்ளன. மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கவிஞர் இரா. இரவியின் ‘மனதில் ஹைக்கூ’ நூல் பாட நூலாக உள்ளது. ‘பொதிகை மின்னல்’ மாத இதழ் நடத்திய நூல்கள் போட்டியில் ‘ஹைக்கூ 500’ நூல் வென்றமைக்கு 20-10-2019 அன்று நடந்த ஆண்டுவிழாவில் மூவாயிரம் பொற்கிழியும் விருதும் வழங்கினார்கள். இரா. இரவியின் படைப்புகள் கவிதைச் சாரல் - 1997 ஹைக்கூ கவிதைகள் - 1998 விழிகளில் ஹைக்கூ - 2003 உள்ளத்தில் ஹைக்கூ - 2004 நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005 என்னவள் - 2007 இதயத்தில் ஹைக்கூ - 2007 கவிதை அல்ல விதை - 2010 மனதில் ஹைக்கூ - 2010 ஹைக்கூ ஆற்றுப்படை - 2010 சுட்டும் விழி - 2011 ஆயிரம் ஹைக்கூ – 2013 புத்தகம் போற்றுதும் - 2014 கவியமுதம் - 2014 ஹைக்கூ முதற்றே உலகு - 2015 வெளிச்ச விதைகள் - 2016 ஹைக்கூ உலா - 2017 கவிச்சுவை - 2018 ஹைக்கூ 500 - 2018 இறையன்பு கருவூலம் - 2019 இலக்கிய இணையர் படைப்புலகம் - 2019 ஏர்வாடியார் கருவூலம் -2019. உதிராப்பூக்கள்-2020. மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர் . தூத்துக்குடி ABCகல்லூரி முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ஜானு கவிஞர் இரா .இரவியின் "ஹைக்கூ முதற்றே உலகு "நூலை ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார் .

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை