சம்பாத்திய விவரம் என்பது பிரதிலிபியில் பல்வேறு வழிகளில் நீங்கள் பெற்ற சம்பாத்தியத்தை பற்றிய தகவல்களை வழங்குகிறது.
ஸ்டிக்கர்கள் மூலம் சம்பாதிப்பது:
ஒவ்வொரு முறை ஒரு வாசகர் உங்கள் படைப்பிற்கு ஸ்டிக்கர் கொடுத்து ஊக்குவிக்கும்போதும் 'என் சம்பாத்தியம்' பகுதியின் கீழ் சம்பாத்திய விவரங்களில் அதற்கான நாணயம் சேர்க்கப்படும்.
சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் மூலம் சம்பாதிப்பது:
ஒவ்வொரு முறை ஒரு வாசகர் சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தின் கீழ் உங்கள் ப்ரொபைலுக்கு சப்ஸ்கிரைப் செய்யும் போதும் 'என் சம்பாத்தியம்' பகுதியின் கீழ் சம்பாத்திய விவரங்களில் அதற்கான நாணயம் சேர்க்கப்படும்.
பிரதிலிபி ப்ரீமியம் மூலம் சம்பாதிப்பது:
பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்தின் கீழ் நீங்கள் எழுதி வரும் தொடர்கதைகளுக்கு அல்லது முடிவடைந்த தொடர்களுக்கு ஒரு வாசகர் சப்ஸ்கிரைப் செய்து அவற்றை வாசிக்கும் போது, பிரீமியம் சம்பாத்தியத்திற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள்.
ப்ரீமியம் தொடர், அந்த குறிப்பிட்ட மாதத்தில் வருவாய் ஈட்டியிருந்தால், அது குறித்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் 'சம்பாத்திய விவரம்' பகுதியில் பார்க்க இயலும்.
உங்கள் சம்பாத்தியத்தை பார்க்க:
ஆண்ட்ராய்டில் இருந்து:
-
முகப்பு பக்கத்தில் நாணயங்கள் ஐகானை க்ளிக் செய்யவும்
-
என் சம்பாத்தியம் பகுதியில் சென்று பார்க்கவும்
-
சம்பாத்திய விவரங்கள் பகுதியை க்ளிக் செய்யவும்