ஒவ்வொரு மாதமும் உங்கள் பிரதிலிபி சம்பாத்தியத்தை உங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, நீங்கள் சரியான வங்கிக் கணக்கை வழங்கியிருக்க வேண்டும்.
உங்கள் ப்ரொபைலில் வங்கிக் கணக்கைச் சேர்க்க,
ஆண்டிராய்டில் இருந்து:
-
முகப்பு பக்கத்தில் வலது மேற்புறத்தில் இருக்கும் நாணயங்கள் ஐகானை க்ளிக் செய்யவும்
-
என் சம்பாத்தியம் பகுதியில் சென்று பார்க்கவும்
-
சம்பாத்திய விவரங்கள் பகுதியை க்ளிக் செய்யவும்
-
"வங்கி கணக்கு விவரங்களை சேர்க்க" என்பதை க்ளிக் செய்து, வழிமுறைகளைப் பின்பற்றவும்.
நீங்கள் ஸ்டிக்கர்கள் மூலம் குறைந்தபட்சம் 1 INR மதிப்புள்ள நாணயங்களைப் பெற்றிருந்தால் மட்டுமே 'என் சம்பாத்தியம்' பகுதி தெரியும்.
உங்களது சம்பாத்தியம் 50 INR க்கும் மேல் வந்தபின்பே உங்களால் வங்கி கணக்கு விவரங்களை சேர்க்க முடியும். உங்கள் வங்கி விவரங்களைச் சேர்க்க மற்றும் திருத்த பிரதிலிபி செயலியில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஒருமுறை சரியான வங்கி கணக்கு விவரங்களை கொடுத்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் 'என் சம்பாத்தியம்' பகுதியில் தெரியும் சம்பாத்திய பணம் உங்கள் வங்கி கணக்கில் தானாகவே மாற்றப்பட்டுவிடும்.
பிரதிலிபி ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அதன் எழுத்தாளர்களுக்கு அவர்களின் சம்பாத்திய பணத்தை வழங்குகிறது. 'என் சம்பாத்தியம்' பகுதியின் உள்ளே, 'முந்தைய சம்பாத்தியம்' ஆப்ஷன் இருக்கும். இங்கே முந்தைய மாத சம்பாத்தியத்தின் நிலையை (status) காணமுடியும். பணம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டால், 'க்ரெடிடட்' என்று நிலை(status) மாறிவிடும்.