பிரதிலிபி ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அதன் எழுத்தாளர்களுக்கு அவர்களின் சம்பாத்திய பணத்தை வழங்குகிறது.
முந்தைய மாதத்திற்கான சம்பாத்தியமாக குறைந்தபட்சம் 50 INR பெற்றிருந்தால், அடுத்த மாத தொடக்கத்தில் அது உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு, 'ப்ராசஸிங்' எனும் சம்பாத்திய நிலைக்கு சென்றுவிடும்.
பிரதிலிபியில் உள்ள எங்கள் குழு, ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், சம்பாதிக்கும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சரியான முறையில் பணம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்கிறார்கள். இந்தச் சரிபார்ப்பு முடிந்ததும், எங்கள் நிதிக் குழு பணம் செலுத்தும் நடைமுறையைத் தொடங்குகிறது, மேலும் 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் பணப் பரிவர்த்தனை செயல்பாடுகள் முடிவடையும்.
பிரதிலிபியிடமிருந்து நீங்கள் பணம் பெற்றுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க:
-
கடந்த மாத சம்பாத்தியம் 'க்ரெடிடட்' என்று நிலையில் உள்ளதா என சம்பாத்திய விவரங்கள் பகுதியில் பார்க்கவும். அல்லது
-
Nasadiya Technologies இல் இருந்து டெபிட் செய்யப்பட்ட சம்பாத்தியத்திற்கான உங்கள் bank statement ஐ சரிபார்க்கவும்.
உங்கள் சம்பாத்தியத்தை நீங்கள் பெறவில்லை என்றால், பின்வரும் காரணங்களில் ஏதேனும் இருக்கலாம்:
-
நீங்கள் கொடுத்த வங்கி விவரங்களில் பிழை அல்லது
-
வங்கியின் சார்பில் இருந்து தொழில்நுட்ப சிக்கல்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எங்கள் சப்போர்ட் குழுவைத் தொடர்புகொள்ளவும். உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம், மேலும் 24 மணிநேரத்திற்குள் உங்கள் சிக்கலைத் தீர்க்க முயற்சிப்போம்.