பிரதிலிபி குறித்து :
பிரதிலிபி இந்தியாவின் மிகப்பெரிய கதைசொல்லும் தளம். பிரதிலிபி செயலி அல்லது தளம் உபயோகித்து உங்களது படைப்புகளை (கதை, கவிதை, புத்தகம், கட்டுரை, தொடர் முதலியன) எந்தவித கட்டணமும் இல்லாமல் இங்கே இலவசமாக பதிப்பிக்க இயலும். அதேபோல் 12 இந்திய மொழிகளில் இலவசமாக படைப்புகள் வாசிக்க இயலும்.
எங்கள் நோக்கம் அடுத்த 4 வருடங்களில் இணையம் உபயோகிக்கும் 40 கோடி இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் படைப்புகள் வாசிக்க பிரதிலிபியை ஒரு நுழைவாயிலாக மாற்றுவதே!
பிரதிலிபிஇலக்கியசெயலி - மொத்தம் 12 மொழிகளில், 300,000+ எழுத்தாளர்கள் மற்றும் 25,000,000+ மாதாந்திர வாசகர்கள் பிரதிலிபி இலக்கிய செயலியை உபயோகிக்கிறார்கள்.
பிரதிலிபியின் ஆடியோ கதைகளுக்கான ஆண்ட்ராய்டு செயலி - பிரதிலிபி FM. இதில் 10,000க்கும் அதிகமான ஆடியோ புத்தகங்கள், பாட்காஸ்ட்கள் (podcasts), நாட்டார் பாடல்கள் (folk songs) முதலியன இருக்கிறது. பிரதிலிபி FM-ல் மாதம் 300,000 நபர்கள் கதைகள் கேட்கிறார்கள். ஹிந்தி மொழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காமிக்ஸ் கொண்டது பிரதிலிபியின்காமிக்ஸ்செயலி. மாதம் 500,000 நபர்கள் அதில் வாசிக்கிறார்கள்.
பிரதிலிபி என்பதன் அர்த்தம் :
பிரதிலிபி என்பது சம்ஸ்கிருத வார்த்தை. 'பிரதி' என்றால் நகல். 'லிபி' என்றால் எழுத்துக்கள். நாம் எதை படிக்கிறோமோ அதன் நகலாகவே ஆகிறோம் என்பதே பெயர்க்காரணம். 'இலக்கியம் ஒரு சமூகத்தின் கண்ணாடி/நகல்' என்பதையும் குறிக்கும்.
எந்தெந்த மொழிகளில் பிரதிலிபியில் எழுதவும் வாசிக்கவும் முடியும்?
இங்கே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, உருது, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் இயலும். மற்ற இந்திய மொழிகளிலும் கூடிய விரைவில் பிரதிலிபி கால்பதிக்கும்.
நாங்கள் யார்?
நிறைய கனவுகள் கொண்ட 80 இளம் பொறியியலாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்கள் அடங்கிய குழுவே பிரதிலிபியை இயக்குகிறது. பிரதிலிபி அலுவலகம் பெங்களூரில் இருக்கிறது. எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மேம்பட்ட பிரதிலிபி தளத்தை உபயோகிக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பிரதிலிபியில் இணைவது எப்படி?
வாசகராக இருப்பின்: பிரதிலிபி ஆண்ட்ராய்டு செயலி அல்லது பிரதிலிபி தளத்தில் பதிவு செய்தாலே, எண்ணற்ற கதைகளை இலவசமாக வாசிக்க முடியும். உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களை ஃபாலோ செய்ய முடியும். அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் முடியும். இணையத்தொடர்பு இல்லாமல் வாசிக்க விரும்பினால், கதைகளை டவுன்லோட் செய்துகொண்டு வாசிக்க இயலும்.
எழுத்தாளராக இருப்பின்: பிரதிலிபி ஆண்ட்ராய்டு செயலி அல்லது பிரதிலிபி தளத்தில் பதிவு செய்து, 'எழுத' பொத்தானை (Pen icon) க்ளிக் செய்து படைப்புகள் பதிப்பிக்க இயலும். தினமும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு உங்கள் படைப்புகள் சென்றடைவதை பிரதிலிபி உறுதி செய்யும்.
ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?
எங்களைத் தொடர்புகொள்ளவும். எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு பதிலளிக்கும்.