சேவை விதிமுறைகள் :
சேவை விதிமுறைகளை முழுதும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.
தனியுரிமைக் கொள்கை :
சேவை விதிமுறைகளை முழுதும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.
பிரதிலிபியை உபயோகிப்பதற்கான பொது விதிமுறைகள்
பிரதிலிபியில் பதிவு செய்யும் எதுவாக இருந்தாலும் கீழே இருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரவேண்டும். பதிவு செய்வது என்பது பின்வரும் அனைத்தையும் குறிப்பது : பதிப்பிக்கப்படும் படைப்புகள், பதிப்பிக்கப்படும் விமர்சனங்கள், கலந்துரையாடலில் பகிரப்படும் கருத்துக்கள், பகிர்ந்துகொள்ளப்படும் குறுஞ்செய்திகள், ப்ரொபைலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர், ஆசிரியரைப் பற்றி இருக்கும் விவரங்கள், முகப்பு படம், படைப்பில் உபயோகிக்கப்படும் முகப்புப் படம் முதலியன.
பொது விதிமுறைகள்:
i. நீங்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் அதன் தொனி யாரையும் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. தனிப்பட்ட நபர் தாக்குதல்களோ அல்லது தளத்தில் யாருக்கேனும் தொல்லைகொடுப்பதோ செய்வது கூடாது. மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ii. காழ்ப்புணர்வோடு எதையும் பேசக் கூடாது. பாலினம், மதம், மொழி, நாடு, இனம், உடல் குறைகள், நோய்கள், ஜாதி, வயது, பாலியல் தேர்வு அல்லது வேறு ஏதேனும் அடிப்படையில் வெறுக்கத்தக்க வகையில் பேசுவது அனுமதிக்கப்படாது. மேல் கூறியவற்றை பெருமைப்படுத்தி பேசுவதும் பிரச்சனைக்கு வழிகோலும். எனவே அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
iii. தனியுரிமை மீறல் - பிறருடைய படைப்புகளை அவர் அனுமதி இல்லாமல், அவருக்கு தெரியாமல் தளத்தில் பகிரக்கூடாது.
iv. காப்புரிமை கொள்கை - ஒருவர் தன் ப்ரொபைலில் பதிப்பிக்கப்படும் அனைத்தும் அவருடைய படைப்பாகவே இருக்கவேண்டும். பிறருடைய படைப்பை பதிப்பிக்க அனுமதி இல்லை.
v. பாலியல் தொடர்பான படைப்புகள் பதிப்பிக்க அனுமதி இல்லை.
vi. சட்டவிரோதமான எதையும் தளத்தில் பதிவிட அனுமதி இல்லை.
vii. ஸ்பேம்களுக்கு அனுமதி இல்லை - விளம்பரங்கள், விளம்பர உள்ளடக்கம் கொண்ட படைப்புகள், பிறவற்றை நகலெடுத்து பதிவிடுவது, பின்னிணைப்புள்ள சுட்டிகள் ஆகியவை ஸ்பேம்களாக கருதப்படும்.
viii. தளத்தில் தானியங்கி நிரல்கள் (Automated programs) மூலமாகவோ, பிற நேர்மையற்ற வழிகளில் ஏதேனும் செய்வதுவோ அனுமதிக்கப்படாது.
ix. பணம் கொடுத்து வாசகர்களை அதிகப்படுத்தவது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை.
x. போலி கணக்குகள், ஆள்மாறாட்டம் போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை.
மேலே குறிப்பிட்ட ஏதேனும் விதிகளை மீறினால், கீழ் உள்ளவை நடக்கலாம் :
i. உங்கள் படைப்புகள் நிறைய பேரை சென்றடைவது தடுக்கப்படும்.
ii. உங்கள் கணக்கு நிரந்தமாக ப்ளாக் செய்யப்படும் அல்லது நீக்கப்படும்.
iii. பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் மேல் சட்டநடவடிக்கை எடுக்க இயலும்.
இதுபோன்ற தருணங்களில், விதி மீறல்கள் குறித்த இறுதி முடிவை பிரதிலிபி நிர்வாகமே எடுக்கும்.
காப்புரிமை கொள்கை
i. பிரதிலிபியில் பதிப்பிக்கப்படும் படைப்புகளின் காப்புரிமை அந்தந்த எழுத்தாளர்களையே சேரும். (படைப்பு அவர்களுடையதாக இருக்கும்பட்சத்தில்). படைப்புகளின் முழு உரிமை அவர்களையே சேரும். எழுத்தாளர்களின் அனுமதி இல்லாமல் யாரும் அவற்றை உபயோகிக்க இயலாது.
ii. எழுத்தாளர்கள் அவர்களின் சொந்தப் படைப்பையே பிரதிலிபியில் பதிப்பிக்க வேண்டும். அப்படியில்லாமல், பிறரது படைப்புகளை இங்கே பதிப்பிக்கும்பட்சத்தில், குறிப்பிட்டவரின் கணக்கை முடக்கும் உரிமை பிரதிலிபிக்கு உண்டு. அவர்மேல் சட்டநடவடிக்கை எடுப்பதும் நடக்கலாம்.
iii. பிரதிலிபியில் படைப்புகளை பதிப்பித்த பிறகும், அந்தப் படைப்பின் காப்புரிமை எழுத்தாளரையே சாரும். பிரதிலிபியில் பதிப்பிப்பதால் காப்புரிமை பிரதிலிபியை சேராது. தளத்தில் பதிப்பிக்கப்படும் எந்தப் படைப்பிற்கும் பிரதிலிபியிடம் காப்புரிமை இல்லை.
iv. பயனாளர்கள் பிரதிலிபியிலிருந்து படைப்புகள் நகலெடுத்து / திருடி பிற தளங்களில் பகிரக் கூடாது. இது எழுத்தாளர்களின் காப்புரிமையை மீறும் செயலாகும்.
பயனாளர்களை ரிப்போர்ட் செய்வது குறித்து
ஏதேனும் பயனாளர், தகாத மொழியில் பேசினால், பாலியல் சம்மந்தப்பட்ட படைப்புகளை எழுதினால், காப்புரிமை விதிகளை மீறி படைப்புகள் பதிப்பித்தால், உடனே அந்தப் ப்ரொபைலை ரிப்போர்ட் செய்ய கோருகிறோம். நீங்கள் ரிப்போர்ட் செய்த 72 மணி நேரத்திற்குள் தகுந்த நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். ஒரு பயனாளரை ரிப்போர்ட் செய்ய, அவர் ப்ரொபைலிற்கு சென்று வலதுபுறம் மேலே இருக்கும் 'மூன்று புள்ளிகளை' க்ளிக் செய்து ரிப்போர்ட் செய்யலாம்.
பிரதிலிபி தளத்தில் (Website) ஒரு பயனாளரை ரிப்போர்ட் செய்ய, குறிப்பிட்ட நபரின் ப்ரொபைலிற்கு சென்று வலதுபுறம் மேலே இருக்கும் '!' பொத்தானை அழுத்தி ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
படைப்புகளை ரிப்போர்ட் செய்வது குறித்து
ஏதேனும் படைப்பு / விமர்சனம் தகாத மொழியில் இருந்தால், காப்புரிமை விதிகளை மீறி பதிப்பிக்கப்பட்டிருந்தால், உடனே அந்தப் படைப்பை ரிப்போர்ட் செய்ய கோருகிறோம். நீங்கள் ரிப்போர்ட் செய்த 72 மணி நேரத்திற்குள், தகுந்த நடவடிக்கையை எடுப்போம். ஒரு படைப்பை ரிப்போர்ட் செய்ய, அந்தப் படைப்பின் பக்கத்திற்கு சென்று வலதுபுறம் மேலே இருக்கும் 'மூன்று புள்ளிகளை' க்ளிக் செய்து ரிப்போர்ட் செய்யலாம்.
பயனாளர் விவரங்களின் பாதுகாப்பு குறித்து
உங்கள் விவரங்கள் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. தனியுரிமைக் கொள்கைகளில் குறிப்பிட்டிருப்பது போல மட்டுமே பிரதிலிபி உங்கள் தனிப்பட்ட விவரங்களை கையாளும் / உபயோகிக்கும். மற்ற தேவைகளுக்கு உங்கள் அனுமதி இல்லாமல் அவற்றை பிரதிலிபி உபயோகிக்காது. மேலும் விவரங்களுக்கு தனியுரிமைக் கொள்கை பக்கத்திற்கு செல்லவும்.
என் கேள்வி இங்கே இல்லையெனில் என்ன செய்வது?
மேலும் சந்தேகங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 முதல் 72 மணி நேரத்திற்குள் உங்களது கேள்விக்கான பதில் அளிக்கப்படும்.