பிரதிலிபியில் யாரெல்லாம் பதிப்பிக்கலாம்?
படைப்புகள் பதிப்பிக்க விரும்பும் / தன் கருத்துக்களை பகிர விரும்பும் யார் வேண்டுமானாலும் பிரதிலிபியில் எழுதலாம். எழுத்தாளராகத் தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. பிரதிலிபியில் பதிவு செய்தால் (Sign up) மட்டுமே போதும், பின் எழுதத் தொடங்கலாம்.
பிரதிலிபியில் எவ்வாறு படைப்புகள் பதிப்பிப்பது?
கைபேசியில் படைப்புகள் பதிப்பிக்க :
i. கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பிரதிலிபி ஆண்ட்ராய்ட் செயலியை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். (கூகுள் க்ரோம் போன்ற மொபைல் ப்ரவுசர்களில் பதிப்பிக்க இயலாது. ஐபோன் செயலி இப்போதைக்கு இல்லை. கூடிய விரைவில் கொண்டு வருவோம். அதுவரை கணினி அல்லது லேப்டாப்பில் பிரதிலிபி தளம் சென்று பதிப்பிக்கலாம்).
ii. நீங்கள் தளத்திற்கு புதியராக இருந்தால், பதிவு செய்துகொள்ள வேண்டும். (கூகுள் அல்லது முகநூல் கணக்கு கொண்டு). ஏற்கனவே பதிவு செய்தவராக இருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு லாக் இன் செய்யவும். (முகநூல் மூலமோ, கூகுள் மூலமோ லாக் இன் செய்திருந்தால் அதன்மூலமே லாக் இன் செய்யவும்)
iii. லாக் இன் செய்தால் முகப்பு பக்கத்திற்கு செல்லும். பின், கீழ்வரிசையில் இருக்கும் ஐகான்களில் 'எழுத' என்றிருக்கும் பேனா ஐகானை க்ளிக் செய்யவும்.
iv. பின்னர் நீங்கள் எழுதப் போகும் வகையை (கதை, கவிதை, தொடர்) க்ளிக் செய்து, படைப்பை எழுத ஆரம்பிக்கலாம் அல்லது ஏற்கனவே எழுதிய படைப்பை காப்பி - பேஸ்ட் செய்யலாம்.
v. முடித்தவுடன், 'பதிப்பிக்க' பொத்தானை அழுத்தவும். அங்கே, படைப்பின் 'தலைப்பு' எழுதவும். எழுதிவிட்டு, 'உறுதிமொழியை' டிக் செய்ய வேண்டும். படைப்புக்கேற்ற முகப்பு படத்தையும் இங்கே சேர்க்கலாம்
vi. பின், 'அடுத்து' பொத்தானை க்ளிக் செய்து, படைப்புக்கேற்ற பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின், படைப்பை 'பதிப்பிக்க' வேண்டும். பதிப்பித்தால் மட்டுமே படைப்புகள் அனைத்து வாசகர்களுக்கும் தெரியும்.
கணினி அல்லது லேப்டாப்பில் பதிப்பிக்க :
i. http://tamil.pratilipi.com எனும் பிரதிலிபி தமிழ் தளத்திற்கு செல்லவும்
ii. நீங்கள் தளத்திற்கு புதியராக இருந்தால், பதிவு செய்துகொள்ள வேண்டும். (கூகுள் அல்லது முகநூல் கணக்கு கொண்டு). ஏற்கனவே பதிவு செய்தவராக இருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு லாக் இன் செய்யவும். (முகநூல் மூலமோ, கூகுள் மூலமோ லாக் இன் செய்திருந்தால் அதன்மூலமே லாக் இன் செய்யவும்)
iiii. லாக் இன் செய்தால் முகப்பு பக்கத்திற்கு செல்லும். பின், மேல்வரிசையில் இருக்கும் ஐகான்களில் 'எழுத' என்றிருக்கும் பேனா ஐகானை க்ளிக் செய்யவும்.
iv. க்ளிக் செய்தால் 'படைப்பை சேர்க்க' எனும் பொத்தான் வரும். அதனை க்ளிக் செய்து, படைப்பின் தலைப்பு, அதன் வகை ஆகியவற்றை எழுதி ‘அடுத்து’ கொடுத்தால் படைப்பை எழுதும் பக்கம் வரும்.
v. அங்கே உங்கள் படைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது காப்பி - பேஸ்ட் செய்யலாம். எழுதி முடித்த பின்னர், படைப்பிற்கு தகுந்த பிரிவை தேர்ந்தெடுத்து (அதிகபட்சம் 3 பிரிவுகள் தேர்ந்தெடுக்கலாம்), படைப்புக்கேற்ற முகப்பு படத்தையும் சேர்த்து பதிப்பிக்க வேண்டும்.
எழுத்தாளர் பகுதி
இந்தப் பக்கத்தில், நீங்கள் எழுதி பதிப்பிக்காமல் இருக்கும் வரைவுகள் (Drafts), பதிப்பித்தல் வழிகாட்டி, வலைப்பதிவுகள், முன்னணி எழுத்தாளர்களின் நேர்காணல்கள், மற்றும் போட்டிகள் பற்றிய விவரங்கள் இருக்கும். எழுத்தாளர் பகுதிக்கு செல்ல,
கைபேசி செயலியில் : முகப்பு பக்கத்திலிருந்து, கீழ்வரிசையில் இருக்கும் ஐகான்களில் 'எழுத' என்றிருக்கும் பேனா ஐகானை க்ளிக் செய்தால் செல்லலாம்.
தளத்தில் (Website) : முகப்பு பக்கத்திலிருந்து, மேல்வரிசையில் இருக்கும் ஐகான்களில் 'எழுத' என்றிருக்கும் பேனா ஐகானை க்ளிக் செய்தால் செல்லலாம்.
வரைவுகள்
நீங்கள் எழுதி பதிப்பிக்காமல் இருக்கும் படைப்புகள் அனைத்துமே வரைவுகளில் (Drafts) இருக்கும். வரைவுகளில் இருக்கும் படைப்புகள் உங்களுக்கு மட்டுமே தெரியும். வாசகர்களால் பார்க்க இயலாது. நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளை வரைவுகளில் வைத்துக் கொள்ளலாம்.
தமிழில் தட்டச்சு செய்ய
தமிழில் தட்டச்சு செய்ய,
1) தளத்தில் (Website) - பிரதிலிபி தளத்தில் தமிழில் தட்டச்சு செய்வது சுலபம். படைப்பை எழுதும் பக்கத்திற்கு சென்று, ஆங்கிலத்தில் 'Amma' என்று தட்டச்சு செய்தால் தமிழில் 'அம்மா' என்று வரும். ட்ரான்ஸ்லிட்டரேஷன் (Transliteration) in built ஆக இருக்கிறது. தனியாக தட்டச்சு செய்ய வேறு சாப்ட்வேர்கள் உபயோகிக்க வேண்டியதில்லை.
2) கைபேசி செயலியில் - நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் தமிழ் தட்டச்சு செயலியை உபயோகித்து, செயலியில் தமிழில் கதைகள் எழுதலாம். அப்படி எதுவும் இல்லையெனில், கூகுள் ப்ளேஸ்டோரில் 'Google indic keyboard' - ஐ டவுன்லோட் செய்து தட்டச்சு செய்யலாம். எப்படி என்பதை பார்க்க - https://www.youtube.com/watch?v=JpFcpchCPsg
கதை / கவிதை / கட்டுரை / தொடர் எழுதுவது எப்படி?:
செயலியில் படைப்புகள் பதிப்பிப்பதற்கு பார்க்க -
https://www.youtube.com/watch?v=KzRYOdxu06M&t=1s
பிரதிலிபி தளத்தில் படைப்புகள் பதிப்பிப்பதற்கு பார்க்க -
http://tamil.pratilipi.com/blog/how-to-self-publish-in-pratilipi
எழுதிய படைப்பை காணாமல் போனால் என்ன செய்வது?
i. படைப்பை 'நீக்க' பொத்தானை அழுத்தினால், படைப்பு முழுமையாக அழிந்துவிடும். அதன்பின் படைப்பை திரும்ப எடுக்க பிரதிலிபியினாலும் இயலாது.
ii. அரிதான தருணங்களில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படைப்புகள் காணாமல் போய்விட்டால் (எழுதிய படைப்பு empty ஆகிவிடும்) எங்களை மின்னஞ்சல் மூலமோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளவும். தொடர்புகொண்டால், படைப்பை திரும்ப எடுத்துத் தர முயற்சிப்போம்.
பதிப்பித்தல் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
பதிப்பிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், எப்போது வேண்டுமானாலும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
எழுதிய படைப்புகளை திருத்துவது எப்படி?
கைபேசி செயலியில் - 'எழுத' பக்கத்தில் உங்களது பதிப்பிக்கப்பட்ட படைப்புகள் மற்றும் வரைவுகள் இரண்டும் இருக்கும். வரைவுகளில் இருக்கும் படைப்பெனில், நீங்கள் திருத்த விரும்பும் படைப்பை க்ளிக் செய்து திருத்தி கொள்ளலாம். பதிப்பிக்கப்பட்ட படைப்பெனில், 'எனது விவரங்கள்' பகுதியில், 'படைப்புகள்' பொத்தானை க்ளிக் செய்யவும். அதில், படைப்புகளுக்கு நேராக இருக்கும், 'மூன்று' புள்ளிகளை க்ளிக் செய்து படைப்பை திருத்த வேண்டும்.
தளத்தில் (Website) - வரைவுகளில் இருக்கும் படைப்பை திருத்த வேண்டுமெனில், 'எழுத' பொத்தானை அழுத்தவும். பதிப்பிக்கப்பட்ட படைப்பை திருத்த, 'பக்கம்' பொத்தானை அழுத்தி உங்கள் ப்ரொபைலிற்கு செல்லவும். இரண்டிலும், குறிப்பிட்ட படைப்பை க்ளிக் செய்தால், 'திருத்த' பொத்தான் வரும். அதனை அழுத்தி படைப்பை திருத்திக் கொள்ளலாம்.
படைப்புகளை நிறைய வாசகர்கள் படிக்க என்ன செய்வது?
பிரதிலிபியின் பரிந்துரை (Recommendation system) செய்யும் கருவி, உங்கள் படைப்பை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும். உங்கள் படைப்பு வாசகர்களுக்கு எந்தளவு பிடிக்கிறது என்பதை பொறுத்து, அதற்கேற்றபடி மேலும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும். படைப்புகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்க, உங்கள் தரப்பிலிருந்து செய்ய வேண்டியது :
i. படைப்புகளை பிழைகளில்லாமல் எழுதவேண்டும். படைப்புக்கு ஏற்ற முகப்பு படம் சேர்க்க வேண்டும். படைப்புக்கேற்ற பிரிவையும் தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றை சரியான முறையில் செய்தால், எங்களது பரிந்துரை கருவி உங்கள் படைப்பை சரியாக கொண்டு சேர்க்கும்.
ii. படைப்பை உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பகிர்ந்து நிறைய வாசகர்களை பெறுங்கள்.
போட்டிகளில் பங்கேற்பது எப்படி?
தொடர்ச்சியாக பிரதிலிபியில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். தற்போது நடந்துகொண்டிருக்கும் போட்டியை பார்க்க, 'எழுத' பகுதிக்கு சென்று 'எழுத்துப்போட்டி' எனும் தலைப்பின் கீழ் பார்க்கலாம்.இதுவரை நடந்த போட்டிகளை பார்க்க, 'மேலும்' பகுதிக்கு சென்று 'போட்டிகள்' பகுதியை க்ளிக் செய்து பார்க்கலாம்.
போட்டி வெற்றியாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எல்லா போட்டிகளுக்கும், வெற்றியாளர்களை இரண்டு முறையில் தேர்ந்தெடுப்போம். (சில நேரம் போட்டிகளின் இயல்பை பொறுத்து இது மாறும்.) அவை :
i) நடுவர் தேர்வு : இதில் போட்டிக்கு வந்த படைப்புகளை அதன் தரத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் முறை. படைப்பை பிழையின்றி எழுதுவது, கதையின் போக்கு, தலைப்புக்கேற்ற படைப்பாக இருக்கிறதா, படைப்பது தனித்துவமாக இருக்கிறதா என்பதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பிரபல எழுத்தாளர்கள் / பிரதிலிபி குழு ஆகியோர் போட்டியை பொறுத்து நடுவராக செயல்படுவார்கள். (போட்டிகளில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பிரதிலிபி குழுவிற்கே இருக்கும்)
ii) வாசகர் தேர்வு : வாசித்தவர்கள் அடிப்படையில் தேர்வு செய்யும் முறை. படைப்பை எத்தனை பேர் வாசித்திருக்கிறார், வாசிக்க ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வழங்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுப்பது. இது முழுக்க முழுக்க கணக்கீட்டின் அடிப்படையில் செய்வது. (படைப்பில் நிறைய பிழை இருப்பது, காப்பிரைட் சம்மந்தப்பட்ட பிரச்சனை, கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் இல்லாதது போன்ற சில தருணங்களில் படைப்பை வெற்றி பெற்ற பட்டியலில் இருந்து நீக்க பிரதிலிபி குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது.)
காப்புரிமை என்பது என்னது?
பிரதிலிபியில் பதிப்பிக்கப்படும் ஒவ்வொரு படைப்புகளின் காப்புரிமையும் அந்த எழுத்தாளரையே சாரும். ஒரு படைப்பின் காப்புரிமை உரிமையாளர் (copyright owner) தனது படைப்புகளை எந்த வகையில் பயன்படுத்துவதற்கும், அவரது அனுமதியின்றி மற்றவர்கள் அதை உபயோகிப்பதை தடுப்பதற்கும் முழு உரிமை உண்டு.
குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்கீழ் (Terms and conditions), காப்புரிமை உரிமையாளர் தனது படைப்பின் காப்புரிமை முழுவதையும் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் (assignee) மாற்றலாம்.
1. முழு காப்புரிமை கொடுப்பது - இதில் எழுத்தாளர் படைப்பின் முழு காப்புரிமையையும் மூன்றாம் நபருக்கு கொடுக்கிறார். அப்படி கொடுக்கும்போது அவர் அந்தப் படைப்பை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
2. பகுதி காப்புரிமை கொடுப்பது - இதில் எழுத்தாளர் பகுதி (குறிப்பிட்ட) காப்புரிமையை மட்டுமே மூன்றாம் நபருக்கு கொடுக்கிறார். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட ஊடகத்திற்கு மட்டும் (உதாரணம் - ஆடியோவாக மாற்றுவதற்கு மட்டும்) அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மட்டும் (உ.தா - இந்தியாவிற்கு மட்டும்) அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மட்டும் (உ.தா. - மொழிபெயர்ப்பிற்கு மட்டும்). எழுத்தாளர் தன் படைப்பின் வெவ்வேறு உரிமைகளை வெவ்வேறு நபர்களுக்கு வழங்க முடியும்.
பின் வரும் பகுதியில், பகுதி காப்புரிமை கொடுப்பதில் உள்ள சிக்கல்களை விரிவாக பார்க்கலாம் :
1. வடிவத்திற்கான கட்டுப்பாடு
ஒப்பந்தத்தில், எழுத்தாளர் தன் படைப்பின் எந்த உரிமையை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்குவது என்று முடிவு செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆடியோ உரிமை மட்டும், திரைப்படமாக்கும் உரிமை மட்டும், புத்தக பதிப்புரிமை மட்டும் முதலியன. மேலும் எந்த மொழியில் இந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம்.
2. இது யாருக்கு ஒதுக்கப்படலாம் என்பதற்கான கட்டுப்பாடு (பிரத்யேக உரிமை)
காப்புரிமை கொடுக்கும்போது, எழுத்தாளர் அதனை பிரத்யேகமாக ஒருவருக்கு மட்டும் கொடுக்கலாமா அல்லது அவருக்கு கொடுத்தது போல் வேறு நிறுவனங்களுக்கும் கொடுக்கலாமா என்பதை முடிவு செய்யலாம்.
3. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தேசத்திற்கோ அல்லது பிரதேச எல்லைக்கோ மட்டும் என வரையறை செய்து கொள்ளலாமா?
குறிப்பிட்ட தேசத்திற்கோ அல்லது பிரதேச எல்லைக்கோ வரையறை செய்வதுபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிட, இரு தரப்பினரும் பேசி முடிவு செய்துகொள்ள முடியும்.
4. ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருக்க வேண்டுமா?
ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருக்கவேண்டுமா அல்லது வாழ்நாள் முழுமைக்குமானதா என்பதை இரு தரப்பினரும் பேசி ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். ஒப்பந்தத்தில் இருந்து பாதியில் வெளியேறுவது குறித்த உரிமையை எழுத்தாளர்கள் கவனமாக படித்துப் பார்க்க வேண்டும்.
5. ஒப்பந்தம் முடிந்த பிறகு எழுத்தாளர் அதனை நீட்டிக்காவிட்டால் என்ன ஆகும்?
ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடத்திற்குள் எழுத்தாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் ஒப்பந்தம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும். ஆனாலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்பட்சத்தில் நிறைய காலத்திற்கு நீட்டிக்கப்படும்படி ஒப்பந்தத்தில் குறிப்பிட இயலும்.
6. பரிவர்த்தனையில் கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படும்?
பரிவர்த்தனை இலவசமானதா அல்லது பணம் செலுத்தும்படி இருப்பதா என்பதை இரு தரப்பினரும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். பணம் செலுத்தும்படி இருப்பின், மொத்தமாக ஒரே முறை செலுத்தப்படுவதா அல்லது வருவாயில் ஏதேனும் பங்கு (Share) வருவதுபோல் இருப்பதா அல்லது இரண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும்.
7. ஒப்பந்தத்தில் இருந்து எழுத்தாளர் விலகிக் கொள்ள முடியுமா?
ஒப்பந்தத்தில் அதற்கு இடமிருந்தால் விலகிக் கொள்ளலாம். அதற்கு ஒப்பந்தத்தில் இடமில்லையெனில், ஒப்பந்த காலம் முடியும்வரை விலக முடியாது.
ஒரு தரப்பினருக்கு வழங்கிய பின்னர் மற்றொரு தரப்பினருக்கு ஆடியோ விநியோக உரிமையை வழங்க முடியுமா?
முதல் தரப்பினருடனான உங்கள் ஒப்பந்தத்தில், ஆடியோ உரிமைகளின் விநியோகம் அவர்களின் தளத்திற்கு பிரத்யேகமானதா (exclusive) இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். அவை பிரத்யேகமானவை என்றால், அவை பிரத்யேகமாக இருக்கும் கால அளவை (time period) சரிபார்க்க வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட கால அளவு முடிந்த பின்னரே, பிற தரப்பினருக்கு ஆடியோ விநியோக உரிமைகளை நீங்கள் வழங்க முடியும்.
எந்த தரப்பினருக்கும் / நிறுவனத்திற்கும் பிரத்யேக உரிமைகளை வழங்கலாமா?
இது நீங்கள் போடும் ஒப்பந்தத்தைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, உங்கள் படைப்பிற்கு நீங்கள் பணம் பெறுகிறீர்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு படைப்பை பிரத்யேகமாக கொடுக்க முடிவு செய்யலாம். ஆனால் நீங்கள் பணம் பெறவில்லை எனில், பிரத்யேகமாக கொடுக்காமல் இருப்பது நல்லது. இதன்மூலம் உங்கள் படைப்பை மற்ற தளங்களுக்கும் கொடுக்க முடியும்.
உங்கள் படைப்பிற்கான உரிமைகளை வழங்கும்போது மேலே உள்ள எல்லா விஷயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும், உங்கள் படைப்பு நிறைய வாசகர்களை / பயனாளர்களை சென்று சேருவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதேபோல், எந்தவொரு தரப்பினருடனான விதிமுறைகளும் நிபந்தனைகளும் (terms and conditions) அதனைச் செய்ய உங்களைத் தடுக்கவில்லை என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பிரதிலிபி அனுமதி வாங்கி ரெக்கார்ட் செய்த ஆடியோ கதைகளின் காப்புரிமை விவரங்கள் என்ன?
பிரதிலிபியின் ஆடியோ கதைகளுக்கான உரிமை குறிப்பிட்ட எழுத்தாளரையே சாரும். உங்கள் படைப்பின் - ஆடியோவின் காப்புரிமை உங்களிடமே இருக்கும். நாங்கள் உங்களிடம் அனுமதி வாங்கி அதனை ஆடியோவாக மாற்றுகிறோம் அவ்வளவே. உங்கள் படைப்பை வாசிப்பதுபோல, படைப்பை கேட்க விரும்பும் வாசகர்களுக்காக இதனை செய்கிறோம்.
உங்களிடம் அனுமதி வாங்கிய பிறகு, அதனை ஸ்டூடியோவிற்கு அனுப்பி, தொழில்முறை voice artist வைத்து அதனை ரிக்கார்ட் செய்வோம். பின் அதனை பிரதிலிபி தளத்தில் பதிவேற்றுவோம். பிரதிலிபியில் இருக்கும் ஆடியோ கதைகள் பிரத்யேகமானது (Exclusive) அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். (உங்கள் படைப்பை நாளை வேறொருவர் வந்து ஆடியோவாக மாற்ற கேட்டாலோ, அல்லது திரைப்படமாக மாற்றக் கேட்டாலோ அதனை அனுமதிப்பதற்கான முழு உரிமையும் எழுத்தாளரான உங்களையே சாரும்.)
என் கேள்வி இங்கே இல்லையெனில் என்ன செய்வது?
மேலும் சந்தேகங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 முதல் 72 மணி நேரத்திற்குள் உங்களது கேள்விக்கான பதில் அளிக்கப்படும்.