pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Reading

முகப்பு பக்கம்

முகப்பு பக்கத்தில், நீங்கள் வாசிக்கத் தொடங்கி பாதியில் விட்ட படைப்புகளை 'வாசிப்பை தொடர' எனும் தலைப்பின்கீழ் பார்க்கலாம். 'உங்களுக்காக' எனும் தலைப்பின்கீழ் உங்களுக்கு பிடித்த வகைகளில் (நீங்கள் தேர்ந்தெடுத்தது) படைப்புகளை பார்க்கலாம்.

பிடித்த வகைகள் தேர்ந்தெடுப்பது

உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் வாசிக்க விரும்பும் வகைகளை விருப்பத்திற்கேற்ப மாற்றி, முகப்பு பக்கத்தில் அந்த வகைமைகளில் படைப்புகளை பெறலாம். அதற்கு,

i. செட்டிங்ஸ் பக்கத்தில் 'பிடித்த வகைகள்' ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

ii. அதில் உங்களுக்கு எந்தெந்த வகைகள் முகப்பு பக்கத்தில் பார்க்க வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது அவற்றை மாற்றியும் கொள்ளலாம்.

எழுத்தாளரை ஃபாலோ செய்தல்

பிரதிலிபியில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களை நீங்கள் ஃபாலோ செய்துகொள்ளலாம். முக்கியமாக ஏதேனும் தொடர்கதைகள் படித்துக் கொண்டிருந்தால், அடுத்தடுத்த பாகங்களை வாசிக்க அந்த எழுத்தாளரை ஃபாலோ செய்து கொள்ளவும். அப்படி ஃபாலோ செய்தால், குறிப்பிட்ட எழுத்தாளர் படைப்பு பதிப்பிக்கும்போது உங்களுக்கு அறிவிப்பு வரும்.

மேலும், ஒருவரை ஃபாலோ செய்தால், தனிப்பட்ட முறையில் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப இயலும். அவரிடமிருந்து அறிவிப்புகள் வேண்டாமெனில், எப்போதுவேண்டுமானாலும் அவரை அன்ஃபாலோ செய்துகொள்ளலாம். 

இணையத்தொடர்பு இல்லாமல் வாசித்தல்

பிரதிலிபியில் படைப்புகளை டவுன்லோட் செய்துகொண்டு அவற்றை இணையத்தொடர்பு இல்லாமல் வாசிக்க இயலும். அப்படி செய்ய,

i) வைஃபை அல்லது தொலைபேசியின் இணையத்தொடர்பை உபயோகித்து பிரதிலிபி செயலிக்குள் செல்லவும்.

ii) படைப்பு பக்கத்திற்கு சென்று, படிக்க பொத்தானுக்கு அருகே இருக்கும் 'டவுன்லோட்' ஐகானை க்ளிக் செய்தால் படைப்பு டவுன்லோட் ஆகிவிடும்.  

iii) 'வகைகள்' பகுதிக்கு சென்றும்,  'டவுன்லோட்' பொத்தான் அழுத்தி படைப்புகளை தரவிறக்க முடியும்.

iv) டவுன்லோட் செய்த படைப்புகள், 'என் நூலகம்' பகுதியில் தெரியும். அதில் 'அலைபேசியில்' எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் தரவிறக்கப்பட்ட படைப்புகளை காணலாம்.

பி.கு: பிரதிலிபி தளத்தில் (Website) ஆப்லைனில் (Offline) வாசிக்க இயலாது.செயலியில் மட்டுமே வாசிக்க இயலும்.

நைட் மோட்

செயலி மற்றும் தளத்தில் படைப்புகளை நைட் மோடில் வாசிக்கலாம். நைட் மோடில் வாசிக்க,

i) செயலியில் படைப்பு வாசிக்கும்போது, ஒருமுறை ஸ்க்ரீனை தொட்டால் நைட் மோடை செயல்படுத்தும் வசதி வரும். அதனை ஆன் செய்து, நைட் மோடில் வாசிக்கலாம்.

ii) தளத்தில் படைப்பு வாசிக்கும் பக்கத்தில், 'செட்டிங்ஸ்' பொத்தானை க்ளிக் செய்தால் 'பின்னணி வண்ணம்' எனும் வசதி இருக்கும். அதில் நடுவில் இருப்பதே நைட் மோட் வசதி.

படைப்புகளை தேட

நீங்கள் வாசிக்க விரும்பும் எழுத்தாளர்களையும், படைப்புகளையும் பிரதிலிபியில் தேடி எடுக்கலாம். பிரதிலிபி செயலி - தளம் இரண்டிலும், தேடல் பொறி மேலே இருக்கும். தமிழில் தேடினால் படைப்புகளை சுலபமாகவும், துல்லியமாகவும் பெற முடியும். ஆங்கிலத்தில் தேடினால், தேடல் முடிவுகள் துல்லியமாக இருக்காது.

நீங்கள் தேடும் படைப்பு கிடைக்கவில்லையெனில், கீழே இருப்பதில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கும்

1) படைப்பின் - எழுத்தாளரின் பெயரை குறிப்பிட்டதில் எழுத்துப்பிழை இருக்கலாம். எனவே பெயரை வேறு வேறு வகையில், இரண்டு சொற்கள் இருந்தால் பாதி பாதியாக பிரித்து தேடிப் பார்க்க பரிந்துரைக்கிறோம்.

2) எழுத்தாளர் அந்தப் படைப்பை பிரதிலிபியில் இருந்து நீக்கியிருக்கலாம். 

3) நீங்கள் தேடும் படைப்பு பிரதிலிபியில் இல்லாமல் இருக்கலாம்.

4) சில நேரம் அது தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். அதுகுறித்த கேள்விகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்

படைப்புகளை நூலகத்தில் சேர்த்தல்

ஏதேனும் படைப்பு பிடித்திருந்தது, அப்போது வாசிக்க நேரமில்லை அல்லது பிறகு வாசிக்கலாம் என முடிவு செய்தால் அதனை நூலகத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு படைப்பை நூலகத்தில் சேர்ப்பது/நீக்குவது இரண்டையும் படைப்பு பக்கத்தில் உள்ள நூலகம் பொத்தானை உபயோகித்து செய்யலாம். அதேபோல், ‘வகைகள்’ பகுதியில் இருக்கும் படைப்புகளையும், படைப்புக்கு நேராக இருக்கும் 'மூன்று புள்ளிகளை' உபயோகித்து நூலகத்தில் சேர்க்கலாம். 

தளத்தில் (Website), படைப்பின் அருகே இருக்கும் ‘+’ மார்க்கை உபயோகித்து படைப்புகளை நூலகத்தில் சேர்க்கலாம்.  

கலெக்சன்

செயலியில் மட்டும் உள்ள வசதி: 

நீங்கள் வாசிக்கும் படைப்பு பிடித்திருந்தது, அதனை மற்ற வாசகர்களும் வாசிக்கவேண்டுமென விரும்பினால், அந்தப் படைப்பை கலெக்சனில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு படைப்பை உங்கள் கலெக்சனில் சேர்க்க படைப்பு பக்கத்தில் உள்ள கலெக்சன் பொத்தானை உபயோகித்து செய்யலாம். புதிய கலெக்சனை உருவாக்குவதும் செய்யலாம். உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய கலெக்சன்களை பார்க்க முடியும். 'நிர்வகிக்க' பொத்தானை அழுத்தி, உங்கள் கலெக்சனை நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். 

சமீபத்தில் வாசித்தவை

செயலியில் மட்டும் உள்ள வசதி: 

நீங்கள் பிரதிலிபியில் வாசித்த படைப்புளின் பட்டியலை, நூலகம் பகுதியில் உள்ள 'சமீபத்தில் வாசித்தவை' தலைப்பின்கீழ் பார்த்துக்கொள்ளலாம். 

வாசிப்பு விவரம்

செயலியில் மட்டும் உள்ள வசதி:

உங்கள் ப்ரொபைலில் கடைசியில் சென்றால், நீங்கள் செயலியில் இதுவரை எவ்வளவு சொற்கள் வாசித்துள்ளீர்கள். எத்தனை விமர்சனம் செய்துள்ளீர்கள் போன்ற விவரங்களை அறியலாம்.  

என் கேள்வி இங்கே இல்லையெனில் என்ன செய்வது :

மேலும் சந்தேகங்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 முதல் 72 மணி நேரத்திற்குள் உங்களது கேள்விக்கான பதில் அளிக்கப்படும்.