'மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்' நாவல் மூலமாக எழுத்துப்பயணம் தொடங்கிய ஆண்டு 2010. இதுவரை 20 நாவல்கள் மற்றும் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. 'கண்ணாமூச்சி', 'உன்னிடம் மயங்குகிறேன்', 'வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே' ஆகிய நாவல்கள் ராணிமுத்து இதழிலும், 'காதல் வரம்' தொடர் ராணி இதழிலும் வெளி வந்திருக்கிறது. இதைத்தவிர பதிப்பகங்களில் 'சித்ராங்கதா', 'என்னைக் கொண்டாடப் பிறந்தவளே', 'இதயம் ஒரு கண்ணாடி', 'அத்தை மகனே என் அத்தானே' ஆகிய நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது ப்ளாகில் நாவல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறேன்.
இதைத்தவிர பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகளையும் நாவல்களையும் எழுதி வருகிறேன். எனது படைப்புக்களை பற்றிய உங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எனது மற்ற கதைகளை www.tamilmadhura.com ல் படிக்கலாம்.