நனையத்தான் ஆசைப்பட்டேன் அதென்னவோ எனது வானில் மட்டும் கருமேகங்களுக்கு இடமில்லை போலும்.... அன்பும் அரவணைப்பும் கொடுத்தே பழகியதால் பெறுவதை பற்றி யோசிக்காமலே போய்விட்டேன்... நனையவேண்டும் என எண்ணும்போது மழையில்லாமலேயே போனது தான் மறுக்கமுடியாத உண்மை..... அப்படியே தூவானம் அவ்வப்போது பொழிந்தாலும் உஷ்ணத்தையே உண்டாக்கிவிடுகிறது..... பல நேரங்களில் பொய் மழையாகவும், பல நேரங்களில் துரோக மழையாகவும் பொழிந்துகொண்டு தான் உள்ளது.... உண்மைக்கு இடமில்லாத தேசத்தில் காண்பதெல்லாம் கானல் நீராகவே போகின்றது.... அழகான சிலைவடித்த சிற்பி கண்திறக்க மறந்தான், வாங்கிச்சென்றவனோ கண்கள் மூடியதாக எண்ணிக்கொண்டு தினசரி ஊசிக்கொண்டு திறந்துப்பார்த்தான், கண்களில் கண்ணீருக்கு பதில் ரத்தம் வடிவதை பார்த்தவனோ மருந்தென எண்ணி மணலை கொட்டி அடைத்தான்.... ஒருகட்டத்தில் உயிர் வந்து சிலை அசைந்தது உலகை காண முடியாமல் மீண்டும் மரமென நின்றது செயலிழந்து..... எங்களுக்கு அன்பெனும் மழையும் வேண்டாம், அனாதையாய் அலையவிடவும் வேண்டாம்.... உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதைகளை மட்டும் இடுங்கள் செழித்து வளரட்டும் விருட்சம் அப்போது பெய்யட்டும் அன்பென்ற மழை அது வரை வேண்டாம் இந்த கருவேல மரங்கள் மழைகள்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்