pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நிலையான சம்பாத்தியம் பெற 10 வழிகள்

08 ஜனவரி 2024

நிலையான சம்பாத்தியம் பெற 10 வழிகள் :

 

1. ஈர்க்கும் படைப்புகள் : உங்கள் ப்ரொஃபைலில் எப்போதும் நீண்ட தொடர் எழுதுவதை உறுதிசெய்யவும்!  ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது 1000 சொற்களைக் கொண்டுள்ள 100+ பகுதிகளைக் கொண்ட நீண்ட தொடர்கள், சிறப்பாக செயல்படுவதை எங்களது தரவு தெரிவிக்கிறது. வாசகர்களை கவரும் வகையில் உங்கள் பிரீமியம் தொடர்களை தொடர்ந்து விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

2. பதிப்பிப்பதில் நிலைத்தன்மை: பிரதிலிபி எனக்கு வாசகர்களைத் தருகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க நான் படைப்பை  வெளியிட்ட பிறகு காத்திருக்க வேண்டுமா? இல்லவே இல்லை. பிரதிலிபியில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் உள்ளனர், அவர்களுக்கு ஏராளமான தொடர்கள் உள்ளன. எனவே,  வாசகர்களின் ஆர்வத்தைத் தக்கவைக்க தொடர்ந்து அத்தியாயங்களை  வெளியிட்டாலே போதுமானது.  உங்கள் தொடரின் பார்வையை அதிகரிக்க வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று பகுதிகளை வெளியிட வேண்டும்.

3. ஒரு பழக்கத்தை உருவாக்குங்கள்: தினசரி 30-45 நிமிடங்கள் எழுதும் வழக்கத்தை உருவாக்கவும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் 800-1000 வார்த்தைகள் இருப்பதை உறுதிசெய்யவும்.

4. வாசகருக்குப் பிடித்த தீம்களைப் பயன்படுத்தவும்: காதல், நாடகம், சஸ்பென்ஸ், திகில், க்ரைம்-த்ரில்லர் போன்ற பிரபலமான தீம்களைத் தேர்வு செய்யவும், இவை வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படும் தீம்கள். 

5. 'சூப்பர் ரைட்டர் விருது' போட்டியில் பங்கேற்கவும்: உங்கள் வருவாயை அதிகரிக்க, போட்டியில் கலந்துகொண்டு ஈர்க்கும்படியான நீண்ட தொடர்களை எழுதுங்கள். இந்த நடைமுறையானது ஒரு காலக்கெடுவுக்குள் சிறந்த நீண்ட தொடர்களை எழுதும் பழக்கத்தை உருவாக்கும், இதன் மூலம் உங்கள் எழுதும் வேகம் அதிகரிக்கலாம்.

6. அத்தியாயத்தின் நீளம் மற்றும் சுவாரஸ்ய முடிவு: ஒவ்வொரு பகுதியையும் அழுத்தமான அல்லது சுவாரஸ்யமான இடத்துடன்  முடிக்கவும், இது அடுத்த பகுதியை திறக்க வாசகர்களை ஊக்குவிக்கவும். பூட்டப்பட்ட பாகங்கள் தரமான மதிப்பை வழங்குகின்றன என்பது உறுதியானால் , வாசகர்கள் அவற்றை திறக்க ஆர்வமாகவும் இருப்பார்கள்.

7. சப்ஸ்கிரிப்ஷனை ஊக்குவிக்கவும்: உங்கள் தொடருக்கான தடையில்லா அணுகலைப் பெற வாசகர்களை சப்ஸ்கிரைப் செய்யும்படி அறிவுறுத்தவும் . ஒரு நீண்ட தொடரை எழுதுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் என்றால், பூட்டப்பட்ட பகுதிகளை வாசிப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்யுமாறு உங்கள் வாசகர்களிடம் நீங்கள் நிச்சயம் வேண்டுகோள் விடுக்கலாம். இது உங்கள் எழுத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்ட உதவும். உங்கள் கடின உழைப்பு மற்றும் உங்கள் தொடரின் பின்னால் உள்ள விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களை ஆதரிக்க உங்கள் வாசகர்களை உணர்ச்சிபூர்வமாக ஊக்குவிக்கும்.

 8. விளம்பர முயற்சிகள்: உங்கள் முடிவடைந்த மற்றும் நடந்துகொண்டிருக்கும் பிரீமியம் தொடர்களை தொடர்ந்து விளம்பரப்படுத்த, பிரதிலிபியின் போஸ்ட் அம்சம், செய்திகள் அம்சம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். புதிய வாசகர்களை ஈர்க்கும் வகையில்  சமூக ஊடகங்கள் அல்லது பிற தளங்களையும் பயன்படுத்தவும்.

 9. வாசகர் தொடர்பு: கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கவும், விவாதங்களில் ஈடுபடவும் மற்றும் உங்கள் கதைசொல்லலை மேம்படுத்த வாசகர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவும். இது அவர்களுடன் வலுவான உறவை உருவாக்கவும், உங்கள் தொடருக்கான ஈடுபாடு மற்றும் ஆதரவை அதிகரிக்கவும் உதவும்.

 10. புதிய சீசன்கள் : உங்களது அதிகம் வாசிக்கப்பட்ட தொடருக்கு அடுத்த சீசனை நிச்சயம் எழுதலாம். வாசகர்கள் அதை விரும்புகிறார்கள். உங்கள் தொடரின் பிரபல கதாபாத்திரங்களை புதிய தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தலாம்.

 →  நீங்கள் நீண்ட தொடரை எழுத ஆயிரக்கணக்கான தலைப்புகள்/கதைக்கருக்கள் உள்ளன. மக்களின் நடத்தை மற்றும் உங்கள் சொந்த அனுபவங்களைக் கவனித்து உங்களைச் சுற்றியுள்ள உலகில் உத்வேகத்தைத் தேடுங்கள். யோசனைகள், அறிவுறுத்தல்கள், தலைப்புகள், ஒன்-லைனர்கள் போன்றவற்றைப் பெற இணையத்தையும் பயன்படுத்தலாம். 

→ கவனிக்க :

உங்கள் 16+ பாகங்கள் கொண்ட தொடர் இதுவரை ப்ரீமியத்தில் இணையவில்லை என்றால், கீழ் உள்ள வழிகளைப் பின்பற்றவும் :

(1) உங்கள் தொடரின் பிரதான பக்கத்திற்கு செல்லவும். 

(2) மற்ற விவரங்களை திருத்த என்ற ஆப்ஷனை சொடுக்கவும். 

(3) இந்தப் பக்கத்தில் சப்ஸ்கிரிப்ஷன் ஆம், இல்லை என வழங்கப்பட்டிருக்கும். 

(4) அதில் 'ஆம்' என்பதை தேர்வு செய்து உங்கள் தொடரை சப்ஸ்கிரிப்ஷனில் இணைக்கவும்.  

 

→ Understand different points in detail by clicking on it: (ஆங்கிலத்தில் மட்டும்) 

1. Why does Pratilipi ask authors to write long series?

2. How to develop a plot idea into a long series?

3. How to develop characters and sub-plots?

4. How to create an interesting series in Genre of Love?

5. How to write an interesting series in Family drama, Social, and Women's themes?

6. How to write an interesting series with Mystery, Fantasy, and Horror themes?

7. How to write an interesting Thriller series?

8. Understanding Point of view, Events - their sequence and Plot holes in series writing.

9. Understanding Parts and Scene writing.

10. Understand the style of dialogue writing and and first part.

11. What is a hook and plot twist? How to use it? and How to end the series.

12. How to write different emotions?

13. Analysis of Popular Series and their parts

14. How to attract readers?

15. How to make a writing schedule?

16. Common problems while writing and their solutions (blocks/stress/time)

17. Benefits of successfully writing a long series