pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

80 பாகங்கள் எழுதும் மைல்கல்லை எட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

01 ஏப்ரல் 2024

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

 

உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது!

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6’ இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 80 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம்.

 

ஒருவர் 80 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து  திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல.

 

வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 80 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர் 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப்  பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

 

நமது தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால்  எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

 

உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும்  இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்!

 

நாங்கள் உறுதியளித்தபடி, 80 பாகங்கள் கொண்ட கதையை எழுதி நிறைவு செய்யும் எல்லா எழுத்தாளர்களுக்கும் பிரதிலிபியின் மதிப்புமிக்க ராஜபத்திர பட்டய சான்றிதழ் வழங்கப்படும்.

 

இப்போட்டியில் 80 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்-

படைப்பின் பெயர் எழுத்தாளர் பெயர்
கூடுவிட்டு கூடு வந்து காரை ஆடலரசன்
உன் சர்வமும் சர்வாதிகாரியும் நானே Sona Jeeva
மந்திரப் புன்னகை ஆபுத்திரன்
என் உயிரோசை நீயடா Rekha Sathish
இதயத்தை திருடாதே சுபஸ்ரீ பூமிநாதன்
உனக்கென மட்டும் வாழும் இதயமடி...
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி...
ஹேராம்
மூன்று முடிச்சி Para Sakthi
கிறுக்கியின் கணவரை காணவில்லை Merlin Moni
உயிரினில் கலந்து உணர்வானவள் காஞ்சனா அன்புச்செல்வம்
முற்றத்து நிலா லதா சுப்ரமணியன்
என் தாளத்தில் நீ சேரவா Sangeetha Velu
காதல் கிரிக்கெட்டு ராஜி
என் சுவாசம் நீயடி Kiruthikha S
கண்களால் கைது செய்யும் அரக்கனே தனிமை காதலி
புயலைத் தாலாட்டும் தென்றலவன் விஜயராணி நடராஜன்
மனம் கொய்த மாயவன் Laxmi Devi
வழி மாறிய மலர்கள் ஒளிநிலா
சந்திர மாகாளி சண்முகா சேதுராமச்சந்திரன்
காதல் ஆசை யாரை விட்டதோ! Rosline Begam
மயிலாய் வருடும் மகாலட்சுமியே...!! Kani Suresh
ரா ர' (ராம ரகசியம்) விஜய் தமிழ்
உயிரின் மூச்சாகி வா Satha
உள்ளத்தை அள்ளித் தந்தேன் Tamil Selvi
காத்திருப்பேன் மன்னவா Meera Jo
காட்டுமாறன் ஜமீன் மர்மம் Artista மனோ
நேச மழையே! செவ்வந்தி துரை
என் உயிரில் கலந்த மாயாவி நீயடி(டா) Love Amore
அரக்கனை அடக்கிய அக்னி தாரகை Swetha
எனக்கு மட்டும் பிழையா Nivetha 6797
சொந்தம் சொல்லி தர வந்தவளே Mithila Mahadev
மதுராபுரம் நாக நந்தினி
நல்லதொரு வீணை செய்தே!!! Nanthini Vaishnavi
காணாமல் போன கனவுகள் அன்பழகன்ஜி
பூவும்.. புயலும்.. பிருந்தா சாந்தகுமார்
தேனு(னூ)றும் இதழே!! Lakshmitha
நிழலன் Rhea moorthy ரியா மூர்த்தி
காதலன் குழந்தைதான் காதலி Kousalya Venkatesan
தீராது அவன் இரு காதல்..! G அழகு லட்சுமி