pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

எழுத்தாளர்களின் வெற்றிக் கதைகள்

13 സെപ്റ്റംബര്‍ 2024

நம் எழுத்தாளர்களின் எழுத்துப் பயணம் சார்ந்த சில உணர்வுப்பூர்வமான  தருணங்களை இங்கு பகிர்கிறோம் :

 

1. பிரதிலிபி எனும் அரவணைப்பு 

சில ஆண்டுளுக்கு முன் சங்கீதா ப்ரியா தன் தாயாரை புற்றுநோய்க்கு பறிகொடுத்தார். மிகுந்த மனச்சோர்வுற்ற அவர் காலம் எனும் சுமையைத் தளர்த்த,  ஏதேச்சையாய் பிரதிலிபியில் கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். எழுத்து அவரை  அன்புடன் அரவணைக்கத் தொடங்கிய அதே வேளையில், அதிலிருந்து அவர் வருமானமும் ஈட்டத்தொடங்கினார்.  பிரதிலிபியை ஒரு ஆதரவுக் கரமாக நம்பும் அவர் பிரதிலிபியில் எழுதாமலும்,  படிக்காமலும் தன்னால் ஒரு நாளையும் கடத்த முடியாது என்கிறார். 

2. வாழ்வை மாற்றிய கதைகள் 

எழுத்தாளர் செவ்வந்தி துரை, சிறுவயதில் டீக்கடைகளுக்கு வரும் நாளிதழ்கள் மூலம் வாசிப்பில் ஆர்வம் கொண்டார். பிற்காலத்தில் அவரே ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக மாறுவார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் அவர் இன்று பிரதிலிபி-தமிழில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராய் உருவெடுத்துள்ளார். பிரதிலிபியிலிருந்து பெறும் வருமானம் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்திவருவதாக அவர் குறிப்பிடுகிறார். 

3. உதவிக்கரம் நீட்டிய எழுத்தாளர்கள் 

அண்மையில் நிகழ்ந்த வயநாடு பேரழிவை நம்மால் எளிதில் மறக்க இயலாது.  அதில் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்திற்காக நம் பிரதிலிபி மலையாள எழுத்தாளர்கள் பலர் ஒன்றிணைந்து தங்களது ஒரு மாத பிரதிலிபி சம்பாத்தியத்தை நிவாரண நிதியாக அளித்தனர். எழுத்திலிருந்து பெற்ற வருமானம் மக்களின் துயர் துடைக்க பயன்பட்டதில் நாங்கள் மிகுந்த மனநிறைவு அடைந்தோம். 

4. கனவுகளின் பயணம்.

திருமதி. கனாக்கிற்கு நீண்ட காலமாகவே ஓர் இரு சக்கர வாகனம் வாங்கவேண்டும் என்று கனவு இருந்தது.  பிரதிலிபியிலிருந்து பெற்ற வருமானமே அதை சாத்தியம் ஆக்கியது.  அவர் தன் அழகிய ஸ்கூட்டருக்கு "ராம்பியாரி" என்று பெயரிட்டார். மேலும் தன் மகிழ்ச்சியை அவர் தன்னை ஆதரிக்கும் வாசகர்களோடு பகிர்ந்துகொண்டார்.  கனாக்கின் கதை, அர்ப்பணிப்புடன் இருந்தால், கனவுகள் நிஜமாகிவிடும் என்பதை உணர்த்துகிறது. 


5. அன்பின் பரிசு 

தனது தாய்க்கு வைரத் தோடுகள் வாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை எழுத்தாளர் ஷிகா பிரதிலிபியிலிருந்து பெற்ற வருமானம் மூலம் நிறைவேற்றினார். இந்தத் தருணம் அவர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது, படைப்பாற்றல் எவ்வாறு அர்த்தமுள்ள பரிசுகளுக்கு வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

6. போராட்டத்திலிருந்து வெற்றிக்கு. 

கோவிட் காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு, நிதி சிக்கல்கள் உட்பட ஏராளமான சவால்களை ஸ்ரீ எதிர்கொண்டார். அப்போது பிரதிலிபியிலிருந்து எதிர்பாராத விதமாய் அவருக்குக் கிடைத்த முதல் சம்பாத்தியம் அவருக்கு பெரும் உதவியாய் அமைந்தது.  இருண்ட காலங்களில் ஒளியைக் கண்டடைவதற்கும், துன்பங்களைச் சமாளிப்பதற்கும் படைப்பாற்றல் துணை நிற்கும் என்பதற்கு ஸ்ரீயின் அனுபவம் ஒரு சான்று.


7. சொற்களின் வழியே உருவாகும் மாற்றம். 


மயூரி தனது எழுத்தைப் பயன்படுத்தி சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மேலும் அவர் தனது பிரதிலிபி சம்பாத்தியத்தை உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்துகிறார். அவரது அர்ப்பணிப்பு, கதைசொல்லல் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க உதவும் என்பதை விளக்குகிறது.