pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஒரு குளிர்காலக் காதல் கதை போட்டி முடிவுகள்

01 ഏപ്രില്‍ 2024

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

பிரதிலிபியின் 'ஒரு குளிர்காலக் காதல் கதை' போட்டியின் முடிவுகள் இதோ!

கோல்டன் பேட்ஜ் இல்லாத எழுத்தாளர்களுக்கு மட்டும், 'ஒரு குளிர்காலக் காதல் கதை' என்ற சிறப்புத் தொடர்கதை எழுதும் போட்டியை பிரதிலிபி நடத்தியது. 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பாகம் தொடர்கதை எழுதி, பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் மற்றும் அதிக வாசகர்கள் மற்றும் பாலோவர்ஸ் பெறுவதற்காக ஒரு வாய்ப்பை உருவாக்கவே இந்த போட்டியை நடத்தினோம். இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள். அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும் லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள்.

இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் -7’ போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள்.

'ஒரு குளிர்காலக் காதல் கதை' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்முறையாக கதை எழுதும் நிறைய எழுத்தாளர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று கதைகளை சமர்பித்திருந்தனர். வெற்றி தோல்வியை தாண்டி அவர்களின் எழுதுவதற்கான ஆர்வத்தையும் குறிப்பிட்ட காலத்தில் கதையை நிறைவு செய்ததையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறப்பான எழுத்து வாழ்க்கை காத்திருக்கிறது, பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் சிறந்த கதைகளை கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியாளர்கள்

 

1. ஸீரோ டிகிரி காதல் - ஜான்ஸ் டேவிட் அன்டோ

 (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்)

2. ஜில்லுனு ஒரு காதல் - Dhusha

 (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்)

3. முல்லைச் சிரிப்பினிலே - உமா விஜய்

 (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்)

4. உறை பனியில் காதல் - கலையரசி கரிகாலன்

 (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்)

5. மாயம் செய்தாயோ வெண்ணிலவே - தஸ்லிம்

 (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்)

6. உன் காதல் குளிரால் என்னை நடுங்க வைக்கிறாய் - அலிஷா ஷமீர்

 (பிரத்யேக எழுத்து பயிற்சி பொருட்கள் + டிஜிட்டல் வெற்றி சான்றிதழ்கள்)

 குறிப்பு - வெற்றி பெற்ற அனைவரும் தங்களது வீட்டு முகவரி, பின்கோட் (முழு முகவரியுடன்), தொலைபேசி எண், உங்களது பிரதிலிபி பக்கத்தின் லிங்க் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

இந்த போட்டியில் பங்கேற்று கோல்டன் பேட்ஜ் பெற்றவர்களுக்கு எங்களின் மனம்கனிந்த வாழ்த்துக்கள்! கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளர்கள் பட்டியல்:

 1. Karpagam Alagappan

 2. ருக்மினி கண்ணனின் காதலி

 3. கவி

 4. Muhsina Saththar

 5. j b

 

போட்டி முடிவுகள் கதைகளின் தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாசகர் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. 

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

பிரதிலிபி போட்டி குழு.