pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

100 பாகங்கள் எனும் மைல்கல்லைத் தொட்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

12 மே 2023

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

 

உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது!

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் -4’ இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போட்டி குறித்து தெரியாதவர்களுக்கு, ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள்’ ஓர் தேசிய அளவிலான போட்டியாகும், பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நாங்கள் கடுமையான சவாலை வழங்கினோம்.  100 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம்.

 

ஒருவர் 100 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து  திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல.

 

வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 100 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர் 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப்  பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

 

எங்கள் தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் நாங்கள் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

 

உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும்  இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்!

 

நாங்கள் உறுதியளித்தபடி, உங்கள் அனைவருக்கும் கூரியர் மூலம் ஒரு சிறப்பு பரிசு அனுப்புவோம். சில நாட்கள் காத்திருக்கவும், இது தொடர்பாக எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

 

இந்தப் போட்டியில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட மிக நீளமான தொடர்-

 

 

இப்போட்டியில் 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட  அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்-

 

 

எழுத்தாளர்

படைப்பு

 

1

Suramigaa Suresh Nagarcovil

நங்கை

 

2

Love Amore

அழகிய திமிர் நீயடி

 

3

Heera heerthana

நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யார் என்று எழுதி வைப்பான்..

 

4

பிருந்தா சாந்தகுமார்

யாரடி நீ மோகினி..

 

5

லதா சுப்ரமணியன்

உணர்வில் உறைந்திடும் உயிர் நீ

 

6

ஓவியா பிளஸ்ஸி

விண்ணைத் தாண்டி வந்தேன்

 

7

கனவு காதலி

அன்பே! உன்னை மனம் கொண்டாடுதே!

 

8

ரம்யா சந்திரன்

என்னுள் அடங்கிய அசுரனே..!

 

9

Flyna§hazna

உனக்கென உருகினேன்

 

10

Daisy Josephraj

உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்

 

11

கிருஷ்ண துளசி

கொஞ்சமே கொஞ்சம் காதல் செய் II

 

12

விஜய் தமிழ்

நடு-இரவு நர்த்தனம்'

 

13

Raja Lakshmi

சண்டிவீரன்

 

14

M. ரிகல்ட்டா முத்துலிங்கம்

கொஞ்சி கொஞ்சம் கொல்ல ...வா ??

 

15

Meera Jo

நான் தேடினேன் என் கண்ணனை

 

16

குட்டிமா தேவி ஸ்ரீ

முன் ஜென்ம தேடல் நீ என் சகியே... சாராங்கே

 

17

indhumathi sridharan

தேவதை வம்சம் நீயோ !!!

 

18

ஜெ.சுமதி ராஜேந்திரன்

தொட்டுத் தொடர வா

 

19

தமிழ் பிரியன்

ஆரண்யத்தின் அரூப நிழல்கள்

 

20

Sashmitha

ஓ.. காதல் கண்மணியே

 

21

சங்கரேஸ்வரி

நட்சத்திரக் கனவுகள்

 

22

சி.வெ.ரா

நியோகாவும் இரு பெருந்திணைக் காதல்களும்

 

23

Anitha Kumar

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2

 

24

murugesan Nallathambi

காதலிக்க கற்க

 

25

சுபா நடராஜன்

எனக்கே எதிரி என் நெஞ்சம்தானடி

 

26

Dhanakya Karthik

உன் உயிரோடு உயிராகிறேன் என்னவ(ளே)னே

 

27

பிரியா மெகன்

மாயவனின் அணங்கிவள்

 

28

S B

தேடுகிறேன் உன்னை

 

29

Kousalya Venkatesan

காப்பு கட்டு, கெடா வெட்டு

 

30

Kanchana Senthil

பஞ்சவர்ண பறவைகள்

 

31

Padmapriya Jagannathan

மாதவியின் மாயோன்

 

32

v Ramakrishnan

புரியாத புதிர்

 

33

ராணி தென்றல்

கதையின் பெயர் யாதெனில்.

 

34

Ramajothi S

வீட்டுக்கு வீடு வாசற்படி

 

35

மாலினி சுந்தர்

தந்திரிகரம்

 

36

Surya Rajarajan

அடங்காத காதல் அதிகாரா

 

37

திக்ஷிதா லட்சுமி

மை_டியர்_ மாமியார்

 

38

அம்மு-இளையாள்

தேவனின் மஞ்சமெனும் வீணை

 

39

Rhea Moorthy ரியா மூர்த்தி

அகிதனின் அரண்மனை

 

40

Valli Subbiah

சுந்தர பவனம் ஒரு அறிமுகம்

 

41

zeeraf

நெருங்கிவா நெஞ்சமே

 

42

Aruna Ashokkumar

முல்லை சிரிப்பில் மூர்க்கம் தவிர்த்தவள்.

 

43

பத்மினி கணேசன்

உயிரோடுதான் விளையாடுவேன்

 

44

Vaishu Ayyam

சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ

 

45

Sparrow Rapunzel

எறும்பு உலகம்

 

46

மு. ச. நறுமுகை

நீதானா என்னுள்ளே வீழ்வது?

 

47

Heera heerthana

சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு!!!

 

48

ஆரா

தீரா நதி நீதானடா(டி)

 

49

nivi ammu

வன்மையை மட்டுமே கொண்டவன் இந்த இராவணன்

 

50

நர்மதா சுப்ரமணியம்

சுந்தர நேசங்கள்

 

51

ஆரா

உயிர் இனிக்கும் உறவை தேடி!

 

52

Priya Dharshini . S

தூவானம் 1

 

53

Lakshmi Bala

அசுரனின் பதுமையவள்

 

54

Vimala krishnan

நீரிலும் சுகமாய் எரிகின்றேன்

 

55

வட மலை சாமி லோக நாதன்(Lokanathan)

வாழ்க்கை.

 

56

பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்

கடைசி வரை(ரி)யில்²

 

 

எங்கள் பார்வையில், நீங்கள் அனைவரும் சிறந்த எழுத்தாளர்கள்!

 

தொடர்ந்து இதே அளவு ஆர்வத்துடன் எழுதுங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்!

 

தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5’ல் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய, பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.  இந்த  போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4க்குள் பதிவிட வேண்டும். போட்டியின் பிரத்யேக பரிசுகள் மற்றும் பிற விதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35

 

வாழ்த்துக்களுடன் உங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறோம், 

பிரதிலிபி போட்டிக்குழு.