
பிரதிலிபிAI பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள்
1. இலக்கணம், எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்க அல்லது கதை வடிவமைப்பு, கதைக்களத்தை யோசிப்பது போன்ற படைப்பாற்றல் சார்ந்த தேவைகளுக்கு AIஐப் பயன்படுத்துவது எப்போதும் வரவேற்கத்தக்கது.
2. குறிப்பாக, ஒரு எழுத்தாளராக நீங்கள் 'எழுத்தாளர் முடக்கத்தை' (Writer's block) எதிர்கொள்ளும்போது, AI உங்கள் படைப்புத் துணையாகச் செயல்படலாம்.
3. உங்கள் கதைகளுக்கான அட்டைப் படங்களை உருவாக்கவும் நீங்கள் படைப்பாற்றலுடன் AI-ஐப் பயன்படுத்தலாம்.
4. AI மூலம் உருவாக்கப்பட்ட கதைகளை மற்றும் வேறொரு எழுத்தாளரின் அனுமதியின்றி அவரது பதிப்புரிமை பெற்ற கதையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
5. முற்றிலும் AI மூலம் உருவாக்கப்பட்ட கதையை உங்களது சொந்தக் கதை என காட்டிக்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். சிறிய மாற்றங்கள் செய்திருந்தாலும், கதை பெருமளவில் AI-ஆல் உருவாக்கப்பட்டிருந்தால் அது AI-ஆல் உருவாக்கப்பட்ட கதையாகவே கருதப்படும்.
ஆபாச படைப்புகளுக்கு எதிரான விதிகள்
1. கதை, கதாபாத்திரம் அல்லது கலை ரீதியான நோக்கம் எதுவுமின்றி, வாசகரை பாலியல் ரீதியாகத் தூண்டுவதற்காக மட்டுமே எழுதப்படும் படைப்புகள், அவை எவ்வளவு நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் அனுமதிக்கப்படாது.
2. கதையின் எந்தப் பகுதியிலும் உடலுறவுக் காட்சிகளை அதிதீவிரமாக விவரிப்பதையோ அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபாசமான சொற்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்கவும்.
3. அட்டைப் படங்களில் ஒருபோதும் நிர்வாணத்தையோ அல்லது பாலியல் உணர்வைத் தூண்டும் நிலைகளையோ (Poses) காட்டக்கூடாது. கதையின் உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும், இவ்விதி பொருந்தும்.
4. பரஸ்பர சம்மதமில்லாத உடலுறவு, பாலியல் வன்முறை அல்லது சிறுவர்கள்/குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பாலியல் செயலையும் ஊக்குவிப்பது, மகிமைப்படுத்துவது அல்லது விரும்பத்தக்கதாகக் காட்டுவது சட்டப்படி குற்றமாகும். கொள்கை மீறலின் கீழ் வருபவை ஆகும்.
5. மேற்கூறிய அனைத்து விதிமீறல்களும் படைப்பு நீக்கப்படுதல், அதன் தெரிவுநிலை கட்டுப்படுத்தப்படுதல் அல்லது மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடும் பட்சத்தில் கணக்கு (Profile) மீது நடவடிக்கை எடுக்கப்படுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
கதைகளைத் திருடுதலுக்கு எதிரான விதிகள்
1. நீங்கள் சொந்தமாக எழுதிய கதைகளை மட்டுமே பதிப்பிக்க வேண்டும்.
2. புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வலைப்பதிவுகள் அல்லது பிற வெளியீடுகளிலிருந்து முழுமையாகவோ பகுதியளவிலோ கதைகளை நகலெடுத்து, சில வார்த்தைகளை மாற்றி உங்களது சொந்தப் படைப்பாக வெளியிடுவது அனுமதிக்கப்படாது.
3. சட்டப்பூர்வ காப்புரிமை மீறலின் கீழ் வராவிட்டாலும், வேறொருவரின் கதைக் காட்சிகளை அப்படியே வரிசையாக எழுதுவது, கதையின் மையம், கதாபாத்திரங்கள் அல்லது அமைப்பை அடிப்படையாக வைத்து மாற்றங்களுடன் எழுதுவதும் படைப்புத் திருட்டாகவே கருதப்படும்.
4. இன்னொரு எழுத்தாளரின் கதையை வேறு மொழியில் மொழிபெயர்க்கவோ அல்லது தழுவலாக எழுதவோ அந்த எழுத்தாளரின் முன்அனுமதி அவசியம். அசல் எழுத்தாளரின் பெயரைக் ( credit) குறிப்பிட்டிருந்தாலும், அனுமதி பெறாமல் மொழிபெயர்ப்பை வெளியிடுவது விதிமீறலாகும்.
5. பதிப்பிக்கப்படும் ஒவ்வொரு கதையும் பிரதிலிபியில் ஏற்கனவே உள்ள கதைகளுடன் ஒப்பிடப்பட்டுத் தானாகவே பரிசோதிக்கப்படும். அசல் எழுத்தாளரிடமிருந்து முறைப்படி புகார் வராவிட்டாலும், பொருத்தங்கள் கண்டறியப்பட்டால் அக்கதை நீக்கப்படலாம்.
6. விதிமீறல்களின் தீவிரத்தைப் பொறுத்து கதையை வரைவுப் பகுதிக்கு மாற்றுதல், நிரந்தரமாக நீக்குதல் அல்லது மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடும் பட்சத்தில் கணக்கை முடக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். முறைப்படியான காப்புரிமைப் புகார்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.
வெறுப்புணர்வைத் தூண்டும் படைப்புகளுக்கு எதிரான விதிகள்
1. வாசகர்கள், பிற எழுத்தாளர்கள் அல்லது பிரபலங்கள் என யாராக இருந்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையும், குழுவையும் இலக்கு வைப்பது, அவமதிப்பது, சிறுமைப்படுத்துவது, அச்சுறுத்துவது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல்களுக்கு உங்களின் கதைகள், விமர்சனங்கள், சாட்கள் அல்லது ப்ரொஃபைல் விவரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
2. சாதிய பாகுபாடு, மதக் கலவரங்கள், குடும்ப வன்முறை அல்லது பால்ய திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளைக் கதையின் ஒரு பகுதியாக விவரித்து, அந்தத் தவறான பழக்கங்களை அம்பலப்படுத்தவோ அல்லது கேள்வி கேட்கும்படி எழுதுவதோ தவறு அல்ல; ஆனால் அவ்ற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்கக் கூடாது.
3. எந்தவொரு நபர், சமூகம், மதம், சாதி, பாலினம் அல்லது பாலியல் தேர்வுகளுக்கு (Sexual Orientation) எதிரான வன்முறை, வெறுப்பு, கொடுமை அல்லது பாகுபாட்டை இயல்பானதாகக் காட்டுவது, பெருமைப்படுத்துவது அல்லது விரும்பத்தக்கதாகக் காட்டுவது அனுமதிக்கப்படாது.
4. சுயவிவரப் பெயர், படம் அல்லது விவரக் குறிப்பு (Bio) உட்பட எங்குமே சாதிய/இன ரீதியான இழிசொற்கள், அரசியல் ரீதியாகக் கலவரத்தை தூண்டும் விஷயங்கள் , வெறுக்கத்தக்க குறியீடுகள் அல்லது வன்முறையைத் தூண்டும் மொழியைப் பயன்படுத்தக் கூடாது.
5. சதித்திட்டக் கோட்பாடுகளைப் பரப்புதல் (Conspiracy Theories), வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறுதல் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவை மற்றொரு குழுவை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது எனக் உரிமை கோரும் அபுனைவு கட்டுரைகளை வெளியிடக் கூடாது.
6. சிறுவர்களைப் பாலியல் மயமாக்குவது, பால்ய விவாகத்தை விரும்பத்தக்கதாகச் சித்தரிப்பது, பெண்கள் மீதான பாலியல் அல்லது உடல ரீதியான வன்முறையைப் பெருமைப்படுத்துவது ஆகியவை சகித்துக் கொள்ள முடியாத கடுமையான விதிமீறல்களாகும் (Zero Tolerance Violation).
7. தீவிரத்தைப் பொறுத்து, எச்சரிக்கை விடுத்தல் மற்றும் உள்ளடக்கத்தை நீக்குதல் முதல் நிரந்தரமாகக் கணக்கை முடக்குவது வரை நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோதமான உள்ளடக்கங்களுக்கு, முன் எச்சரிக்கையின்றி கணக்கு முடக்கப்பட்டு, தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.