
பிரதிலிபி1. வாசகர்கள், பிற எழுத்தாளர்கள் அல்லது பிரபலங்கள் என யாராக இருந்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையும், குழுவையும் இலக்கு வைப்பது, அவமதிப்பது, சிறுமைப்படுத்துவது, அச்சுறுத்துவது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல்களுக்கு உங்களின் கதைகள், விமர்சனங்கள், சாட்கள் அல்லது ப்ரொஃபைல் விவரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
2. சாதிய பாகுபாடு, மதக் கலவரங்கள், குடும்ப வன்முறை அல்லது பால்ய திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளைக் கதையின் ஒரு பகுதியாக விவரித்து, அந்தத் தவறான பழக்கங்களை அம்பலப்படுத்தவோ அல்லது கேள்வி கேட்கும்படி எழுதுவதோ தவறு அல்ல; ஆனால் அவ்ற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்கக் கூடாது.
3. எந்தவொரு நபர், சமூகம், மதம், சாதி, பாலினம் அல்லது பாலியல் தேர்வுகளுக்கு (Sexual Orientation) எதிரான வன்முறை, வெறுப்பு, கொடுமை அல்லது பாகுபாட்டை இயல்பானதாகக் காட்டுவது, பெருமைப்படுத்துவது அல்லது விரும்பத்தக்கதாகக் காட்டுவது அனுமதிக்கப்படாது.
4. சுயவிவரப் பெயர், படம் அல்லது விவரக் குறிப்பு (Bio) உட்பட எங்குமே சாதிய/இன ரீதியான இழிசொற்கள், அரசியல் ரீதியாகக் கலவரத்தை தூண்டும் விஷயங்கள் , வெறுக்கத்தக்க குறியீடுகள் அல்லது வன்முறையைத் தூண்டும் மொழியைப் பயன்படுத்தக் கூடாது.
5. சதித்திட்டக் கோட்பாடுகளைப் பரப்புதல் (Conspiracy Theories), வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறுதல் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவை மற்றொரு குழுவை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது எனக் உரிமை கோரும் அபுனைவு கட்டுரைகளை வெளியிடக் கூடாது.
6. சிறுவர்களைப் பாலியல் மயமாக்குவது, பால்ய விவாகத்தை விரும்பத்தக்கதாகச் சித்தரிப்பது, பெண்கள் மீதான பாலியல் அல்லது உடல ரீதியான வன்முறையைப் பெருமைப்படுத்துவது ஆகியவை சகித்துக் கொள்ள முடியாத கடுமையான விதிமீறல்களாகும் (Zero Tolerance Violation).
7. தீவிரத்தைப் பொறுத்து, எச்சரிக்கை விடுத்தல் மற்றும் உள்ளடக்கத்தை நீக்குதல் முதல் நிரந்தரமாகக் கணக்கை முடக்குவது வரை நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோதமான உள்ளடக்கங்களுக்கு, முன் எச்சரிக்கையின்றி கணக்கு முடக்கப்பட்டு, தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.