pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபி எவ்வாறு உங்களது படைப்புகளின் காப்புரிமையை பாதுகாக்கிறது

08 ஜனவரி 2024

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, 

தனிப்பட்ட செய்திகள் மூலம் பல்வேறு தளங்கள் மற்றும் தனிநபர்களால் அணுகப்படுவது, மேலும் அதன்மூலம் மோசடிகளுக்கு இலக்காவது குறித்து பல எழுத்தாளர்களிடமிருந்து நாங்கள் புகார்களை பெற்றுள்ளோம்.

எங்கள் எழுத்தாளர் சமூகத்திற்கு அதிக கவனத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த, பின்வரும் வழிகாட்டுதல்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

  1. ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு ஈடாக அவர்களுக்காக எழுதக் கோரும் எந்தவொரு தளத்தையும் அல்லது தனி நபரையும் எப்போதும் உடனடியாக ப்ளாக் செய்துவிடுங்கள். பொதுவாக, இதுபோன்ற ஒப்பந்தங்கள் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பிற்கான பதிப்புரிமையை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும். தனிசெய்தியில் புதிய நபர்களிடமிருந்து வரும் கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பவேண்டாம். 

  2. உங்கள் கதையை பிரதிலிபி அல்லது வேறு எந்த தளத்திலிருந்தும் அகற்றும்படி யாராவது உங்களிடம் கேட்டால், உங்கள் பதிப்புரிமையை நீங்கள் இழக்க நேரிடும் என்பதற்கான முதல் அறிகுறி இதுவாகும்.

  3. பிரதிலிபியில், எழுத்தாளர்களிடமிருந்து முழு பதிப்புரிமையையும் நாங்கள் கோருவதில்லை.  எங்கள் குழு ஏதேனும் உரிமைகளைக் கோரும்போது, ​​ஒப்பந்த விதிமுறைகளின் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பை விளக்கும் மின்னஞ்சலை நாங்கள் அனுப்புவோம். எங்கள் தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

  4. பிரதிலிபியில், மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு வகையான உரிமைகளைப் புரிந்துகொள்வதில் எழுத்தாளர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். உதாரணமாக, குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தும் உரிமைகளை (காமிக்ஸ், வெப் சீரிஸ், புத்தகங்கள், ஆடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் ஒரு கதையை மாற்றியமைக்கும் உரிமை) நாங்கள் பெறுகிறோம். நாங்கள் ஒரு கதையை முழுமையாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டால், அது முன்கூட்டியே ஒப்பந்தத்தில் வெளிப்படையாகக் கூறப்பட்டும்.

  5.  எழுத்தாளரின் அடிப்படை உரிமை என நம்புவதால், எழுத்தாளர்கள் முழுமையான பதிப்புரிமையை கைவிடுவதைத் தவிர்க்க வேண்டும். கூடுதலாக, பல எழுத்தாளர்கள் எதிர்காலப் பயன்கள் பற்றி சிந்திக்கத் தவறுகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் பரிணாம வளர்ச்சியுடன்,பிரதிலிபி போன்ற தளங்களில் உங்கள் கதைகள் விரைவில் 20 மொழிகளில்  மொழிபெயர்க்கப்படலாம், ஒவ்வொரு மொழியிலிருந்தும் எழுத்தாளர்கள் சம்பாதிக்க முடியும். ஆடியோ, திரைப்படம் மற்றும் காமிக்ஸ் போன்ற உருவாக்கங்களுக்கு தனித்தனியாக கதைகளை வழங்கலாம், இதன்மூலம் எழுத்தாளர்கள் பல்வேறு ஸ்ட்ரீம்களில் இருந்து சம்பாதிக்க முடியும்.

  6. நீங்கள் ஈடுபடும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் புரிந்துகொள்ள, தயங்காமல் ஒரு வழக்கறிஞரை அணுகவும் அல்லது [email protected] மூலம் பிரதிலிபி குழுவின் உதவியை நாடவும். பிரதிலிபி குழு உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஒப்பந்தத்தைத் தெளிவுபடுத்தும்.