pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

'மர்ம தேசம்' போட்டி முடிவுகள்

01 ஆகஸ்ட் 2017

வாசகர்களுக்கு வணக்கம்,

பிரதிலிபி  'மர்ம தேசம்' கதைப்போட்டியை ஜூன் - ஜூலை மாதத்தில் நடத்தியது. 

போட்டிக்கு பெறப்பட்ட படைப்புகள் ஜூன் 26 முதல் ஜூலை 31 வரை வாசகர் பார்வைக்கு வைக்கப்பட்டது.

போட்டியில் மொத்தம் இரண்டு படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். ஒன்று, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. இன்னொன்று நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது என அறிவித்திருந்தோம்.

நடுவர் குழுவுக்கு எழுத்தாளர் திரு. அபிலாஷ் சந்திரன் தலைமை வகித்தார்.

அதன்படி, வெற்றி பெற்ற படைப்புகள் பின்வருமாறு,

வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பு :

ஷேடோமதியழகன்

நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பு :

இரவு சூரியன் - கவிஜி

வெற்றி பெற்ற கதைகள் குறித்தும் பிற கதைகள் குறித்தும் திரு. அபிலாஷ் சந்திரன் அவர்களின் கருத்து பின்வருமாறு :

சிறந்த கதை: இரவு சூரியன் - கவிஜி
மதிப்பீடு: அழகிய மொழி. அற்புதமான கற்பனை. குறிப்பாய் புறாக்கள் மார்பை கொத்தும் இடம்! முடிவு மட்டுமே பிரச்சனை – செயற்கையாக உள்ளது.

மிச்ச கதைகளில் நான் முக்கியமாய் நினைப்பவை பற்றின என் மதிப்பீடுகளை கீழே தந்துள்ளேன்:

வெள்ளைப் பொய்கள்கனவுப்பிரியன்
மதிப்பீடு: சுவாரஸ்யமான விளையாட்டுத்தனமான மொழி. ஆனால் கதை சரியாக உருப்பெறவில்லை.

ஜெனியின் டைரி குறிப்புகள்கனவுப்பிரியன்: இதுவும் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதப்பட்ட கதையே. ஆனால் முடிவு செயற்கையானது.

ஒரு பனி இரவில் –  ஆவுடையப்பன் சங்கரன்: கச்சிதமான ஒரு வணிக திகில் கதை. ஆனால் இது ஒரு துப்பறியும் நாவலாக எழுதப்பட வேண்டியது எனத் தோன்றுகிறது. இந்த கதைக்களன் சிறுகதைக்கானது அல்ல.

வெற்றி பெற்றவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.  இருவருக்கும் தலா 1000ரூபாய் பரிசாக வழங்கப்படும்

நன்றி.