pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபியில் வளர்வது எப்படி? - பாகம் 1

16 நவம்பர் 2021

கதைசொல்லல் என்பது உண்மைகளையும் நிகழ்வுகளையும் சொல்லில் வடிப்பது மட்டுமல்ல, எழுத்தாளர் அனுபவிக்கும் உணர்வுகள், அச்சங்கள், சோகம், கஷ்டங்கள், சந்தோஷங்கள் போன்ற பல்வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கியது. ஒரு எழுத்தாளர் எழுதும் போது, வாசிப்பவரும் அவரை அதே உணர்ச்சியின் தீவிரத்தோடு புரிந்துகொள்கிறார். மேலும் அவரது கதை, எழுத்தாளரை நன்கு புரிந்துகொண்டு அவரின் எழுத்துலகோடு வாசகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள உதவுகிறது.

அதிக வாசகர்கள் இல்லாத காரணத்தால் இந்த உணர்வுகளை எழுத்தின் மூலம் கடத்த முடியாமல் போவதென்பது நியாயமற்றது. எனவே, நீங்கள் பிரதிலிபியில் ஒரு எழுத்தாளராக இருந்து எங்கள் தளத்தில் அதிக வாசகர்களைப் பெற விரும்பினால், நீங்கள் படைப்புகள் எழுதும்போது கருத்தில் கொள்ளவேண்டிய சில அடிப்படை விஷயங்களை நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்:

முகப்புப் படம்:

அனைத்திலும் முதன்மையானது, உங்கள் முகப்பு படம். வித்தியாசமான, எளிதில் ஈர்க்கக்கூடிய, படைப்புக்கு தகுந்த முகப்புப் படம் தேடி வைத்தால் வாசகர்கள் படிக்க வாய்ப்பதிகம். ஏனெனில் முதலில் கவனத்தை ஈர்ப்பது முகப்பு படமே! (கவனிக்க - நீங்கள் தேர்ந்தெடுக்கும் முகப்பு படம் காப்பிரைட் ப்ரீ (copyright free) ஆக இருக்க வேண்டும்)  

படைப்பின் தலைப்பு: 

இரண்டாவதாக, உங்கள் படைப்பின் தலைப்பும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. படைப்புக்கு தகுந்த, பார்த்ததும் படிக்கத்தூண்டும் தலைப்பாக இருந்தால் வாசகர்கள் வாசிக்கும் வாய்ப்பதிகம். ஏனெனில், அதுபோன்ற படைப்பையே வாசகர்கள் அதிகம் படிக்கிறார்கள். 

எழுத்துப்பிழைகள்: 

உங்கள் முகப்பு படம் மற்றும் படைப்பின் தலைப்பு வாசகர்களை கவரும் வகையில் இருந்தாலும், உங்கள் படைப்பில் எழுத்துப்பிழைகள் இருந்தால், அது வாசிக்கும் வாசகர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே உங்கள் படைப்பினை வெளியிடுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை எழுத்துப்பிழைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.தொடர்ச்சியாக எழுதுதல்: உங்கள் படைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட வாசகர்களை நீங்கள் உருவாக்கியபின், தொடர்ந்து எழுதுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக, நீங்கள் ஒரு தொடரைத் தொடங்கினால், இடையில் அதனை எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் படைப்புக்காக வாசகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

கேட்பதில் தவறில்லை: 

ஒரு படைப்பாளியின் மிக முக்கியமான அம்சம் பணிவு. உங்கள் வாசகர்களை ஈர்க்க எந்த தயக்கமும் இருக்கக்கூடாது. உங்கள் கதையின் முடிவில் வாசகர்கள் உங்களைப் பின்தொடருமாறு வேண்டுகோள் வைக்கும்போது, உங்களது படைப்புகளை உடனுக்குடன் வாசிக்க வேண்டுமெனில் உங்களைப் பின்தொடர்வது அவசியம் என்பதை வாசகர்கள் அறிந்துகொள்வார்கள். மேலும், அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கதையை தங்கள் நூலகத்தில் சேர்க்கும்படி வாசகர்களிடம் நீங்கள் கோரிக்கை வைக்கலாம், இது அவர்கள் உங்கள் படைப்பை தொடர்ந்து வாசிக்க உதவும்.

தினசரி தலைப்பு : 

தினசரி தலைப்பு பகுதியை பிரதிலிபி முகப்பு பக்கத்தில் பார்க்க இயலும். தினசரி வேறுவேறு தலைப்புகளில் படைப்பு எழுதவேண்டும். எல்லா தலைப்புகளிலும் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் விருப்பப்படும் தலைப்புகளில் எழுதலாம். முகப்பு பக்கத்தில் இருப்பதால் பிரதிலிபி செயலியை திறக்கும் வாசகர்கள் இந்தப் படைப்புகளை பார்ப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

கலந்துரையாடல் பகுதி:

இந்தப் பகுதியில் தினமும் பல்வேறு விதமான தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும். பல்வேறு கேள்விகளுக்கு நீங்கள் விளக்கம் அளிக்கும்போது, உங்கள் கதைகளுக்கும் அதிகமான வாசகர்களைப் பெற முடியும். 

பிரதிலிபி வாசகர்கள் விரும்பும் பிரிவுகள்:

குறுகிய காலத்தில் அதிக வாசகர்களைப் பெற விரும்பினால், காதல்/திகில் கதைகள் எழுத முயற்சி செய்யலாம்.

முன்பதிவேற்றம் வசதி :  

முன்பதிவேற்றம் வசதியை உபயோகித்து எழுதினால், அடுத்தடுத்து வரவிருக்கும் புதிய பாகங்களின் தினங்களை அந்த குறிப்பிட்ட தினத்தின்கீழ் பிரதிலிபி முகப்பு பக்கத்தில் பார்க்க இயலும். இது நிறைய வாசகர்களை பெற வழிவகுக்கும். வளரும் எழுத்தாளர்கள் இந்த வாய்ப்பை உபயோகித்துக் கொள்ளலாம். மேலும் இது அவர்களின் எழுத்தில் ஒரு ஒழுங்கையும் கொண்டுவரும்.

பதிவுகள்: 

அடுத்த அத்தியாயம் பதிப்பிக்க தாமதம் ஆனாலும், வாசகர்களுடன் கலந்துரையாட விரும்பினால், 'பதிவுகள்' பகுதியில் உங்கள் எழுத்து பயணம், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் போன்றவற்றை உங்களைப் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், வாசகர்களுடன் ‘கேள்வி-பதில்’ பகுதியையும் அமைத்துக் கொள்ளலாம்.இந்த உதவிக்குறிப்புகளின் மூலம், உங்கள் கதையை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நீங்கள் ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெறுவீர்கள் என நம்புகிறோம்.

பேரன்புகளுடன்!

-பிரதிலிபி குழு.