pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ப்ரீமியம்- புதிய மாற்றங்கள்

01 ஆகஸ்ட் 2023

நீங்கள் கோல்டன் பேட்ஜ் பெற்ற எழுத்தாளராக இருந்து, உங்களது தொடர் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் இருந்தால் புதிய மாற்றங்கள் கீழ்வரும் வழிகளில் உங்களுக்குப் பொருந்தும் ->

1. பிரதிலிபியின் சம்பாதிக்கும் வாய்ப்பில் புதிய மாற்றங்கள் எவ்வாறு செயல்படுகிறது?  

இதன் மூலம் கோல்டன் பேட்ஜ் வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் சமமான சம்பாதிக்கும் வாய்ப்பைக் கொண்டு வருகிறோம். இனி உங்கள் தொடர்களை ப்ரீமியத்தில் இணைக்கும்பொருட்டு பிரதிலிபி குழு உங்களைத் தொடர்புகொள்ளும் வரை  நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களது முடிவடைந்த அல்லது நடப்பில் உள்ள  தொடர்களில் எதையும் உங்களால் எப்போது வேண்டுமானாலும்   'ப்ரீமியம் திட்டத்தின்' கீழ் சேர்க்க முடியும்.

2. சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் கீழ் நடப்பில் உள்ள என் தொடருக்கு என்ன ஆகும்? 

நடப்பில் உள்ள சூப்பர்ஃபேன் தொடர் தானாகவே ‘ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்’ திட்டத்தில் இணைந்துவிடும். எனினும் உங்கள் தொடரை வாசிக்கும் வாசகர்களுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறோம். உங்கள் தொடர் 16ஆம் பாகத்திலிருந்து பூட்டப்படும். இதற்கு முன்பு பாகங்களை திறக்க வாசகர்கள் பதிப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் இப்போதைய புதிய மாற்றத்தின் படி வாசகர்கள் முந்தைய பாகத்திலிருந்து அடுத்த பாகத்தை திறக்க  ஒரு நாள் காத்திருக்கவேண்டும். அதாவது, ப்ரீமியம் தொடர்கள் வாசிக்கப்படும் நடைமுறையில். 

3. பிரதிலிபி ஏன் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறது? 

ப்ரீமியம் திட்டத்தின் மூலம் கோல்டன் பேட்ஜ் வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் சமமான சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால். ஏனெனில் தற்போதைய மாடலில், ஒருமுறை புதிய பகுதிகளை வெளியிட்டால், 5 நாட்களுக்குப் பிறகு அனைவரும் அவற்றை இலவசமாகப் படிக்கலாம். தொடர் முடிந்ததும் ஒரு புதிய வாசகர் உங்கள் தொடரைப் பார்வையிட்டால், அவர் எந்தப் பூட்டுமின்றி அனைத்து அத்தியாயங்களையும் படிக்க முடியும். ஆனால் இந்த புதிய மாற்றத்தால், 16வது பகுதிக்குப் பிறகு தொடர் நிரந்தரமாக பூட்டப்படும். வெளியீட்டுத் தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  முந்தைய பகுதிகளைப் படிப்பவர்களுக்கு மட்டுமே தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் திறக்கப்படும்.


4. வாசகர்கள் என்னென்ன மாற்றங்களை காண்பார்கள் ?

- 16ஆம் பாகத்திலிருந்து தொடர்கள் லாக் செய்யப்படும். அதற்கு முன்பு வரை, அதாவது 15ஆம் பாகம் வரை அவர்கள் இலவசமாக வாசிக்கலாம். 

- தொடரின் பூட்டப்பட்ட பகுதியைப் படிக்க வாசகர்கள் இனி 5 நாட்கள் காத்திருக்க வேண்டாம். பூட்டிய அடுத்த பகுதியை இலவசமாகப் படிக்க அவர்கள் அடுத்த நாள் வரை காத்திருந்தால் போதும்.

- ப்ரீமியம் தொடர்கள் போலவே , அவர்கள் அடுத்த நாள் வரை காத்திருந்து பூட்டப்பட்ட பகுதியை வாசிக்கலாம். உடனடியாக வாசிக்க ப்ரீமியத்திற்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்அல்லது எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்து சூப்பர்ஃபேன் ஆகலாம் அல்லது 5 நாணயங்கள் அளித்து பாகத்தை உடனடியாக திறக்கலாம்.  

5. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் என் நடப்பில் உள்ள தொடரை எவ்வாறு இணைப்பது?

நீங்கள் தொடரை எழுதும்போது முதல் 15 பாகங்கள் இலவசமாக திறக்கும். 16ஆம் பாகத்தை பதிப்பித்தவுடன், தொடர் தானாகவே  ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் வந்துவிடும். எழுத்தாளர்கள் தொடரின் 16ஆம் பாகத்தை பதிப்பிக்கும் வரை ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனில் இணைக்கும்  ஆப்ஷனை தொடர் பக்கத்தில் பார்க்க இயலாது.


6. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் என் முடிவடைந்த தொடரை இணைப்பது எப்படி? 

உங்களது நடப்பில் உள்ள சூப்பர்ஃபேன் தொடர் தானாகவே ‘ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்’ திட்டத்தில் இணைந்துவிடும்.  உங்களது முடிவடைந்த தொடரை இணக்க, ‘ எழுத’ பக்கத்திற்கு சென்று தொடரின் ‘மற்ற விவரங்களை திருத்த’ என்ற பொத்தானை அழுத்தினால் உங்களது தொடரை ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் இணைப்பதற்கான ஆப்ஷனைக் காண்பீர்கள்( (சப்ஸ்கிரிப்ஷன் -ஆம் என தேர்வு செய்யவும்). இப்போதைய நிலையில், உங்களது ப்ரொஃபைல் பக்கத்திலிருந்து இதற்கான அணுகலைப் பெற இயலாது. ‘எழுத’ பக்கத்திலிருந்து மேற்கூறியபடி தொடரை இணைக்கலாம். நீங்கள் தொடரை இணைத்தபிறகு , சில மணி நேரத்தில் (அதிகபட்சம் 24 மணிநேரம்) உங்கள் தொடர் புதிய அம்சத்தில் சேர்க்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.    

7. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திலிருந்து என் தொடரை நீக்குவது எப்படி? 

உங்களால் நேரடியாக தொடரை நீக்க இயலாது. தொடரை நீக்க தொடரின் பிரதான பக்கத்தில் உள்ள ‘சம்பாத்திக்கும் திட்டத்தில் பங்குபெற’ என்ற ஆப்ஷனில்  ‘இல்லை’ என்பதை தேர்வு செய்யவும். அது எங்கள் குழுவிற்கு ஒரு கோரிக்கையை விடுக்கும். எங்கள் குழு 72 மணி நேரத்தில் உங்களைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும்.

8. ஏன் எங்களால் நேரடியாக ப்ரீமியம் திட்டத்திலிருந்து தொடரை நீக்க முடியாது?

பணம் செலுத்தி வாசிக்கும் வாசகர்களுக்கு நிலையான அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். திட்டத்தில் இருந்து தொடர்களை திடீரென அகற்றுவது, அந்தத் தொடரை முன்கூட்டியே படிக்க பணம் செலுத்திய  வாசகர்களின் நம்பிக்கையை உடைக்கிறது.

9. எழுத்து மற்றும் பதிப்பிக்கும் முறையில் மாற்றங்கள் உள்ளதா? 

ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொடர்களுக்கு ->

- எழுத்தாளரால் தொடரின் பாகங்களை  நீக்கவோ, வரைவுக்கு அனுப்பவோ இயலாது. ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் எங்களை வாட்ஸப் எண் வழியாகவோ அல்லது [email protected] மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  

- எனினும், தொடரின் எந்தப் பகுதியையும் எழுத்தாளர் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம்

- வெளியிலிருந்து பாகங்களை இணைக்க இயலாது. 

- தொடரின் பாகங்களை மறுவரிசைப்படுத்த முடியாது.

10. எழுதும் முறையில் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் ?

ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு ஏற்படும் மோசமான வாசிப்பு அனுபவத்தை தவிர்ப்பதற்காகவே நாங்கள் இதைச் செய்கிறோம். அதாவது ஒரு வாசகர் ப்ரீமியம்/சூப்பர் ஃபேன் சந்தாவை வாங்கி, குறிப்பிட்ட ஒரு தொடரைப் படிக்கத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த தொடரின் எழுத்தாளர், தொடரின் ஏதேனும் ஒரு பாகத்தை நீக்கினாலோ அல்லது பாகங்களை  மறுவரிசைப்படுத்தினாலோ, குறிப்பிட்ட வாசகரின் வாசிப்பு அனுபவம் தடைபடுகிறது. இதைத் தவிர்ப்பதற்கே தொடரை திருத்தம் செய்வதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறோம்.


11. நான் எனது தொடரை 'முடிந்தது' என்று குறிப்பிட்டால் என்ன நடக்கும்?

எதுவும் மாறாது. உங்கள் தொடர் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் தான் இருக்கும். 16ஆம் பாகத்திலிருந்து தொடர் பூட்டப்பட்டிருக்கும்.   எனினும், ஒரு தொடரை நிறைவு செய்ததாக நீங்கள் குறிப்பிடுவது, உங்கள் படைப்பை அதிகளவு வாசகர்களுக்கு விளம்பரப்படுத்த எங்களுக்கு உதவும்.

12. இந்தப் புதிய அமைப்பில், தொடரின் வரைவு/பாகங்களை நான் முன்பதிவேற்றம்(schedule) செய்யலாமா? 

நிச்சயமாக, உங்களால் முன்னரே பாகங்களை திட்டமிட முடியும். அந்த வசதி அப்படியே தான் இருக்கும்.

13. எனது சூப்பர்பேன்களின் வாசிப்பு அனுபவத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா?

இல்லை, அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. .


14. எனது ப்ரீமியம் தொடர்கள் என்னவாகும்?

ஏற்கனவே பிரீமியத்தில் உள்ள தொடர்களில் எந்த மாற்றமும் இருக்காது. எல்லாம் அப்படியே இருக்கும்.


15. நான் ஏற்கனவே "முடிந்தது" என்று குறிப்பிட்ட தொடரை சப்ஸ்கிரிப்ஷன் கீழ் பதிப்பிக்கவில்லை. எனது அந்த கதை இந்த புதிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்குமா?

ஆம். சப்ஸ்கிரிப்ஷன் கீழ் பதிவிடாத உங்களின் நிறைவடைந்த தொடரை, இந்த புதிய அமைப்பின் மூலம் எந்த நேரத்திலும் ப்ரீமியத்திற்கு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். தொடரின் ‘மற்ற விவரங்களை திருத்த’ என் ஆப்ஷனில் அதை தேர்வு செய்யலாம். 


16. புதிய மாற்றத்தால் எனது சூப்பர்ஃபேன்கள் , வாசகர்கள் மற்றும் எனது வருமானம் ஆகியவை  குறையும் அபாயத்தை உணர்கிறேன்.

- ஆரம்பத்தில் இந்த மாற்றம் வாசிப்பை பாதிக்கலாம். ஆனால், இந்த விளைவு எதிர்மறையாக மட்டுமே இருக்கும் என்ற அவசியமில்லை! நாளடைவில் இதனால் உங்களது சப்ஸ்கிரிப்ஷன் அதிகரிக்கும். 

- முன்பு போல் 5 நாட்களுக்கு பிறகு பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் பூட்டப்பட்ட பாகங்கள்  இலவசமாக திறக்காது. குறிப்பிட்ட லாக் செய்யப்பட்ட அத்தியாயத்திற்கு முன் உள்ள அனைத்து அத்தியாயங்களையும் படித்த வாசகர்கள் மட்டுமே, அடுத்த நாள் வரை காத்திருந்து அடுத்த அத்தியாயத்தைப் படிக்கலாம். மற்ற வாசகர்களுக்காக அந்த பாகங்கள் பூட்டப்பட்டிருக்கும். ஒரு வாசகர் ஒரு நாளில் ஒரு இலவச அத்தியாயத்தை மட்டுமே படிக்க முடியும். மேலும், இலவச நாணயங்கள் இருந்தாலும், வாசகரால் எந்த நீண்ட கதையையும் ஒரே அமர்வில் படிக்க முடியாது. ஒரு வாசகர் அனைத்து அத்தியாயங்களையும் தொடர்ச்சியாகப் படிக்க விரும்பினால், பூட்டிய அத்தியாயங்களைப் படிக்க அவர்கள் குறிப்பிட்ட எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்யவேண்டும் அல்லது பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் அல்லது நாணயங்களை வாங்க வேண்டும்.

17.போட்டியில் இடம்பெற்றுள்ள எனது தொடர் இந்த மாற்றத்தின் கீழ் வருமா?

நிச்சயம், இந்த மாற்றம் உங்களது போட்டிப் பங்கேற்பை பாதிக்காது. 

18. எனது தொடரின் பாகங்கள் திறக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எனது தொடர் ப்ரீமியத்திற்கு கீழ் உள்ளதா?

உங்கள் தொடரில் ப்ரீமியம் (Diamond) சின்னம் இருந்தால் , தொடர் ப்ரீமியத்தின் கீழ் இருக்கின்றது என அர்த்தம். உங்களது தொடர் பாகங்கள் உங்களுக்கு திறந்திருந்தால் , வாசகர்களுக்கும் திறந்திருக்கும் என்று அர்த்தம் அல்ல. ப்ரீமியம் சின்னம் இருந்தால் வாசகர்களுக்கு 16ஆம் பாகத்திலிருந்து தொடர் பூட்டப்பட்டிருக்கும்.

19. ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திலிருந்து நான் பெறும் சம்பாத்தியத்தை எங்கு காணலாம்?

மாதத்தின் இறுதி நாளில் உங்களது சம்பாத்தியம் பகுதியில் உங்களது ப்ரீமியம் சம்பாத்தியத்தைக் காணலாம்.