pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபி மூலம் உங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள்

01 மார்ச் 2024

 

 

உங்கள் நாவலை வெறும் 5000 ரூபாய்க்கு அச்சுப் புத்தகமாக வெளியிடுங்கள். உங்களில் பலர் தங்கள் கதையை அச்சுப் புத்தகமாக வெளியிட விரும்புவதால், நாங்கள் இதை முன்னெடுக்கின்றோம். உங்கள் புத்தகத்தை மிகக் குறைந்த விலையில் வெளியிட, இந்த குறுகியகால சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் கதையை புத்தகமாக வெளியிட ஆர்வமாக இருந்தால், [email protected] ஐ அணுகவும்

 

அடிப்படைத் திட்டம் (basic) :

40,000 வார்த்தைகளுக்கு 5,000 INR + 18% GST செலுத்தவேண்டும். 40,000 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால், கட்டணம் அதிகரிக்கும் அல்லது பிரதிகளின்  குறையும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

 

திட்டத்தில் அடங்குபவை : 

 

  • புத்தகத்தின் 10 பிரதிகள் 

  • அனுப்பும் செலவும் அடங்கும்

  • அட்டைப்படம் பிரதிலிபியால் உருவாக்கப்படும் 

  • புத்தகத்திற்கான ISBN எண் 

  • காகித தரம் - ஆரம்பநிலையில் ஆனது

  • மிக அடிப்படையான நூலாக்க வடிவமைப்பு (Typesetting)



திட்டத்தில் இடம்பெறாதவை : 

 

  • மெய்ப்பு (Proofreading)

 

நூலாக்க வடிவமைப்பு/மெய்ப்புக்கான வழிகாட்டுதல் 

 

  • எழுத்துப்பிரதியில் எமோஜிகள் இடம்பெறக்கூடாது 

  • சொற்றொடர்களுக்கு இடையே தேவைக்கு அதிகமான இடைவெளி இருக்கக்கூடாது. 

  • தேவைக்கு அதிகமான நிறுத்தக்குறிகள், கமா, புள்ளிகள் இருக்கக்கூடாது. 

 

பிற முக்கிய விவரங்கள் : 

 

  • ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே  பணம் செலுத்த வேண்டும். மேலும் கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தப்பட வேண்டும்.

  • செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், ஒப்பந்தத்தில் எழுத்தாளர்  கையெழுத்திட வேண்டும். 

  • புத்தகம் எப்படி வரும் என்பதில் ஒரு யோசனையைப் பெறுவதற்காக ஒரு மாதிரி புத்தகத்தின் வீடியோ எழுத்தாளர்களுக்கு அனுப்பப்படும். (குறிப்பு இது உங்கள் புத்தகமாக இருக்காது. இது அச்சிடப்பட்ட மாதிரி புத்தகம்)

  • எழுத்தாளர்களுக்கு தங்கள் புத்தகத்தில் மாற்றங்களைச் செய்ய 7-10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த நேரத்தில் எழுத்தாளர்  Proofreading மற்றும் Typesetting செய்ய வேண்டும்.

  • இறுதி எழுத்தப்பிரதியை வழங்கியதிலிருந்து , நாங்கள் உங்களுக்கு அச்சுப்புத்தகத்தை அனுப்ப அதிகபட்சமாய்  30 நாட்கள் எடுத்துக்கொள்வோம்.

  • அட்டைப் படத்தை பிரதிலிபி முடிவு செய்யும். எழுத்தாளர் ஒரு மாதிரி அட்டைப் படத்தை கொடுக்க முடியும். ஆனால் இறுதி வடிவமைப்பை பிரதிலிபியே தீர்மானிக்கும். ஒரு நூலுக்கு ஒரே ஒரு அட்டைப் படம் மட்டுமே வடிவமைக்கப்படும். 

  • உள்ளடக்கத்தின் பதிப்புரிமை எழுத்தாளருக்குச் சொந்தமானது - (பிரதிலிபிக்கு பதிப்புரிமையை வழங்காத பட்சத்தில்) 

  • புத்தக அட்டையின் காப்புரிமை பிரதிலிபிக்கு சொந்தமானது. ஒப்பந்தத்திலும் இது குறிப்பிடப்படும்.

  • புத்தகத்தை அச்சுக்கு அனுப்பும் முன், பிரதிலிபி ஒரு pdf கோப்பை எழுத்தாளர்களின் பார்வைக்கு அனுப்பும்.

 

சில அடிப்படைக் கேள்விகள் : 

 

  1. நான் இந்த திட்டத்தில் ஆர்வமாக உள்ளேன். நான் என்ன செய்யவேண்டும்? 

 

       நீங்கள் உங்கள் கதையை புத்தகமாக வெளியிட ஆர்வமாக இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். மின்னஞ்சலில் உங்களது தொடர்பு எண்ணை வழங்கவும். 



  1. இதில் என்னென்ன படிகள் உள்ளன? 

 

          நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியதும், நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் புத்தகத்தின் விவரங்களைப் பெறுவோம். பின்னர் spot draft மற்றும் பிரதிலிபியின் கணக்கு விவரங்கள் மூலம் கையெழுத்திட உங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை அனுப்புவோம். பணம் செலுத்தி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதும், புத்தகத்தைப் பற்றிய மற்ற அனைத்து விவரங்களையும் சேகரிக்க மின்னஞ்ச்ல் மூலம் Google form பகிரப்படும். புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியையும் இறுதித் திருத்தத்திற்கு அனுப்புவோம். புத்தகத்தின் விவரங்களைப் பூர்த்தி செய்து, திருத்தப்பட்ட இறுதி பிரதியைப் பகிர்ந்தவுடன், நாங்கள் வெளியிடும் பணியைத் தொடங்குவோம் மற்றும் குறிப்பிடப்பட்ட மற்ற எல்லா விஷயங்களையும்.

 

  1. புத்தகத்தின் பதிப்பாளர் யார்?

 

          பிரதிலிபி பேப்பர்பேக்ஸ்

 

  1. எனது தொடரின் காப்பியை உங்களுக்கு எப்படி வழங்குவது ?   

 

            தொடர்  பிரதிலிபியில் இருந்தால் , நாங்களே பதிவிறக்கம் செய்துகொள்வோம். எழுத்தாளர் திருத்தப்பட்ட நகலைப் பகிர விரும்பினால், அவர்கள் அதை Ms word கோப்பாகப் பகிர வேண்டும்.

 

  1. பிரதிலிபியில் இல்லாத எனது புத்தகங்களை வெளியிட விரும்புகிறேன்.அதை எப்படி வழங்குவது? 

 

            பிரதிலிபியில் இல்லாத புத்தகங்களையும் வெளியிடுகிறோம். புத்தகத்தை MS word கோப்பாக பகிர வேண்டும்.

  1. எந்தக் கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும்?  

 

            நீங்கள் அனைத்து விதிமுறைகளையும் புரிந்துகொண்டு, வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டவுடன் நாங்கள் விவரங்களைப் பகிர்வோம்.

  1. எனது புத்தகத்தின் விற்பனை விலை எவ்வளவு?


    பரஸ்பர விவாதங்களுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் (புத்தக விலை நிர்ணயம் தொடர்பாக சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்).

 

  1. எனது புத்தகத்தை ஆன்லைன் இணையதளங்களில் விற்பீர்களா? எ.கா- அமேசான்.

 

          இல்லை, இந்த திட்டத்தில் உங்கள் புத்தகத்தை விற்க மாட்டோம். கூடுதல் கட்டணத்துடன் அதைச் செய்யலாம்.

 

  1. புத்தகத்தின் அளவு என்ன?

 

          8.5 x 5.5 inches