pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

'சிறந்த எழுத்தாளர் விருதுகள்: சூப்பர் 7 சீசன் | விரைவில்'

28 டிசம்பர் 2023

எங்கள் அற்புதமான எழுத்தாளர்களே, 

 

2024 புது வருடத்துடன் நம் பயணத்தை துவங்க இருக்கும் இவ்வேளையில், உங்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான ஆண்டாக புத்தாண்டு இருக்க பிரதிலிபியின் அன்பான வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகிறோம்! 

 

கூடிய விரைவில் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்களுக்கான 'சிறந்த எழுத்தாளர் விருதுகள்: சூப்பர் 7 சீசன்' தொடங்க இருக்கிறது.

 

எங்கள் சவால்: புது வருடம் என்பது புதிய ஆரம்பம். இந்த புத்தாண்டில், ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள், கதை மிகவும் சுவாரசியமாக தொடங்குவதோடு, கதை முழுவதும் வாசகர்களை ஈர்த்து அவர்களை உங்களோடு  இறுதிவரை பயணிக்க வைக்கும்படி இருக்க வேண்டும்.

 

புது ஆண்டின் புதிய பக்கங்களை உங்கள் எழுத்திற்காக அர்ப்பணித்து, பிரதிலிபியில் மில்லியன் கணக்கான வாசகர்களின் இதயத்தைத் தொடக்கூடிய கதைகளை உருவாக்க உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள். உங்கள் தனித்துவமான எழுத்துத் திறமையையே கதையின் உண்மையான ஹீரோவாக மாற்றவும். உங்கள் கதைக்கான அவுட்லைன் மற்றும் கதாபாத்திரங்களை இப்போதே  திட்டமிடத் தொடங்குங்கள்.

 

வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி இப்போட்டியை நாம் தொடங்குகிறோம்! இந்த சூப்பர் 7 சீசனில் நீங்கள் வெல்லக்கூடிய அற்புதமான பரிசுகளைப் பற்றி தெரிந்துகொள்ள காத்திருக்கவும்.