pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டி முடிவுகள்

23 பிப்ரவரி 2024

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6” போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பல புதிய எழுத்தாளர்கள் கோல்டன் பேட்ஜ் பெற்று இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எண்ணற்ற அருமையான 60 பாக கதைகளை பதிவிட்டிருந்தனர். ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய பிரதிலிபியின் அனைத்து ‘சிறந்த எழுத்தாளர்களையும்’ மனதார வாழ்த்துகிறோம். எங்களுக்கு வந்த ஏராளமான கதைகளில் உங்கள் படைப்புகள் தனித்து நிற்கின்றன, மேலும் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

அழகான காதல் கதைகள், அடுத்து என்ன என தொடர்ந்து கேட்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் கதைகள், முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்யும் திகில் கதைகள், சிறந்த கருத்துக்களைக் கொண்ட சமூகக் கதைகள், அறிவியல் புனைகதைகள், வரலாற்றுக் கதைகள் - அனைத்து வகை கதைகளையும் கண்டோம்! இந்தப் போட்டியில் எங்கள் எழுத்தாளர்களாகிய நீங்கள் பதிப்பித்த கதைகளின் தரம் மிகவும் குறிப்பிடத்தக்கது! ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மிக அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

சிறந்த 10 வாசகர் தேர்வு தொடர்கள்:

போட்டியின் எல்லா விதிகளையும் (ஆரம்ப தேதி, முடிவு தேதி, ஒவ்வொரு பாகத்திற்குமான வார்த்தை எண்ணிக்கை முதலியன) பின்பற்றி சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளில் இருந்தும் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் முதல் 10 கதைகள் தேர்வு செய்திருக்கிறோம் :

- எழுத்தாளரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் போட்டிக் கதையின் மொத்த வாசிப்பு எண்ணிக்கை. (வாசகர் எண்ணிக்கை/பாலோவர்ஸ்)

- அதிக வாசிப்பு மதிப்பெண் (Highest Engagement Score), அதாவது எத்தனை சதவீத வாசகர்கள் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுதாக வாசித்து முடித்துள்ளனர் என்ற அடிப்படையில் கணினித்தரவுகள் வழங்கும் மதிப்பீடு.

 --> உன் சர்வமும் சர்வாதிகாரியும் நானே - SONAJEEVA

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> அரக்கனை அடக்கிய அக்னி தாரகை - ஸ்வேதா கார்த்திக்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> எனக்கு மட்டும் பிழையா - Nivetha 6797

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்) 

--> கண்களால் கைது செய்யும் அரக்கனே - தமிழ் காதலி

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> மூங்கிலில் முகிழும் முத்தங்கள் நீ! - சனாகீத் 

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> என் உயிரில் கலந்தவளே(னே) - Little princess Minu

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> மயிலாய் வருடும் மகாலட்சுமியே! - Kani suresh

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> மந்திரப் புன்னகை - ஆபுத்திரன்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> சந்திர மாகாளி - சண்முகா சேதுராமச்சந்திரன்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> லப்... டப்... - Aneesa Ali

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

----------------------------------------------------------------------------------

நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 தொடர்கள் (ரேங்க் முறைமை இல்லை):

தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் மற்றும் பல விஷயங்கள்.

வாசகர் தேர்வுக்கான பத்து தொடர்களை நீக்கியபின், இந்தக் காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து கீழே உள்ள சிறந்த 10 தொடர்கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

--> நேச மழையே! - செவ்வந்தி துரை

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> தீராது அவன் இரு காதல் - G. அழகுலட்சுமி

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> நானே வருவேனே - Sudha Suresh

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> கொலைதேடும் இரவுகள் - Adithiya magendran

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> நிலவில் மறைந்த சூரியன் - தனலட்சும ஞானசேகரன்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> காந்தள் நீயே காதல் தீயே - வைஷூ அய்யம்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> என் உயிரோசை நீயடா - Rekha Sathish

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> நிலை இல்லா உலகில் நிலைக்கும் உன் பெயர் - Heera Heerthana

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> பகவான் அணுகிரகம் - வேலையா கார்த்திகேயன்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

--> திக்...திக்...திரி(ல்)ஷா - கவிதா ராமதாஸ்

(ரூ 4,000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட சான்றிதழ்)

---------------------------------------------------------------------------------

பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்:

கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. மேலே இடம்பிடித்திருக்கும் கதைகளுக்கு சவாலான போட்டியாக இறுதி வரை இருந்த குறிப்பிடத்தக்க படைப்புகள் இவை. நிச்சயமாக அடுத்த போட்டியில் பரிசுபட்டியலில் இவர்கள் இடம்பெறுவார்கள் என நம்புகிறோம்.

அனைத்து எழுத்தாளர்களுக்கும் மீண்டும் வாழ்த்துகள், உங்கள் பேனா தொடர்ந்து இது போன்ற அழகான புனைகதைகளை படைக்கும் என்று நம்புகிறோம்!

இப்போட்டியில் 80 பாகங்களைக் கடந்து கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் மற்றும் திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது பட்டியல் அடுத்த 15-20 நாட்களுக்குள் வெளியிடப்படும். வலைபதிவுகள் பகுதியை அவ்வப்போது பார்த்துக்கொள்ளவும்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

பெயர் (சான்றிதழில் இடம்பெற):

உங்கள் பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்:

மின்னஞ்சல் முகவரி:

தொலைபேசி எண்:

இன்னொரு backup தொலைபேசி எண்:

வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி:

பரிசுத்தொகை:

பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்):

வங்கிக்கணக்கு எண் :

IFSC எண் :

வங்கியின் பெயர்:

வங்கிக்கிளை:

PAN எண்:

வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்):

மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும்.

--> இங்கே கிளிக் செய்வதன் மூலம் 'சிறந்த எழுத்தாளர் விருது - சூப்பர் 7' போட்டியில் பங்கேற்கலாம்!

--> மாதம் ரூ.10,000/- சம்பாதிப்பதற்கான ரகசியங்களை அறிய இங்கே கிளிக் செய்து 'பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தில்' இணையுங்கள்!

வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பிரதிலிபி போட்டிக்குழு