
பிரதிலிபிபங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 10” போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை.
போட்டியில் கலந்துகொண்டு 80+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் நடுவர் தேர்வில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் முதலியன.
குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வெற்றியாளர்களில் பணப்பரிசு பெறும் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்னும் 2-3 நாட்களில் மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசை பெற்றுக் கொள்ளவும்.
| முதல் பரிசு | யாயும் யாயும் - சபா |
| இரண்டாம் பரிசு | அந்தமான் சம்பவங்கள் (மனித வேட்டை) - artista-மனோ |
| மூன்றாம் பரிசு | சதிராடும் கண்கள் - 💜sushanthi-b |
| 4-வது பரிசு | மஞ்சுஷா தேவி - சிலம்பொலி |
| 5-வது பரிசு | 💀😱👻கொலையும் கற்று மற. அத்தியாயம் 1. - revathi-selvam |
| 6-வது பரிசு | நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே - ஜெனி |
| 7-வது பரிசு | என்னுயிர் நீதானே உன் வதை நான் தானே! - ஸ்ரீ |
| 8-வது பரிசு | இருவரல்ல ஒருவர்.... - thuva-santha-kumar |
| 9-வது பரிசு | இனி எல்லாம் சுகமே - நர்மதா-சுப்ரமணியம் |
| 10-வது பரிசு | முந்நீர் படிகம் 1 - மோனிகா-சேகர் |
வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பிரதிலிபி போட்டிக்குழு