அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,
உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6’ இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தங்கள் பிரதிலிபி ப்ரொபைலில் முதல் முறையாக 60 பாகங்கள் கதையை பதிவிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் சிறப்பு கௌரவம் அளிக்கப்படும் என அறிவித்திருந்தோம்.
முதல்முறையாக ஒருவர் 60 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை.
நமது தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்!
நாங்கள் உறுதியளித்தபடி, 60 பாகங்கள் கொண்ட கதையை முதல்முறையாக எழுதிய எல்லா எழுத்தாளர்களின் நேர்காணலும் பிரதிலிபி பக்கத்தில் விரைவில் பதிப்பிக்கப்படும்.
இப்போட்டியில் முதல்முறையாக 60 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்-