பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 7” போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை.
போட்டியில் கலந்துகொண்டு 60+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் வாசகர் தேர்வு மற்றும் நடுவர் தேர்வு ஆகியவற்றில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வாசகர் தேர்வு வெற்றியாளர்கள், நடுவர் தேர்வு வெற்றியாளர்கள் மற்றும் 77 பாகம் எழுதிய எழுத்தாளர்கள் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்றே மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளவும்.
போட்டியின் எல்லா விதிகளையும் (ஆரம்ப தேதி, முடிவு தேதி, ஒவ்வொரு பாகத்திற்குமான வார்த்தை எண்ணிக்கை முதலியன) பின்பற்றி சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளில் இருந்தும் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் முதல் 7 கதைகள் தேர்வு செய்திருக்கிறோம் :
- எழுத்தாளரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் போட்டிக் கதையின் மொத்த வாசிப்பு எண்ணிக்கை. (வாசகர் எண்ணிக்கை/பாலோவர்ஸ்)
- அதிக வாசிப்பு மதிப்பெண் (Highest Engagement Score), அதாவது எத்தனை சதவீத வாசகர்கள் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுதாக வாசித்து முடித்துள்ளனர் என்ற அடிப்படையில் கணினித்தரவுகள் வழங்கும் மதிப்பீடு.
--> தகிக்கிறாள் தளிர்நிலா! - ராணி தென்றல்
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> 💘💘மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா??💘💘 - Nivi Ammu தமிழின் காதலி
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> இனியாவின் இறுதி நிமிடங்கள் - Nithya Mariappan 🖋️📖
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> 💙 என் முதலோடு முடிவானாய் - 🖊️மேக வாணி💖 Megavani
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> வா வா என் இதயமே... - Mithila Mahadev
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> அழகு அசுரனும்! அன்பு அன்றிலும்! - K Divyashobana
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> நான் காதலிக்கும் போதிமரமே (முழுத்தொகுப்பு) - கனவு காதலி ருத்திதா
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் மற்றும் பல விஷயங்கள்.
வாசகர் தேர்வுக்கான பத்து தொடர்களை நீக்கியபின், இந்தக் காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து கீழே உள்ள சிறந்த 7 தொடர்கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம்:
--> உயிரே.... உன் உயிரென நான் இருப்பேன்...💜💜 - சக்தி பிரியா மிரா 💜
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> அசுரனை வென்ற தேவதை💞 - 💕கவி மகிழினி 💕 நாவல்ஸ்
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> "பாவா பர்ணபாஸ்" - விஜய் தமிழ் பேய்க்கதை பிரின்ஸ்
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> ஹார்ட் பத்திரம்..! - கவிஞர் ஜார்ஜ் வாஷிங்டன்
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> அணைத்திடவா அகமலரே - கயல்விழியாழ் 🔥
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
--> திங்கள் வலித்த கால்அன்னோன் - Gowtham Shiva
(ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்)
போட்டியில் பங்கேற்று 77 பாகங்கள் எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. மேலே இடம்பிடித்திருக்கும் கதைகளுக்கு சவாலான போட்டியாக இறுதி வரை இருந்த குறிப்பிடத்தக்க படைப்புகள் இவை. நிச்சயமாக அடுத்த போட்டியில் பரிசுபட்டியலில் இவர்கள் இடம்பெறுவார்கள் என நம்புகிறோம்.
குறிப்பு: அனைத்து மின்சான்றிதழ் மற்றும் இராஜபத்திர பட்டய சான்றிதழ் எழுத்தாளர்களுக்கு [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும். அதேபோல் பங்குபெற்ற அனைத்து தொடர்களும் முகப்பு பக்க பேனரில் ஒரு வாரத்திற்குள் பட்டியலிடப்படும்.
வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிகளில் பங்கேற்கவும். சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 8 போட்டியில் பங்கேற்க - https://tamil.pratilipi.com/event/pme6ht3f1h
பிரதிலிபி படைப்பாளிகள் திட்டம் 2-இன் எழுத்து சவாலில் பங்கேற்க - https://tamil.pratilipi.com/event/3tfg269301
பிரதிலிபி போட்டிக்குழு