pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வெற்றி பெறத்தக்க தொடரை எழுதுங்கள்: சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிக்கான உதவிக்குறிப்புகள்!

24 மே 2024

எழுத்தாளருக்கு வணக்கம்!

 

சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிக்கு தொடக்கத்திலிருந்தே வாசகர்களை கவர்ந்திழுக்கும் வெற்றித் தொடரை எழுத நீங்கள் தயாரா? 

 

பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தின் அனைத்து பயிற்சி வகுப்புகளையும் தலைப்புவாரியாக கீழே கொடுத்திருக்கிறோம். பார்த்து பயனடையுங்கள்

 

→ கதைக்கரு & கதாபாத்திரங்கள்:

(1) ஒரு நெடுந்தொடருக்கு கதைக்கருவை எவ்வாறு வளர்ப்பது? 

(2) கதாபாத்திரங்களையும் , துணைக்கதைகளையும் எவ்வாறு உருவாக்குவது? 

 

→ கதையின் பிரிவு அடிப்படையில்:

(1) காதல் பிரிவில் ஒரு சுவாரஸ்யமான தொடரை உருவாக்குவது எப்படி?

(2) குடும்ப நாடகம், சமூகம் மற்றும் பெண்கள் கருப்பொருள்களில் சுவாரஸ்யமான தொடரை எழுதுவது எப்படி?

(3) மர்மம், பேண்டஸி மற்றும் திகில் கருப்பொருள்களுடன் சுவாரஸ்யமான தொடரை எழுதுவது எப்படி?

(4) ஒரு சுவாரஸ்யமான திரில்லர் தொடரை எழுதுவது எப்படி?



→ எழுதும் நுட்பங்கள் :

(1) கதையின் கோணம், நிகழ்வுகள், அவற்றின் வரிசை மற்றும் கதைக்கருவில் வரக்கூடிய சாத்தியமான ஓட்டைகளைப் புரிந்துகொள்வது

(2) அத்தியாயங்கள் பிரிப்பது மற்றும் காட்சிகளை எழுதுவது எப்படி? 

(3) உரையாடல் எழுதும் நுட்பம் மற்றும் முதல் அத்தியாயத்தை எவ்வாறு வடிவமைக்கலாம்.

(4) கதையில் வாசகரை இணைக்கும் கொக்கி மற்றும் கதைத் திருப்பம்: அவற்றை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் இறுதியில் மறக்கமுடியாத தொடரை  உருவாக்குவது எப்படி?

(5) வெவ்வேறு உணர்வுகளை எழுதுவது எப்படி?

 

→ திட்டமிடல் மற்றும் சவால்களை சமாளித்தல்:

 

(1) எழுதுவதற்கான அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது?

(2) எழுதும் போது ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் அவற்றின் தீர்வுகள் (தடைகள்/மன அழுத்தம்/நேரம்)

 

→ பிரதிலிபியில் நீண்ட தொடர் எழுதுவதன் நன்மைகள்:

(1) ஏன் பிரதிலிபி நீண்ட தொடர்களை ஊக்குவிக்கிறது? 

(2) பிரபல தொடர்களை ஆராய்தல் 

(3) வாசகர்களை ஈர்த்தல் (விளம்பரப்படுத்துதல்)

(4) பிரதிலிபி பரிந்துரை அமைப்பை புரிந்துகொள்ளுதல் 

(5) ப்ரீமியம் தொடர்கள் மூலம் மாதாந்திர ராயல்டி தொகை  

(6) சீசன் எழுதுதல் 

(7) நீண்ட தொடர்களின் பயன்கள்

 

எங்களது பயிற்சி வகுப்புகளின் காணொளி தொகுப்பு 1. 

 

எங்களது பயிற்சி வகுப்புகளின் காணொளி தொகுப்பு 2. 

 

→ இன்றே உங்கள் தொடரைத் திட்டமிடத் தொடங்குங்கள்! இந்த அம்சங்களைத் திட்டமிடுவதற்கு சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகும் (ஒவ்வொரு நாளும் ஒரு குறுகிய நேரத்தை ஒதுக்கும் பட்சத்தில் ), ஆனால் இந்த முதலீடு கணிசமான பலனைத் தரும். பிரதிலிபி சூப்பர் ரைட்டர் விருதுகளில் அங்கீகாரம் பெறுவதோடு, தொடர்ந்து சரளமாக எழுதுவதற்கும், எழுத்துத் தடையைத் தவிர்ப்பதற்கும் நீங்கள் இதன் மூலம் தயார் ஆவீர்கள்.

 

இங்கே க்ளிக் செய்து இந்தியாவின் மிகப்பெரிய போட்டியான சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டியின் பங்கேருங்கள் | சீசன் 8

 

உங்கள் கதைக்களம் அல்லது கதாபாத்திர வளர்ச்சி தொடர்பான கேள்விகளை நீங்கள் ஜெமினியிடம் கேட்கலாம். ஜெமினி உங்கள் உள்ளீட்டை ஆராய்ந்து, ஆலோசனைகள், யோசனைகள் மற்றும் அடுத்து செல்லவேண்டிய திசைகளை வழங்கும். வெவ்வேறு AI தளங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்கலாம். உங்களது கற்பனைத் திறனோடு இதுபோன்ற தளங்களை கொண்டு அதனை மெருகேற்றுவதே சிறந்த அணுகுமுறையாகும். இதில் உங்கள் கற்பனைத்திறமை மிக மிக முக்கியம்.

 

அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்!

 

பிரதிலிபி போட்டிகள் குழு