அன்புள்ள எழுத்தாளருக்கு.
பிரதிலிபியில் ஒரு வெற்றிகரமான எழுத்துப் பயணத்தை உருவாக்குவது என்பது வெறும் அதிகமான கதைகளை எழுதுவது மட்டுமே அல்ல. அது வாசகர்களைக் கவரும் வகையில் சுவாரசியமான படைப்புகளை உருவாக்குவது, தொடர்ந்து பதிப்பிப்பது மற்றும் உங்களது படைப்புகளுக்கு அவர்கள் நீண்ட கால சப்போர்ட்டர்களாக மாற ஊக்குவிப்பதாகும்.
உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் வாசகர் வட்டத்தை வளர்க்கவும் சில எளிய மற்றும் நடைமுறை வழிகள் இதோ:
- 1
ப்ரீமியம் வருமான வாய்ப்புகளை அன்லாக் செய்யுங்கள்
நீங்கள் கோல்டன் பேட்ஜ் (200 ஃபாலோவர்ஸ்) பெற்றவுடன், ப்ரீமியம் தொடர்களைப் பதிப்பிக்க தகுதி பெறுவீர்கள். 16 அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாயங்கள் கொண்ட தற்போதைய தொடர்களை ப்ரீமியம் ஆக மாற்றிக்கொள்ளலாம். புதிய தொடர்கள் முதல் 15 இலவச அத்தியாயங்களுக்குப் பிறகு தானாகவே ப்ரீமியம் ஆகிவிடும்.
வாசகர்கள் லாக் செய்யப்பட்ட அத்தியாயங்களை பிரதிலிபி ப்ரீமியம், சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன், காயின்கள் அல்லது டெய்லி அன்லாக்ஸ் மூலம் படிக்க முடியும். ஒரு எழுத்தாளராக, வாசகர்கள் உங்களது படைப்புகளை அன்லாக் செய்யும்போது, அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் உங்களுக்கான பங்கை நீங்கள் பெறுவீர்கள்.
- 2
உங்கள் படைப்புகளுக்கு சப்போர்ட் செய்ய வாசகர்களை ஊக்குவியுங்கள்
பல வாசகர்களுக்குத் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கு சப்போர்ட் செய்வது மிகவும் பிடிக்கும், ஆனால் தங்களால் எப்படி உதவ முடியும் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட வேண்டியிருக்கும்.
ப்ரீமியம் மற்றும் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன்களின் நன்மைகளைத் தொடர்ந்து அவர்களுக்கு விளக்குங்கள். உங்கள் கதைகள் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யும்படி வாசகர்களை ஊக்குவியுங்கள். ஒரு அத்தியாயத்தின் முடிவில் நீங்கள் வைக்கும் ஒரு எளிய வேண்டுகோள் கூட சில நேரங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
- 3
பலமான ஒரு வாசகர் சமூகத்தை உருவாக்குங்கள்
வாசகர்கள் தங்களோடு நெருக்கமாக உணரும் எழுத்தாளர்களுக்கு சப்போர்ட் செய்யவே அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
உங்கள் வாசகர்களுடன் தொடர்பில் இருக்க போஸ்ட்கள், சாட்ரூம்கள், கேள்வி-பதில் (Q&A) நிகழ்வுகள் மற்றும் நன்றி தெரிவிக்கும் செய்திகளைப் பயன்படுத்துங்கள். உங்களது எழுத்துப் பயணம், கதையின் கதாபாத்திரங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் மற்றும் கதையின் பின்னணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, வாசகர்கள் உங்களது கதைகளோடும் உங்கள் வெற்றியோடும் தங்களை இன்னும் அதிகமாக இணைத்துக் கொள்ள உதவும்.
- 4
நீண்ட தொடர்களை எழுதுங்கள்
நீண்ட தொடர்கள், வாசகர்கள் தொடர்ந்து கதையோடு இணைந்திருக்கவும் அத்தியாயங்களை அன்லாக் செய்து படிக்கவும் அதிக வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
அதிக எண்ணிக்கையிலான பாகங்களைக் கொண்ட கதைகள் பொதுவாக நல்ல வரவேற்பைப் பெறுகின்றன; ஏனெனில் வாசகர்கள் அந்த கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தோடு தங்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துக் கொள்கிறார்கள். உங்களுக்கு அனுபவம் கூடும்போது, வாசகர்கள் படித்து மகிழ அதிக படைப்புகளை வழங்கும் வகையில் நீண்ட தொடர்களின் ஒரு பெரிய நூலகத்தையே உருவாக்குவதை இலக்காகக் கொள்ளுங்கள்.
5. அழுத்தமான தொடக்கத்தை உருவாக்கி, கதையின் விறுவிறுப்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்
ஒரு சுவாரசியமான மற்றும் அழுத்தமான தொடக்கம், வாசகர்களைப் ப்ரீமியம் அத்தியாயங்கள் வரை தொடர்ந்து படிக்கத் தூண்டும்.
கதையின் போக்கை முன்னோக்கிக் கொண்டு செல்லுங்கள், ஆரம்பத்திலேயே சுவாரசியமான திருப்பங்களை அறிமுகப்படுத்துங்கள், மேலும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசகர்களிடம் ஆர்வம், விறுவிறுப்பு அல்லது அடுத்தது என்ன என்ற தவிப்பை (cliffhanger) ஏற்படுத்தும் வகையில் முடியுங்கள். அடுத்தது என்ன நடக்கும் என்பதை அறிய வாசகர்கள் ஆவலாக இருக்கும்போது, அவர்கள் தொடர்ந்து அத்தியாயங்களை அன்லாக் செய்து படிக்க அதிக வாய்ப்புள்ளது.
- 5
தொடர்ந்து பதிப்பியுங்கள்
புதிய வாசகர்களை உருவாக்குவதில் தொடர்ச்சி அல்லது வழக்கமாகப் பதிப்பிப்பது மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.
புதிய அத்தியாயங்கள் எப்போது வரும் என்று தெரிந்துகொள்வதை வாசகர்கள் விரும்புவார்கள், மேலும் வழக்கமாகப் பதிப்பிப்பது உங்களது கதைகள் வாசகர்களின் பார்வையில் தொடர்ந்து இருக்க உதவும். நீங்கள் தினமும் பதிப்பித்தாலும் சரி, அல்லது வாரத்திற்கு சில முறை பதிப்பித்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைப் பின்பற்றுவது வாசகர்கள் உங்கள் கதைகளைத் தேடி வந்து படிக்கும் வழக்கத்தை உருவாக்க உதவும்.
- 6
போட்டிகள் மற்றும் சவால்களில் பங்கேற்கவும்
எழுத்துப் போட்டிகள், நிகழ்வுகள் மற்றும் சவால்கள் உங்களது படைப்புகளைப் புதிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த உதவும்.
இந்த வாய்ப்புகள் உங்களது படைப்புகளின் விசிபிலிட்டியை (visibility) அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எழுதும் வேகத்தை மேம்படுத்தவும், காலப்போக்கில் உங்களது படைப்புகளின் எண்ணிக்கையைத் திறம்பட அதிகரிக்கவும் உதவுகின்றன.
- 7
முதல் பார்வையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துங்கள்
வாசகர்கள் உங்கள் எழுத்தை வாசிப்பதற்கு முன்பே, கதையின் அட்டைப் படம், தலைப்பு மற்றும் 'படைப்பைப் பற்றி' (Description) பகுதியைத்தான் பார்க்கிறார்கள்.
ஒரு கவர்ச்சிகரமான அட்டைப் படம், தெளிவான தலைப்பு மற்றும் கவரும்படியான 'படைப்பைப் பற்றி' விவரம் ஆகியவை ஒரு வாசகர் உங்கள் கதையைத் திறந்து படிப்பதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும். முதல் பார்வையில் ஏற்படும் இந்தச் சிறந்த தாக்கம், அதிக வாசகர்களை ஈர்க்கவும் நீண்ட கால வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
- 8
பொதுவான தவறுகளைத் தவிர்க்கவும்
உங்கள் எழுத்து எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், சில பழக்கவழக்கங்கள் உங்கள் வருமானத்தைக் குறைத்துவிடக்கூடும்.
கதைகளைப் பதிப்பிப்பதில் நீண்ட இடைவெளி, பாதியில் நின்ற கதைகள், சுவாரசியமில்லாத தொடக்கம், மோசமான வடிவமைப்பு மற்றும் வாசகர்களின் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆகியவை வாசகர்களின் வருகையைக் குறைத்துவிடும். தொடர்ச்சி மற்றும் தரமான படைப்புகள் மூலம் வாசகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது நீண்ட கால வெற்றிக்கு இன்றியமையாததாகும்.
- 9
இறுதிச் செய்தி
வெற்றிகரமான எழுத்தாளர்கள் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்: வாசகர்களைக் கவரும் கதைகளை உருவாக்குவது, தொடர்ந்து பதிப்பிப்பது மற்றும் வாசகர்களுடன் வலுவான உறவை வளர்ப்பது. உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் எவ்வளவு சிறந்த படைப்புகளை வழங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கான வாசகர் வட்டம், விசிபிலிட்டி மற்றும் வருமானம் அதிகரிக்கும்.
மகிழ்ச்சியாக எழுதுங்கள்!
— பிரதிலிபி குழு
