அன்புள்ள எழுத்தாளருக்கு,
அதிகப்படியான ஃபாலோவர்ஸ் மற்றும் வாசகர்களைப் பெறுவதற்குச் சற்று காலம் எடுக்கும், ஆனால் நீங்கள் தொடர்ந்து செய்யும் சிறிய முயற்சிகள் உங்களது வளர்ச்சிக்கு உதவும். இந்தத் தளத்தைப் பற்றி நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, சுவாரசியமான கதைகளை எழுதி, வாசகர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, உங்களது விசிபிலிட்டி (visibility) மெதுவாக மேம்படும்.
- 1
பிரதிலிபி ஆப்பைப் (App) புரிந்துகொள்ளுங்கள்
பிரதிலிபி ஆப்பை ஆராய்ந்து, வாசகர்கள் கதைகளுடன் எவ்வாறு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தளத்தில் எது சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொள்ள பல்வேறு அம்சங்கள் (features), பிரிவுகள், பட்டன்கள் மற்றும் பிரபலமான கதைகளைச் சரிபார்க்கவும்.
- 2
ஒரு சுறுசுறுப்பான வாசகராக மாறுங்கள்
பிற எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து, உங்களது உண்மையான, ஆழமான விமர்சனங்களை (reviews) எழுதுங்கள். உங்களது நல்ல விமர்சனங்கள், பிற வாசகர்களும் எழுத்தாளர்களும் உங்களது ப்ரொபைலைக் கண்டறிய பெரிதும் உதவும்.
- 3
பிற எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஃபாலோ செய்யுங்கள்
பிரதிலிபி சமூகத்தின் ஒரு பகுதியாக மாறுவது, உங்களுக்கான விசிபிலிட்டியைப் பெற உதவும். பிறரின் ப்ரொபைல்களுக்குச் சென்று, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை ஃபாலோ செய்யுங்கள், மேலும் இந்தத் தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
- 4
பிரதிலிபிக்கு வெளியேயும் உங்களது கதைகளை விளம்பரப்படுத்துங்கள்
உங்களது கதைகளின் லிங்க்குகளை வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களைப் பிரதிலிபியில் உங்களை ஃபாலோ செய்யவும், உங்களது கதைகளைப் படிக்கவும் ஊக்குவியுங்கள்.
- 5
ஃபாலோ, ரேட்டிங் மற்றும் விமர்சனம் செய்யுமாறு வாசகர்களிடம் கேளுங்கள்
உங்களது அத்தியாயங்களின் முடிவில், உங்களை ஃபாலோ செய்யுமாறும், கதையின் மீதான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் வாசகர்களிடம் பணிவோடு கேட்டுக்கொள்ளுங்கள். யூடியூப் சேனலைச் சப்ஸ்கிரைப் செய்வது போல, இந்த எளிய நினைவூட்டல் வாசகர்களை உங்களுக்கு ஆதரவளிக்கத் தூண்டும்.
- 6
வாசகர்களுடன் கலந்துரையாடுங்கள்
வாசகர்களின் விமர்சனங்கள், செய்திகள் மற்றும் கமெண்ட்களுக்கு அன்போடு பதிலளியுங்கள். வாசகர்கள் தங்களை நீங்கள் மதிப்பதாக உணரும்போது, அவர்கள் மீண்டும் கமெண்ட் செய்யவும், உங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
- 7
கருத்துகளைக் கையாளும்போது கனிவாக இருங்கள்
வாசகர்கள் நேர்மறையான மற்றும் விமர்சன ரீதியான கருத்துகள் இரண்டையுமே வழங்கலாம். அவர்களுக்குப் பணிவோடு பதிலளியுங்கள், வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், மேலும் உங்களது எழுத்தை மேம்படுத்தப் பயனுள்ள கருத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- 8
நீண்ட மற்றும் சுவாரசியமான தொடர்களை எழுதுங்கள்
நீண்ட தொடர்கள் பொதுவாக வாசகர்களை நீண்ட காலத்திற்குக் கதையோடு இணைந்திருக்க வைக்கின்றன. வாசகர்களை ஈர்க்கவும், அவர்களைத் தக்கவைக்கவும் அழுத்தமான கதைக் களங்கள், சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் தொடர்ச்சியான அத்தியாயங்களில் கவனம் செலுத்துங்கள்.
- 9
முடிவாக
அதிக ஃபாலோவர்ஸ் மற்றும் வாசகர்களைப் பெற, எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள், சீராக எழுதுங்கள், வாசகர்களுடன் தொடர்பில் இருங்கள், மேலும் உங்களது கதைகளைத் தொடர்ந்து மேம்படுத்துங்கள். வளர்ச்சிக்குக் காலம் எடுக்கலாம், ஆனால் உங்களது தொடர்ச்சியான முயற்சி பிரதிலிபியில் ஒரு பலமான வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கும்.
மகிழ்ச்சியாக எழுதுங்கள்!
— பிரதிலிபி குழு
