அன்புள்ள எழுத்தாளருக்கு,
பிரதிலிபி உங்களது படைப்பாற்றலுக்கான ஒரு புகலிடமாகும். இந்தத் தளத்தை அனைத்து வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பாதுகாப்பான, மரியாதைக்குரிய மற்றும் பயனுள்ள இடமாக வைத்திருக்க, ஒவ்வொரு எழுத்தாளரும் சில முக்கியமான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
இந்தக் குறிப்புகள் உங்களது கதைகள், உங்கள் ப்ரொபைல் மற்றும் பிரதிலிபியில் உங்களது நீண்ட கால வளர்ச்சியைப் பாதுகாக்க உதவும்.
- 1
உங்களுடைய சொந்தப் படைப்புகளை மட்டுமே பதிப்பியுங்கள்
நீங்கள் சொந்தமாக எழுதிய கதைகளை மட்டுமே அப்லோடு செய்யுங்கள். காப்புரிமை பெறாமல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட படைப்புகள், பிறரின் கதைகள் அல்லது பொதுப் பயன்பாட்டில் உள்ள (public-domain) படைப்புகளைப் பிரதி எடுத்துப் பதிப்பிக்கக் கூடாது.
- 2
பிறரின் படைப்புகளைப் பயன்படுத்தும் முன் அனுமதி பெறுங்கள்
நீங்கள் வேறொருவரின் கதை, படம், மொழிபெயர்ப்பு அல்லது ஏதேனும் ஒரு பொருளைப் பயன்படுத்த விரும்பினால், முதலில் அவர்களிடம் முறையான எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். படைப்பாளருக்குக் கிரெடிட் (credit) கொடுப்பது மட்டுமே போதாது, அதைப் பயன்படுத்துவதற்கான உரிமையும் உங்களிடம் இருக்க வேண்டும்.
- 3
அனைத்து படைப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்
உங்களது கதைகள் பிரதிலிபியின் படைப்பு , காப்புரிமை மற்றும் டேக் செய்யும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இருக்க வேண்டும். உங்கள் படைப்பு ஒரு பெரிய வாசகர் வட்டத்திற்குப் பொருத்தமானதாகவும், தளத்தின் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- 4
சட்டவிரோதமான அல்லது ஆபத்தான படைப்புகளை ப் பதிப்பிக்க வேண்டாம்
சட்டத்தை மீறும் அல்லது ஆபத்தான செயல்களை ஊக்குவிக்கும் எதையும் பதிப்பிக்க வேண்டாம். சட்டம், பாதுகாப்பு அல்லது சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய படைப்புகளை த் தவிர்க்கவும்.
- 5
வெறுப்பு, அவதூறு அல்லது தனிப்பட்ட படைப்புகளை த் தவிர்க்கவும்
வெறுப்பைப் பரப்பும், பிறரை இழிவுபடுத்தும், அவதூறு பரப்பும் அல்லது அனுமதியின்றி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் படைப்புகளை ப் பதிப்பிக்கக் கூடாது. எப்போதும் பொறுப்புணர்வோடு எழுதுங்கள், மற்றவர்களுடன் நாகரிகமாகத் தொடர்புகொள்ளுங்கள்.
- 6
பிற பயனர்களுக்கு மதிப்பளியுங்கள்
விமர்சனங்கள், கமெண்ட்கள், செய்திகள் அல்லது சாட்ரூம் உரையாடல்களுக்குப் பதிலளிக்கும் போது மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். வாசகர்கள் உங்களது கருத்தோடு உடன்படாதபோதும், அவர்களுக்குப் பணிவுடன் பதிலளியுங்கள்; வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
- 7
வாசகர்களிடமிருந்து பணம் வசூலிக்கக் கூடாது
தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, தொண்டு நிறுவனங்களுக்காகவோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ வாசகர்களிடமிருந்து பணம் வசூலிக்கப் பிரதிலிபியைப் பயன்படுத்தக் கூடாது. இத்தகைய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தத் தளம் பொறுப்பேற்காது.
- 8
போலி அல்லது பல ப்ரொபைல்களை உருவாக்க வேண்டாம்
போலி கணக்குகளை உருவாக்க வேண்டாம், மற்றொருவரைப் போல நடிக்க வேண்டாம், அல்லது உங்கள் கணக்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ முடக்கப்பட்டிருந்தால் மற்றொரு ப்ரொபைலைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் உண்மையான எழுத்தாளர் அடையாளத்தைப் பயன்படுத்தி, உங்கள் ப்ரொபைலின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுங்கள்.
- 9
விதிகளுக்குப் புறம்பான படைப்புகளை ரிப்போர்ட் செய்யுங்கள்
வழிகாட்டுதல்களை மீறும் ஏதேனும் ஒரு கதை, போஸ்ட், கமெண்ட் அல்லது ப்ரொபைலை நீங்கள் கண்டால், அதை ரிப்போர்ட் செய்யுங்கள். இந்தச் சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினராக இருப்பதன் மூலம், பிரதிலிபியைப் பாதுகாப்பாக வைத்திருக்க எழுத்தாளர்கள் உதவ முடியும்.
- 10
உங்கள் காப்புரிமையைப் புரிந்துகொள்ளுங்கள்
உங்களது அசல் கதையின் காப்புரிமை எழுத்தாளராகிய உங்களுக்கே சொந்தமானது. நீங்கள் உருவாக்கிப் பதிப்பிக்கும் அசல் படைப்பிற்கான ஆசிரியர் உரிமை எப்போதும் உங்களிடமே இருக்கும்.
- 11
வெளி ஒப்பந்தங்களில் கவனமாக இருங்கள்
கதை உரிமைகள், அடாப்டேஷன் உரிமைகள் அல்லது பதிப்புரிமைக்காக ஏதேனும் மூன்றாம் தரப்பினர் (third party) உங்களை அணுகினால், அதன் விதிமுறைகளைக் கவனமாகப் படியுங்கள். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன்பு முறையான சட்ட ஆலோசனையைப் பெறுவது நல்லது.
- 12
வருவாய் ஈட்டும் விதிகளைக் கவனமாகப் படியுங்கள்
பிரதிலிபி அவ்வப்போது பல்வேறு வருவாய் ஈட்டும் திட்டங்கள் அல்லது அம்சங்களை அறிமுகப்படுத்தலாம். அதில் இணைவதற்கு முன்பு, அதுகுறித்த கேள்விகள் மற்றும் பதில்களைப் (FAQs) படித்து, அந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- 13
உங்கள் கதைகளின் பேக்கப் பிரதிகளை வைத்திருங்கள்
உங்களது அத்தியாயங்களின் தனிப்பட்ட பிரதிகளை எப்போதும் பிரதிலிபிக்கு வெளியேயும் சேமித்து (backup) வைத்திடுங்கள். தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது தற்செயலான இழப்புகள் ஏற்படும் போது இது உங்கள் கடின உழைப்பைப் பாதுகாக்க உதவும்.
- 14
புகார்கள் வரும்போது சிக்கல்களைச் சரிசெய்யுங்கள்
உங்களது கதையின் மீது ஏதேனும் புகார் வந்தாலோ அல்லது அது விதிகளுக்குப் புறம்பாக இருந்தாலோ, பிரதிலிபி அதை உங்களிடம் தெரிவித்துச் சரிசெய்யக் கோரலாம். கதை நீக்கப்படுவதையோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகளையோ தவிர்க்க அத்தகைய சிக்கல்களை விரைவாகச் சரிசெய்ய முயலுங்கள்.
- 15
பிரதிலிபியை உங்கள் சொந்தத் தளமாகக் கருதுங்கள்
பொறுப்புணர்வோடு எழுதுவதன் மூலமும், வாசகர்களை மதிப்பதன் மூலமும், விதிகளைப் பின்பற்றுவதன் மூலமும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவுங்கள். பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளம் ஒவ்வொரு எழுத்தாளரும் சிறப்பாக வளர உதவும்.
- 16
முடிவாக,
ஒரு பொறுப்புள்ள எழுத்தாளராக இருப்பது என்பது நல்ல கதைகளை எழுதுவது மட்டுமே அல்ல. அது விதிகளை மதிப்பது, உங்கள் படைப்பைப் பாதுகாப்பது மற்றும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும் ஆகும்.
இந்த வழிகாட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றி, உங்களது எழுத்துப் பயணத்தைத் நம்பிக்கையுடன் தொடருங்கள்.
மகிழ்ச்சியாக எழுதுங்கள்!
— பிரதிலிபி குழு
