pratilipi-logo பிரதிலிபி
தமிழ்
← All articles வருமானம் ஈட்டுதல் & பாதுகாப்பு

பாதுகாப்பாக எழுதுவோம்: ஒவ்வொரு எழுத்தாளரும் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய படைப்பு வழிகாட்டுதல்கள் (Content Guidelines)

அன்பான எழுத்தாளருக்கு,

உங்களது கதைகள் பல்வேறு வயதினர், பின்னணி மற்றும் அனுபவங்களைக் கொண்ட வாசகர்களைச் சென்றடைகின்றன. பொறுப்புணர்வோடு எழுதுவது வாசகர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாசிப்புச் சூழலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்களது கதைகள், ப்ரொபைல் தெரிவுநிலை (visibility) மற்றும் வருமானத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

ஒவ்வொரு எழுத்தாளரும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கியமான வழிகாட்டுதல்கள் இதோ:

  1. 1

    எந்தெந்த படைப்புகள் அனுமதிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்

    காதல், டிராமா, த்ரில்லர், ஹாரர், எமோஷனல் கதைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகள் எனப் பல்வேறு வகையான பிரிவுகள் மற்றும் கதைக் களங்களை பிரதிலிபி ஆதரிக்கிறது.

    எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் ஆழமான உணர்வுகளையும் அர்த்தமுள்ள அனுபவங்களையும் தாராளமாக விவரிக்கலாம். ஆனால், அவை சிந்திக்கும்படியாகவும் மரியாதைக்குரிய முறையிலும் வழங்கப்பட வேண்டும்.

  2. 2

    எந்தெந்த படைப்புகள் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்

    சில வகையான படைப்புகள் தளத்தின் கொள்கைகளை (policies) மீறுவதாக அமையலாம். இதனால் உங்களது கதைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது கதையே நீக்கப்படலாம்.

    அத்துமீறிய பாலியல் வர்ணனைகள், கொடூரமான வன்முறை, தற்கொலை அல்லது சுய-தீங்குகளைப் பெருமைப்படுத்துதல், வெறுப்புப் பேச்சு, பிறரைத் துன்புறுத்துதல், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல் மற்றும் தவறான அட்டைப் படங்கள் ஆகியவை இதில் அடங்கும். இத்தகைய படைப்புகளைத் தவிர்ப்பது உங்கள் கதைகளையும் உங்கள் எழுத்தாளர் ப்ரொபைலையும் பாதுகாக்க உதவும்.

  3. 3

    உணர்வுப்பூர்வமான கதைக் களங்களைக் கவனமாகக் கையாளுங்கள்

    முதிர்ந்த (Mature) கதைக் களங்கள் கதையின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கலாம், ஆனால் அவற்றை நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

    கொடூரமான அல்லது அத்துமீறிய வர்ணனைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கதாபாத்திரங்களின் உணர்வுகள், விளைவுகள், அவர்களின் வளர்ச்சி மற்றும் மீண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். வாசகர்கள் பெரும்பாலும் வெளிப்படையான வர்ணனைகளை விட உணர்வுப்பூர்வமான தாக்கத்துடன்தான் தங்களை அதிகம் இணைத்துக் கொள்கிறார்கள்.

  4. 4

    வயதுக் கட்டுப்பாடுகளின் (Age Ratings) வரம்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்

    ஒரு கதைக்கு "18+" லேபிள் அல்லது படைப்பு எச்சரிக்கையை (content warning) சேர்ப்பதால் மட்டும், தளத்தால் தடைசெய்யப்பட்ட படைப்புகள் அனுமதிக்கப்பட்டதாக மாறிவிடாது.

    வயதுக் கட்டுப்பாடுகள் வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை, அவை தளத்தின் கொள்கைகளை மீறுவதற்காக அல்ல. நீங்கள் என்னதான் எச்சரிக்கைகளைக் குறிப்பிட்டிருந்தாலும், கதைகள் கண்டிப்பாக படைப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இருக்க வேண்டும்.

  5. 5

    சிக்கல்களைக் குறைக்கும் வகையில் எழுதுங்கள்

    கொள்கை மீறல்கள் பெரும்பாலான நேரங்களில் திட்டமிடாமல், தற்செயலாகவே நடக்கின்றன.

    மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, அத்துமீறிய வர்ணனைகளைத் தவிர்ப்பது, காதலை ஆழமான உணர்வுகளோடு எழுதுவது மற்றும் பாதுகாப்பான அட்டைப் படங்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை படைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கும். ஆரம்பத்தில் நாம் எடுக்கும் சிறிய முன்னெச்சரிக்கைகள், பின்னாளில் வரும் பெரிய பிரச்சினைகளைத் தடுத்துவிடும்.

  6. 6

    உங்கள் கதைகளையும் ப்ரொபைலையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

    ஒரு சிறந்த எழுத்தாளர் ப்ரொபைல் என்பது காலப்போக்கில் உருவாக்கப்படுவது, அதை நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

    உங்களது படைப்புகளின் பேக்கப் (backups) பிரதிகளை எப்போதும் வைத்திருங்கள், கமெண்ட்கள் அல்லது போஸ்ட்களில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், மேலும் ஏதேனும் சிக்கலான படைப்பைக் கண்டால் அதில் நேரடியாக ஈடுபடாமல் ரிப்போர்ட் செய்யவும். தளத்தில் எப்போதுமே ஒரு நேர்மறையான அணுகுமுறையைத் தக்கவைப்பது உங்களது நீண்ட கால வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும்.

  7. 7

    கதைகள் நீக்கப்படுவதை முன்கூட்டியே தடுத்துவிடுங்கள்

    படைப்புப் பரிசீலனைகள் (Content reviews) சில நேரங்களில் கதையின் விசிபிலிட்டி மற்றும் வாசகர்களின் வருகையைப் பாதிக்கலாம்.

    உங்களது பழைய பாகங்கள், 'படைப்பைப் பற்றி' (Description) மற்றும் அட்டைப் படங்கள் ஆகியவை தற்போதும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாத்தியமுள்ள பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்வது, உங்களது வாசகர் வட்டத்தைப் பாதுகாப்பதோடு தடங்கல்களையும் தவிர்க்க உதவும்.

  8. 8

    இறுதிச் செய்தி

    பொறுப்புணர்வோடு எழுதுவது உங்களது கற்பனைத் திறனைக் கட்டுப்படுத்தாது. மாறாக, அது உங்கள் கதைகள் அதிக வாசகர்களைச் சென்றடையவும், நீண்ட காலம் தளத்தில் நிலைத்திருக்கவும், இந்தத் தளத்தில் உங்களது எழுத்துப் பயணம் தடையின்றித் தொடரவும் உதவுகிறது.

    பாதுகாப்பான, அர்த்தமுள்ள கதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்களது வாசகர்களையும் ஒரு எழுத்தாளராக உங்களது எதிர்கால வளர்ச்சியையும் நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.

மகிழ்ச்சியாக எழுதுங்கள்!

— பிரதிலிபி குழு

இது உதவியாக இருந்ததா? வருமானம் ஈட்டுதல் & பாதுகாப்பு-ல் மேலும் கட்டுரைகள் படிக்கவும். கூடுதல் கட்டுரைகள்