pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பதிப்பித்தல் வழிகாட்டி

1. யாரெல்லாம் பிரதிலிபியில் படைப்புகள் பதிப்பிக்கலாம்?

எழுதவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பும் எவரும் பிரதிலிபியில் படைப்புகள் பதிப்பிக்கலாம். எழுதப்படும் படைப்பின் வகை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதா. - கதை, கவிதை, கட்டுரை. பிரதிலிபியில் எழுத ஒருவர் தொழில்முறை எழுத்தாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

2. பிரதிலிபியில் எழுதுவது எப்படி?

i. முதலில், எழுத்தாளர் பகுதியில் (Pen icon), 'புதிய படைப்பை எழுத' என்றிருக்கும் சிவப்புப் பெட்டியை க்ளிக் செய்ய வேண்டும். க்ளிக் செய்தால் படைப்பு பக்கத்திற்கு எடுத்துச் செல்லும்.

ii. படைப்பு பக்கத்தில், தமிழில் தட்டச்சு செய்யும் சாப்ட்வேரை உபயோகித்து உங்களது படைப்பை தட்டச்சு செய்ய வேண்டும்.

iii. படைப்பை எழுதி முடித்தவுடன், 'அப்லோட்' ஐகானை க்ளிக் செய்து பதிப்பிக்க வேண்டும் அல்லது வலதுபுறம் மேலே இருக்கும் 'சேமி' பொத்தானை க்ளிக் செய்து படைப்பை வரைவுகளில் (Drafts) சேமித்துக் கொள்ளலாம் (வரைவுகளில் இருக்கும் படைப்பு உங்களுக்கு மட்டுமே தெரியும்).

3. பிரதிலிபியில் படைப்பை பதிப்பிப்பது எப்படி?

i. படைப்பை எழுதி முடித்தவுடன், 'அப்லோட்' ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

ii. பின் உங்களது படைப்பின் 'தலைப்பு மற்றும் படைப்பை பற்றி (விருப்பத் தேர்வு)' போன்ற விவரங்களை எழுத வேண்டும்.

iii. பின் படைப்புக்கு ஏற்ற முகப்புப் படத்தை (thumbnail) சேர்க்க வேண்டும். முகப்பு படம் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும் அல்லது அனைவரும் உபயோகிக்க கூடிய வகையில் public domain source ஆக இருக்க வேண்டும். (உதா. - http://pixabay.com) படங்களை கூகுளில் இருந்து எடுக்க வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானவை காப்புரிமைக்கு உட்பட்ட படமாக இருக்கும். அதனை உபயோக்கிப்பது காப்புரிமைக்கு எதிரானது.

iv. கடைசியாக, படைப்புக்குத் தகுந்த பிரிவை (Category) தேர்ந்தெடுக்கவும்.

v. பின் 'பதிப்பிக்க' பொத்தானை அழுத்தவும்.

4. இப்போது பிரதிலிபியில் தொடர்கதைகளை நீங்களே பதிப்பித்துக் கொள்ளலாம். 

1) நீங்கள் ஏற்கனவே பல பாகங்களாக தொடர்கதை பதிப்பித்திருந்தால், அதனை தொகுத்து, முழுத்தொகுப்பாக இப்போது பதிப்பித்துக் கொள்ளலாம். 
2) ஏற்கனவே தொடர்கதையாக பதிப்பித்துள்ள படைப்பில், அடுத்த பாகத்தை சேர்க்கவேண்டுமெனில் இப்போது நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். 
3) ஒரு தொடர்கதையை புதிதாக உருவாக்க வேண்டுமெனில், நீங்களே அதனை தொடர்கதையாக (பாகங்கள் தொகுப்பாக இருக்கும்படி) பதிப்பித்துக் கொள்ளலாம். 

5. பதிப்பிக்கப்பட்ட படைப்புகளை எங்கே பார்க்கலாம்?

செயலியில் உங்களது படைப்புகளை நிறைய இடங்களில் பார்க்கலாம்.

i. எழுத்தாளர் பகுதியில் (pen icon tab), உங்களது பதிப்பிக்கப்பட்ட படைப்புகளும், வரைவுகளும் தனித்தனி பகுதியாக காண்பிக்கப்படும்.

ii. உங்களது ப்ரோபைலில் பதிப்பிக்கப்பட்ட படைப்புகள் மட்டும் காண்பிக்கப்படும்.

6. பதிப்பித்தல் தோல்வியடைந்தால் என்ன செய்வது?

பதிப்பித்தல் தோல்வியடைவது தொழில்நுட்பக் கோளாறாகவோ, நெட்வொர்க் பிரச்சனையாகவோ இருக்கலாம். அப்படி வந்தால் திரும்பவும் பதிப்பிக்க முயற்சிக்கவும். தொடர்ந்து பதிப்பித்தல் தோல்வியடைந்தால், எங்களைத் தொடர்கொள்ளவும்.