pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

General

பிரதிலிபியை உபயோகித்து என்னவெல்லாம் செய்யலாம்?

பிரதிலிபியில் கதை, கவிதை, கட்டுரை, நாவல் என எதுவும் எழுதலாம் மற்றும் அவற்றை இலவசமாக வாசிக்கலாம். பிரதிலிபியில் பதிவு செய்து, உங்கள் கணக்கை துவங்கி வாசிக்கவோ - எழுதவோ தொடங்கலாம். இங்கே உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களை ஃபாலோ செய்யலாம், பிடித்த படைப்புகளை வாசிக்கலாம், நூலகத்தில் சேர்த்துக் கொள்ளலாம், எழுத்தாளருடன் உரையாடலாம், படைப்புகளுக்கு விமர்சனம் வழங்கலாம் மற்றும் பலவற்றை செய்யலாம்.

பிரதிலிபி செயலியை எங்கே டவுன்லோட் செய்வது?

பிரதிலிபி ஆண்ட்ராய்ட் செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்யவும் -  

(https://play.google.com/store/apps/details?id=com.pratilipi.mobile.android&hl=en)

பிரதிலிபியில் உள்நுழைவது (லாக் இன் செய்வது) எப்படி?

பிரதிலிபியில் உங்களது கூகுள் கணக்கு மற்றும் முகநூல் கணக்கு கொண்டோ, அல்லது மின்னஞ்சல் முகவரி - பாஸ்வேர்ட் கொண்டோ லாக் இன் செய்யலாம்.

பாஸ்வேர்ட்டை மறந்துவிட்டால் என்ன செய்வது?

லாக் இன் பக்கத்திற்கு சென்று :

i) முதலில் உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்

ii) பின் அதன் கீழே இருக்கும் 'மறந்துவிட்டீர்களா?' பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்

iii) பின்னர் உங்களது மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்துவிட்டு 'லிங்க் அனுப்ப' பொத்தானை க்ளிக் செய்யவும்

iv) நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு பிரதிலிபியிடமிருந்து மின்னஞ்சல் வந்திருக்கும்

v) அதில் இருக்கும் லிங்கை க்ளிக் செய்து புதிய பாஸ்வேர்ட்டை உருவாக்கவும்

vi) பின் பிரதிலிபிக்கு சென்று புதிய பாஸ்வேர்ட்டை கொடுத்து எழுதலாம் அல்லது வாசிக்கலாம்!

கணக்கில் இருந்து வெளியேறுவது எப்படி?

பிரதிலிபி செயலி அல்லது தளத்திற்கு சென்று :

i) உங்கள் முகப்பு படத்தை க்ளிக் செய்யவும் 

ii) செட்டிங்க்ஸ் பக்கத்திற்கு செல்லவும்

iii) 'வெளியேற' பொத்தானை அழுத்தவும். அழுத்தினால், உங்கள் கணக்கில் இருந்து வெளியேறலாம்.

கணக்கை டெலீட் செய்ய என்ன செய்வது?

உங்கள் ப்ரொபைலின் சுட்டியை எங்களுக்கு அனுப்பி டெலீட் செய்ய கோரிக்கை வைக்கவும். நாங்கள் உங்களுக்கு உதவுவோம். 

என் கணக்கு

உங்கள் ப்ரொபைலில் உங்கள் கணக்கின் விவரங்கள் இருக்கும். நீங்கள் பதிப்பித்த படைப்புகள், உங்கள் கலெக்சன்கள், கலந்துரையாடலில் பங்கேற்ற விவரங்கள் மற்றும் நீங்கள் பிரதிலிபியில் எவ்வளவு வாசித்துள்ளீர்கள் போன்ற இருக்கும்.

நோட்டிஃபிக்கேஷன் விவரங்கள்

நீங்கள் எந்தெந்த அறிவிப்புகளை பெற வேண்டும், எப்போதெல்லாம் பெற வேண்டும், மேலும் குறிப்பிட்ட நோட்டிஃபிக்கேஷனை நிறுத்த போன்றவற்றை செய்ய ‘அறிவிப்புகள்’ பகுதிக்கு செல்ல வேண்டும். அதற்கு பிரதிலிபி செயலியில் :

i) உங்கள் ப்ரோபைலை க்ளிக் செய்யவும்

ii) செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும்

iii) அங்கே அறிவிப்புகள் பகுதிக்கு செல்லவும்

iv) தேவையான மாற்றங்களை செய்துகொள்ளவும்

பிரதிலிபியின் படைப்புத்தொகுப்பு

பிரதிலிபியின் படைப்புத்தொகுப்பு அனுப்பும் கால அளவை, மேலே குறிப்பிட்ட அறிவிப்புகள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று மாற்றலாம். ஒருவேளை உங்களுக்கு படைப்புத்தொகுப்பு வேண்டாமெனில், ‘பிரதிலிபியின் படைப்புத்தொகுப்பு’ ஆப்ஷனில் கடைசியாக இருக்கும் 'எப்போதும் வேண்டாம்' பொத்தானை அழுத்தி நிறுத்திக் கொள்ளவும்.

பாஸ்வேர்ட்டை மாற்ற என்ன செய்வது?

பிரதிலிபி செயலியில் சென்று :

i) உங்கள் ப்ரோபைலை க்ளிக் செய்யுங்கள்

ii)  பின் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும்

iii) 'என் கணக்கு' பகுதிக்கு செல்லவும்

iv) அதில் கடைசியில் இருக்கும் 'கடவுச்சொல்லை மாற்ற' பொத்தானை அழுத்தவும்

v) அங்கே பழைய பாஸ்வேர்ட்டை கொடுத்து, புதிய பாஸ்வேர்ட்டை அப்டேட் செய்து கொள்ளவும்

புதிய வசதியை கோருவது அல்லது பரிந்துரை செய்வது எப்படி?

பிரதிலிபி செயலியில் 

i) உங்கள் ப்ரோபைலை க்ளிக் செய்யுங்கள்

ii) பின் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும்

iii) 'உதவி' பகுதிக்கு செல்லவும்

iv) அங்கே 'உங்கள் கருத்துக்களை பகிரவும்' பகுதியில் பொருத்தமான பகுதியைத் தேர்ந்தெடுத்து உங்கள் கோரிக்கைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

பிரதிலிபியை தொடர்புகொள்ள

எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். 4 முதல் 72 மணி நேரத்திற்குள் உங்களது கேள்விக்கான பதில் அளிக்கப்படும்.