pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

திகில் கதைகள் | Horror Stories in Tamil

தமிழ் எழுத்துலகில் ஆரம்ப காலம் தொட்டே திகில் கதைகள் (horror stories in tamil) என்று ஒரு தனியான வாசகர் வட்டம் இருந்து வருகிறது.

ஊரெல்லாம் அடங்கிக் கிடக்கும் ஒரு அர்த்தச் சாமத்தில், உங்களுடைய சொந்த மொழியில், திகில் கதைகளை (horror Stories in tamil) வாசித்து அதில் கிடைக்கும் உச்சகட்ட பயத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா..?

"ஒரு அடர்ந்த காட்டுக்கு நடுவில் அந்த அமானுஷ்ய பங்களா இருந்தது. அதிலிருந்து கேட்ட"வீல்.." என்ற சத்தம் காடு முழுவதும் எதிரொலித்தது",

"மரங்கள் நிறைந்த ஆள் அரவமற்ற சாலையில், அந்த ஒற்றை வாகனம் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு வினோதமான உருவம் தென்பட்டது.."

இப்படியான திகில் கதைகள் (horror stories in tamil) விரும்பி வாசிப்பவரா நீங்கள்.. அப்படியானால், இந்தப் பகுதி உங்களுக்கானது.

பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும், எத்தனையோ ஹாரர் திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதற்குக் காரணம், நம்மை அச்சுறுத்தும் வகையில் அதில் இடம் பெற்றிருக்கும், திரில்லான காட்சி அமைப்புகள் தான். அதே 'திக் திக்' அனுபவத்தை நாம் வாசிப்பிலும் அடைய முடியும். பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பு, இதயத்தை உலுக்கும் அமானுஷ்யம், திகிலடைய வைக்கும் திருப்பங்கள் என்று ஹாரர் விரும்பிகளுக்கென்றே எழுதப்பட்ட பல திகில் கதைகளை நீங்கள் இங்கு வாசிக்கமுடியும்.

ஆவி, பூதம், பேய் இதெல்லாம் உண்மையா.. பொய்யா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவற்றையெல்லாம் கதாபாத்திரங்களாக வைத்து படைக்கப்படும் இத்தகைய திகில் கதைகள் (horror stories in tamil) உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தரும்.

சிறுகதைகள், நான்கைந்து பாகங்கள் கொண்ட குறுங்கதைகள், பெரிய நாவல்கள் என்று உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப எல்லா வகை திகில் கதைகளும் இங்கு காணக் கிடைக்கின்றன. உங்கள் பேவரிட் எழுத்தாளர்கள் தொடங்கி, பல புதிய எழுத்தாளர்களும் திகில் கதைகளில் தங்கள் கைவரிசையைக் காட்டி, நம்மை பயமுறுத்த காத்திருக்கிறார்கள்.

ஹாரர் கதைகள் ஹாலிவுட் மூவிகளுக்காக மட்டுமே நேர்ந்து விடப்பட்டது என்ற நிலை மாறி, நம்முடைய சொந்த மொழியில் விதவிதமான அமானுஷ்ய கதைகளை நீங்கள் வாசித்து மகிழலாம்.

ஒற்றை வீடு, ஒரே ஒரு டெலிபோன் என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான கதாபாத்திரங்கள், நினைத்துக் கூட பார்த்திராத கோணங்கள் என இந்த திகில் கதைகள் (horror stories in tamil) நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த உலகம் உங்களின் கற்னைக்கும் எட்டாத ஒன்றாய் இருக்கும்.

ரோலர் கோஸ்டரில் ஏறி அமர்ந்து அது மெதுவாக சுற்ற ஆரம்பிக்கும் போது.. உங்கள் வயிற்றுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். அதுவே, மெது மெதுவாக வேகம் கூடி.. சட்டென்றுஒரு கணத்தில் அதன் உச்சியில் கொண்டு போய் ஒரு செகண்ட் நிறுத்தும் பொழுது.. உங்கள் இதயம் எகிறி வெளியே குதிப்பது போல உணர்வீர்கள். அப்படியான, ஒரு ரோலர் கோஸ்டர்பயணத்தை நீங்கள் இந்த திகில் கதைகளில் (horror stories in tamil) அனுபவிக்க முடியும்.

இன்னும் ஏன் தாமதம்.. வாசிப்பவர்களின் இதயத்திற்கு உச்சகட்ட பரபரப்பை அளிக்கும் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும்
உடலால் ஒருவன் எவ்வளவு வேதனை அடைந்தாலும் அது ஒரு சில நாட்கள் மட்டுமே மீண்டும் அவன் அதிலிருந்து மீண்டு நலம் அடைவான், ஆனால் எவனொருவன் உடலாலும் மனதாலும் பாதிப்பு அடைகின்றானோ அதிலிருந்து அவனால் எளிதில் மீண்டு வர முடிவதில்லை ஏன் ?                                🐉பாகம் ஒன்று 🐉 அவரது கடைசி மூச்சு விடுதலை அடைந்தது போல அவரது உடல் ஒரு உதறு உதறியது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த சிவா ஒரு விதமாய் கலங்கினான் சுமார் 60 வயதுக்கு மேல் இருந்த அந்த பெரியவரின் கண்கள் சிவாவின் கையிலிருந்த ஓலைச்சுவடிகளையே ...
4.7 (3K)
1L+ படித்தவர்கள்