இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள என் படைப்புகள் அனைத்து காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதி இன்றி இவற்றை ஆடியோ , வீடியோ , pdf வடிவில் என எவ்வாறாக மற்றவர்கள் பயன்படுத்தினாலும் தேவையற்ற பாதிப்புக்கு உள்ளாக நேரலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வணக்கம் சகோகளே, (என்னை பற்றி சில வரிகள்...)
என் பெயர் சுஜாதா நடராஜன். கணவர் திரு. நடராஜன். எங்களுக்கு இரண்டு மழழைச் செல்வங்கள். கல்வித்தகுதி B.com ( CA ) . பணியாற்றிய துறைகள்... தனியார் பள்ளி ஆசிரியை , ஆடிட்டர் அலுவலகத்தில் இரண்டாண்டு பணியுடன் பயிற்சி , அபாகஸ் ஆசிரியை , தையல் கலை பயிற்சியுடன் பணி , இல்லத்தரசி இப்போது எழுத்தாளர். வாழ்வின் பல இன்னல்களை இன்முகத்துடன் கடந்து வந்துக்கொண்டிருக்கும் பெண்பாவை. அனுபவ பாடங்களையும்.. மனதில் தோன்றும் எண்ணங்களையும்.. வலிகள் தரும் வார்த்தை நயங்களையும் எழுத்துக்களாக பதிப்பிக்க முயல்கிறேன். முதலில் வாசகி அதன்பின் எழுதாளராயாக மாற்றம் அடைந்த என்னை ஊக்கப்படுத்தி எழுதவைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
நான் ஏன் எழுதுகிறேன் !
தோண்ட தோண்ட ஊறும் நீர் போல
எண்ணம் வெளியேற வெளியேற
அறிவும் விருத்தி அடைகிறது !
இடையறாத வாழ்க்கை பயணத்தால்
எதிர்கொள்ளும் மனச்சோர்வு நீங்கி
புதுவெல்லம் பாய்ந்து
புத்துணர்வு பெருகுகிறது !
எதிர்மறை எண்ணங்கள்
நெஞ்சத்தை சூழ்கொள்ளும் வேளையிலே நேர்மறையான
சிந்தனை ஊற்றை உருவாகி
என்னை நானே மீட்டெடுக்கிறேன் !
சிதறி கிடக்கும் செய்திகளும்
துணுக்குகளும் சமூக அவலங்களும்
அணுதினமும் என்னை
கரு பொருளாக்கி
நல்ல கருத்தை விதைத்திடு
என்றே முழங்கிச் செல்கிறது !
கருத்து வேறுபாட்டால் பிரிந்திடும்
உறவுகளும் நட்புகளும் தம்பதியரும்
சற்றே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
வாழ்வில் உயரலாம் என்று
உரக்க சொல்லிட வலியுருத்துகிறது !
நாளைய சமுதாயம் நலமாக மாறிட
நம்மால் முடிந்த சிறிய விதையை இடுவோம் என்றே எழுதுகிறேன்....
என் எண்ணம் ஈடேறும்
என்ற நம்பிக்கையில் !
நல்லதை விதைபோம் !
நல்லதை அறுவடை செய்வோம் !
என்றே எழுதுகிறேன் !
- சுஜாதா நடராஜன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு