படைக்களப் பாவலர் துரை.மூர்த்தி
இந்தியப் படையணி (INDIAN ARMY)யில் , சென்னை பொறியியல் படையணி (Madras Engineering Group & Centre, Bangalore) இணைந்து பயிற்சி பெற்று, பதினாலே போ முன்னாலே ( 14 Engineer Regiment ) என்று தமிழ் மணக்க அழைக்கப்படும் படைப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சீனம், பாகிசுதான், நேபாளம், திபெத்து எல்லைகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.பணியின் நிமித்தம் இந்தியாவின் " அலகாபாத் (உத்திரப் பிரதேசம்), நியு சல்பாய்குரி (மேற்கு வங்கம்), கபுப் (சிக்கிம்), நசீராபாத்,அச்மீர்,பொக்ரான்,செய்சல்மீர்,செய்ப்பூர் (இராசத்தான்), அகமதாபாத்து (குசராத்து), லே (லே லடாக்), அமிர்தசரசு (பஞ்சாபு), பெங்களூர் (கர்நாடகா) போன்ற மாநிலங்களில் பணியாற்றியவர்.
மரபுப் பாக்கள், சிறுவர் பாடல்கள், கட்டுரை,சிறுகதைகள், சிறுவர் சிறுகதைகள், கவிதை நாடகம், நாடகம்,இலக்கிய ஆய்வுகள் என 50 நூல்களைப் படைத்தவர்.
மாவட்டம், மாநிலம்,உலக அளவிலான போட்டிகளில் பரிசு வென்றவர்.
எழுத்தாளர், பேச்சாளர்,பட்டிமன்ற நடுவர்.
தனித்தமிழ் இயக்க நடையர்.
வெண்பா,கட்டளைக் கலித்துறை,ஒற்றெழுத்தே இல்லாமல், இதழகல் பாக்கள் வடிக்க வல்லவர்.