pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஜெயமோகனின் கன்னியாகுமரி

4
576

<p>திண்ணை.காமில் வெளிவந்த என் கட்டுரை</p>

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுத்தாளர் வ.ந.கிரிதரன், (நவரத்தினம் கிரிதரன்) பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மற்றும் நாவல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் (http://www.pathivukal.com)ஆசிரியராகவிருந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து அதனை வெளியிட்டு வருகின்றார். இவர் இலங்கையின் யாழ்ப்பாண நகரிலுள்ள வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவாப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் இளமாணி பட்டம் பெற்றார். பின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்து, இலங்கை அரசியல் நிலை காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். அங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார். இவரின் படைப்புக்கள் தமிழகம் மற்றும் இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாக &#39;அமெரிக்கா&#39; மற்றும் &#39;நல்லூர் ராஜதானி நகர அமைப்பு&#39; ஆகிய நூல்களைத் தமிழகத்தில் வெளியிட்டுள்ளன. குமரன் பப்ளிஷர்ஸ் &#39;அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்&#39;, &#39;வன்னி மண்&#39;, &#39;கணங்களும் குணங்களும்&#39; மற்றும் &#39;மண்ணின் குரல்&#39; ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பினை &#39;மண்ணின் குரல்&#39; என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது. மங்கை பதிப்பகம் (கனடா) &#39;மண்ணின் குரல்&#39; என்னும் நூலினை வெளியிட்டுள்ளது. கனடாவில் வெளியான முதல் தமிழ் நாவல் இதுவே. இவரது கவிதைகள் சில &#39;எழுக அதிமானுடா&#39; என்னும் தலைப்பில் கனடாவில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக் குடிவரவாளனாக இவர் அலைந்து திரிந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் நாவலான &#39;குடிவரவாளன்&#39; (பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் வெளியான நாவல் பின்னர் &#39;குடிவரவாளன்&#39; என்னும் பெயருக்கு மாற்றமடைந்த நாவல்.) மின்னூலாக வெளியாகியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கி வெளிவந்து பலரின் கவனத்தை ஈர்த்த &#39;பனியும் பனையும்&#39; சிறுகதைத் தொகுப்பு இவரது &#39;ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை&#39; கதையினையும் உள்ளடக்கியுள்ளது. கணையாழியின் &#39;ஈழத்துச் சிறப்பிதழில்&#39; இவரது &#39;சொந்தக்காரன்&#39; சிறுகதை வெளிவந்துள்ளது. புது தில்லியிலிருந்து வெளிவரும் &#39;வடக்கு வாசல் &#39; இதழ் 2008இல் வெளியிட்ட இலக்கிய மலர், ஆழி பப்ளிஷர்ஸ் (தமிழகம்) வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், காற்றுவெளி (இலண்டன்) வெளியிட்ட &#39;இலக்கியப் பூக்கள்&#39; மற்றும் விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் அரை நூற்றாண்டு இலக்கியப் பணியைக் கெளரவிக்கும் முகமாக வெளியான &#39;வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்&#39; தொகுப்பு நூல் ஆகியவற்றில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. &#39;ஞானம்&#39; (இலங்கை) இலக்கிய சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட புலம்பெயர் தமிழ் இலக்கியத்தொகுப்பில் இவரது சிறுகதையான &#39;சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை&#39; என்னும் சிறுகதையும் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இவரது சிறுகதைகள், நாவல்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரது படைப்புகளை முன்வைத்து M.Phil பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இவரது படைப்புகளை முன்வைத்துத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவரது முதலாவது சிறுகதையான &#39;சலனங்கள்&#39; அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவு தினச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. விகடன் பவளவிழாப் போட்டியில் &#39;பல்லிக்கூடம்&#39; என்ற கதை ரூபா 3,000 பரிசினையும், சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸ் இணைந்து நடாத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் இவரது &#39;நான் அவனில்லை&#39; என்ற இவரது அறிவியற் சிறுகதை வட அமெரிக்காவுக்குரிய சிறந்த அறிவியற் கதையாகத் தெரிவு செய்யப்பட்டு ரூபா 5,000 பரிசினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகள் பதிவுகள், திண்ணை, ஆறாம் திணை, கீற்று, இசங்கமம், கூடல் ஆகிய ஆகிய இணைய இதழ்களிலும், ஈழநாடு, தினகரன், சிந்தாமணி, ஈழமணி, சுதந்திரன், தாயகம் (கனடா), வைகறை (கனடா), ஈழநாடு (கனடா) ஆகிய பத்திரிகைகளிலும், சிரித்திரன், கண்மணி, வெற்றிமணி , நுட்பம், ஜீவநதி, தேடல் (கன்டா), தாயகம் (கனடா), ஆனந்த விகடன், கணையாழி, அம்ருதா, சுபமங்களா, உயிர் நிழல் (பிரான்ஸ்), சுவடுகள் (நோர்வே), துளிர் (இந்தியா) ஆகிய சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. பல இணையத்தளங்கள், சஞ்சிகைகளில் மீள் பிரசுரமாகியுமுள்ளன. தற்போது டொராண்டோ, கனடாவில் வசித்துவரும் இவர் மணமானவர். மனைவி: கலைச்செல்வி கிரிதரன். இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தை: தமயந்தி, தீபிகா.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    sathish b
    26 نومبر 2017
    மிக தட்டையான புரிதலுடன் எழுதப்பட்ட விமர்சனம் . கன்னியாகுமரி அடிப்படையில் அதிகம் பேசுவது மனதிற்க்கும் காமத்திற்க்கும் உள்ள உறவை பற்றி பேசுகிறது. அதுவும் ஆண் மனதின் காமம் பற்றி பேசுகிறது. ரவி மூன்று நான்கு பெண்களுடன் உறவு கொள்ளும் போது அவன் மனம் கொள்ளும் நிறைவும் நிறைவின்மையும் மிக மிக நுட்பமான தளத்தில் சொல்லப்பட்டிருக்கும். உடலலவில் பெரும் திருப்தி தந்த அந்த பெண்ணை வெகு விரைவாக கடந்து செல்கிறான் . ஆனால் மனதளவில் தனக்கு இனையான ரவீனாவை அத்தனை எளிதில் கடக்க முடிவதில்லை. அவளை ஜெயிக்க முடியாமல் திட்டுகிறான். இந்த முரண் நாவலின் ஒரு அடிப்படை. ஆனால் மையம் என்பது ஒரு பெண்ணை காமத்திற்காக கூட்டி வந்து அங்கே அவளுக்கு நிகழும் வன்புணர்வை தன் இயலாமையால் கோழைதனத்தால் பொருப்பின்மையால் தடுக்கமுடியாதவனாகிறான் . அதோடு அந்த பெண்ணை அப்படியே நிராதரவாக விட்டு ஓடுகிறான். நான்கு பேரால் புணரப்பட்டவள் என்ற என்னமே அவளை அவன் மனதில் மிக கேவலமானவளாக நினைக்க வைக்கிறது. ஆனால் அதற்க்கு அவன் மட்டுமே காரணம் என்பது அவனுக்கு உறைப்பதே இல்லை. அந்த பேடித்தனமே அந்த நாவலின் மையம் . மீண்டும் அவளை சந்திக்கும் போது அவன் மனம் துனுக்குருகிறது. அவள் உடைந்து சின்னா பின்னமாகி இருக்க வேண்டுமே என யோசிக்கிறது. அவள் அவ்வாறு ஆகாமல் தன்னை தாண்டி பல மடங்கு உயரத்திற்க்கு பரந்து விரிந்து வளர்ந்திருப்பது கடும் கோபத்தையும் எரிச்சலையும் பொராமையையும் தருகிறது . அவன் வெற்றி பெற்ற கலைஞன் என்பதாலேயே அவன் அகங்காரம் மிக மிக மோசமாக காயமடைகிறது. எல்லா பேடிகளும் கோழைகளும் சென்று சேரும் நாற்றம் மிகுந்த கீழ்மைக்கு அவனும் செல்கிறான். அவளை வன்புணர்வு செய்தவனை தேடி அவள் முன் நிறுத்துகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல அவள் நிலைகுலைவதில்லை . இன்னும் இன்னும் உயரம் செல்கிறாள். இவன் இன்னும் இன்னும் கீழே செல்கிறான் . ஆன்ம ரீதியா கடும் சிதைவை அடைந்து தனித்தவனாக தன் நரகத்தை அனுபவிக்கிறான். அவ்வாறானவர்களுக்கு அந்த தனிமையே சாத்தியமான எல்லை என்பதே அந்த நாவலின் சாரம் . ஆண் பெண் உறவில் ஆண் பெண்ணிடம் சரணடைதல் மூலமாக மட்டுமே அந்த உறவை நிலைபடுத்திக்கொள்ள முடியும் . ஆனால் ஆணின் அகங்காரம் அந்த சரணடைதலை சாத்தியமாக்க விடுவதில்லை. அந்த சரணடைதலில் இருக்கும் சிக்கலை பற்றி இந்த நாவல் பேசுகிறது . நாயகி தனக்கு நிகழும் அந்த விபத்தில் இருந்து கடும் தீவிரத்துடன் மேலெலுகிறாள் . உடல் சார்ந்த பிடிப்பில் இருந்து விலகி மேலெலுகிறாள் . உயர் விஞ்ஞானத்தை பாதையாக கொண்டு பொது மனிதனின் நன்மைக்கு அவளால் ஆன அதிகபட்ச சாத்தியமான ஒன்றை நிகழ்த்த கடும் தீவிரத்துடன் ஓடத்துவங்கிவிடுகிறாள் . அங்கே அவளுக்கு உடல் தேவை என்பது ஒரு தடை . அதை மிக சாதரணமாக கையாள்கிறாள். அவ்வளவே . கற்ப்பு என்பது குடும்ப அமைப்பிற்க்கு ஒரு அடிப்படையாக இருந்திருக்கிறது. நடைமுறையில் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் குடும்ப அமைப்பிற்க்குள் வரும் போது கற்ப்பென்பது முக்கியமான அடிப்படையாக இருக்கலாம். ஆனால் குடும்ப அமைப்பில் இல்லாதவர்களுக்கு அது எவ்வகையிலும் அடிப்படை அல்ல. இந்த நாவல் பேசும் மிக முக்கியமான இன்னொரு தளம். இதை எதையுமே கணக்கில் கொள்ளாமல் ஆணும் பெண்ணும் பல உறவு கொள்வதை , ஆண் பெண்ணை திட்டும் இடங்களை மட்டுமே கணக்கில் கொண்டு விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்.
  • author
    george Joseph
    14 اپریل 2019
    நேர்மையான பதிவு!
  • author
    naagasooriya
    22 جنوری 2018
    ஆழ்ந்த புரிதலை நோக்கி வாசகரை வழி நடத்தும் விமர்சனம் இது. நாகசூரியா