அப்பா பெயர் பூ. கிருஷ்ணமூர்த்தி, என் பெயர் மகேஸ்வரி, நான் என் அம்மாவுக்கு நிறைய ஆபரேஷன் செய்ததால் வீட்டிற்கு மூத்த மகள் நான் அதான் என் படிப்பு ஒன்பதாம் வகுப்பு சேர்ந்து நின்று விட்டேன், சமையல் செய்ய ஆரம்பித்த வயது 10 என் அம்மா அப்பா தங்கை,தம்பி,
என அவர்களை சுற்றி தான் இருந்தது,18 வயதில் உதயம் புக்கில் கதை, கவிதைகள் வெளிவந்தது,
என் திருமணம் முடிந்து எனக்கு இரண்டு குழந்தைகள், பிறந்ததும் என் அப்பா இறந்து விட்டார், அவருக்கு மட்டும் தான் என் ஆசை கதை எழுவது என்று தெரியும் என் கவிதைகள் கதைகள் வாங்கி படிப்பார், தாய் சேய் நலம் மருத்துவமனையில் மார்க்கெட்டிங் வேலை செய்தேன், அதன் பின் டாக்டர் ஸ்மைல் டென்டல் ஆஸ்பிடல டாக்டர் அசிஸ்டன்ட் வேலை பார்த்தேன்,இப்ப வீட்டில் தான் இருக்கிறேன். நான் இறந்து போவதற்கு முன் என்னை இந்த கதைகள் முலம் வெளி வந்து விட வேண்டும் என்று போராடினேன், எங்க தெருவில் இருக்கும் பொன்னியம்மன் கோயிலுக்கு புக் அடித்தேன், எனக்கு தெய்வம் அருள் தந்த மாதிரி இந்த பிரதிலிபி கிடைத்தது, என் எழுத்தில் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள், எனக்கு பிடிக்கவில்லை என்ற கவலை நிறைய இருக்கு,ஆனால் படித்தவர்கள் என்னை உங்களின் தோழியாக நினைத்தது சந்தோஷம், என் அப்பாவின் ஆத்மாவும், என் தெய்வங்கள் ஆன உங்களின் ஆதரவுகள் இருந்தால் என் லட்சியம் வெல்லும் உங்களை வணங்கி கேட்கிறேன், நீங்கள் எல்லாம் படித்தவர்கள் எனக்கு உங்களின் ஆதரவு வேண்டும், உண்மையை சொன்னால் எனக்கு பேச தெரியாது
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு மகேஸ்வரி
கிருஷ்ணமூர்த்தி