அழகப்பா பல்கலைக்கழகம் 1985 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது , பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகப் பணிநியமனம்செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன் , பல்கலைக்கழகத்தில் 1999 ம் ஆண்டு தேர்வுப் பிரிவில் பணியாற்றி வந்தபோது “ திசைதெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர் “, “ குறலிலும் சோதிடம் ” என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன் . அக்கட்டுரைகளைஅப்போது காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முதவராகப் பணியாற்றி வந்த முருகசாமி ஐயா அவர்களிடம் காண்பித்தேன் . அவர்கள்என்னைப்பெரிதும் உற்சாகப் படுத்தி அவற்றை இதழ்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்கள் . இதனால் “ வள்ளுவரும் வாஸ்துவும் ”என்ற எனது கட்டுரை 2000 ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் , முதன் முதலாகத் தினபூமி – ஞாயிறு வார இதழில் வெளியாகியது .கல்வியாளர்கள் மத்தியில் அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது . திருக்குறளின் அதிகார அமைப்பு முறைக்கு யாரும் மறுக்கமுடியாத அளவிற்குவிளக்கம் அளித்ததற்காக அனைவரும் என்னைப் பாராட்டினார்கள் . பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்முதுகலை (M.A. தமிழ் ) பயின்றேன் .
பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பயின்றேன் . அப்பாடத்திட்டத்தின் ஒருபகுதியாகத் திருப்பூவணம் திருக்கோயில் பற்றியஆய்வினை மேற்கொண்டேன் . ஆய்வு தொடர்பாகத் திருமுறைகளையும் மற்றும் பல ஆன்மிக நூல்கனையும் கற்றேன் . திருப்பூவணம் தொடர்பான அனைத்துநூல்களையும் சேகரித்துப் படித்தும் , திருக்கோயில் அமைப்பை பலவராக ஆராய்ந்தும் எனது ஆய்வினை நிறைவு செய்தேன் .