pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நேசம் சுமந்த வானம்பாடி

4.3
2445

“என்னங்க உங்கப்பாக்கிட்ட இது வேணுமான்னு கேளுங்க... சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது...” மருமகள் சுந்தரி, உள்ளிருந்து குரல் கொடுக்க “என்னது... ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
'பரிவை' சே.குமார்

தேவகோட்டைக்கு அருகிலுள்ள பரியன்வயல் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் எழுத்து கிராமத்து வாசனையும் செட்டிநாட்டுப் பேச்சு வழக்குமே கொண்டது. எனக்கு இப்படித்தான் எழுத வரும். இதெல்லாம் என்னய்யா எழுத்து என்ற வார்த்தைகளை அதிகம் கேட்க நேரிட்டாலும் எனது எழுத்தின் பாணியில் இருந்து யாருக்காகவும் மாற விரும்பாதவன். என சுக, துக்கங்களைத் தூக்கிச் சுமக்கும் ஒரு நண்பனாய் என் எழுத்து எனக்கு வாய்த்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது என்னை எழுத்துக்குள் இழுத்து வந்தவர் நான் தந்தையாக மதிக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன். அவர் போட்ட பிள்ளையார் சுழியின் பின்னே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடை நின்றாலும் முழுவதுமாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதி 'மனசு'. மிகச் சிறப்பாக நடத்தினோம். நண்பர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது ஆனால் மனசு இன்னும் மனசுக்குள்... முதல் கவிதை தாமரையில் மலர்ந்தது. முதல் கதை தினபூமி-கதைபூமியில் துளிர்த்தது.அதன் பின் பாக்யா, உதயம், தினத்தந்தி குடும்ப மலர், தினமணிக் கதிர், மங்கையர் சிகரம் மற்றும் சில பத்திரிக்கைகளிலும் அதீதம், சிங்கப்பூர் கிளிஷே, அகல், கொலுசு, காற்றுவெளி போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. வெட்டி பிளாக்கர்ஸ், சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் ரூபனின் எழுத்துப் படைப்புகள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசும், தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் அகலின் சிறுகதைப் போட்டிகளில் புத்தகப் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. எனது கருத்து பாக்யா மக்கள் மனசு பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. என்னில் பாதி என் அன்பு மனைவி நித்யா, என் உயிராய் இரண்டு செல்வ(ல)ங்கள்... மகள் ஸ்ருதி, மகன் விஷால். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் எனக்கு பொழுதுபோக்கு மற்றும் தனிமை கொல்லி என் எழுத்து மட்டுமே. நிறைய எழுதுவேன்... இங்கிருப்பதால் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது குறைந்து விட்டது. எனது முதல் புத்தகமான் 'எதிர்சேவை' சிறுகதை தொகுப்பு (2020), தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது பெற்றிருக்கிறது. வேரும் விழுதுகளும் (2021), திருவிழா (2022) என்னும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது புத்தகங்களை எனது நண்பர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் வெளியிட்டுள்ளார். நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சேலம் ராஜா
    02 अप्रैल 2016
    கடந்த வாரம் இப்படி தான் என் வீட்டில் கூட யாரிடமும் சொல்லாமல் பழைய சாமான்களை கட்டி வைத்திருந்த சாக்குபையில் எதையோ வெகு நேரமாக தேடிக்கொண்டிருந்தார். என்னத்த அப்படி என்று அம்மா விசனப்பட்டுக்கொள்ள.. அந்த சின்ன ரேடியோ ஒண்ணு இருந்ததே எங்க னு கேட்டார். .   டீவியில் சேர் போட்டு மூழ்கியிருந்த நான் கூட கடிந்து கொண்டேன்  ஆமாம் இப்ப ரேடியோ கேட்கறது தான் தவறுதா என.    யார் கண்டா என் அப்பாவிற்கும் கூட யாரேனும் கமலமாகியிருந்திருப்பார்களோ என்று தங்களின் கதை படித்த பிறகே என்னையே நான் நொந்து கொண்டேன் அன்றைய என் கடிதலுக்காக.     மிகவும் அருமை நண்பா. கதை. 
  • author
    Sriram Balasubramaniam
    22 फ़रवरी 2016
    பாராட்டுகள் குமார். ராகவனின் இடத்தில் நின்று யோசித்தால் பாவமாக இருக்கிறது. எத்தனை சொல்லப் படாத காதல்கள் அறியப்படாமலேயே போகின்றன? அவர் அந்த ரேடியோவை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் பரணில் இருக்கும் பொது அதைப் பார்ப்பதைவிட, தினமும் அதைக் கண்களால் தரிசித்திருக்கலாமே என்று தோன்றுகிறது. இந்த மாதிரி மருமகள் எல்லோருக்கும் கிடைக்கவும் மனம் பிரார்த்திக்கிறது. பாராட்டுகள் குமார்.
  • author
    22 फ़रवरी 2016
    குமார் அருமையான கதை. தலைப்பு வெகு அருமை! சொல்லாத காதல்! இப்படித்தான் ஏதேனும் ஒரு காரணத்தால் உண்மையான காதல்கள் கூடச் சொல்லப்படாமல் பயணப்பட்டு, ஆனால் மனதில் தங்கி சித்திரவதை செய்வதுண்டு.  ராகவன் பாவம். ஏன் அவர் சொல்லவில்லை? எதனால் என்பது மட்டும் சற்றுத் தொக்கி நிற்பது போல் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை எங்கள் யூகத்திற்கே விட்டுவிட்டீர்கள் போலும்.   பழையசாமான்களுடன் பயணித்த வானொலி சுமந்து சென்ற காதல்கதை எங்கேனும் தொடர்கதையாகுமோ?!!! அதைப் பிரித்து பாகங்கள் பிரிந்திடாமல் அப்படியே யாரேனும் வாங்கி வைத்தால் நன்றாக இருக்குமே என்றும் தோன்றியது. வாழ்த்துகள் குமார். நல்ல கதைக்கு...