pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பயணத்தில் ‘பய’ங்கர அனுபவம்

3.5
176

ப யணம் என்றுமே அலுப்பதில்லை... என்னைப் பொறுத்தவரை அது ஒரு சுகானுபவம்... பயணம் எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. பயணிக்கும் மனநிலையில்தான் மாற்றங்கள் இருக்கின்றதே தவிர பயணத்தில் எப்போதும் ...

படிக்க

Hurray!
Pratilipi has launched iOS App

Become the first few to get the App.

Download App
ios
எழுத்தாளரைப் பற்றி
author
'பரிவை' சே.குமார்

தேவகோட்டைக்கு அருகிலுள்ள பரியன்வயல் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் எழுத்து கிராமத்து வாசனையும் செட்டிநாட்டுப் பேச்சு வழக்குமே கொண்டது. எனக்கு இப்படித்தான் எழுத வரும். இதெல்லாம் என்னய்யா எழுத்து என்ற வார்த்தைகளை அதிகம் கேட்க நேரிட்டாலும் எனது எழுத்தின் பாணியில் இருந்து யாருக்காகவும் மாற விரும்பாதவன். என சுக, துக்கங்களைத் தூக்கிச் சுமக்கும் ஒரு நண்பனாய் என் எழுத்து எனக்கு வாய்த்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது என்னை எழுத்துக்குள் இழுத்து வந்தவர் நான் தந்தையாக மதிக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன். அவர் போட்ட பிள்ளையார் சுழியின் பின்னே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடை நின்றாலும் முழுவதுமாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதி 'மனசு'. மிகச் சிறப்பாக நடத்தினோம். நண்பர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது ஆனால் மனசு இன்னும் மனசுக்குள்... முதல் கவிதை தாமரையில் மலர்ந்தது. முதல் கதை தினபூமி-கதைபூமியில் துளிர்த்தது.அதன் பின் பாக்யா, உதயம், தினத்தந்தி குடும்ப மலர், தினமணிக் கதிர், மங்கையர் சிகரம் மற்றும் சில பத்திரிக்கைகளிலும் அதீதம், சிங்கப்பூர் கிளிஷே, அகல், கொலுசு, காற்றுவெளி போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. வெட்டி பிளாக்கர்ஸ், சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் ரூபனின் எழுத்துப் படைப்புகள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசும், தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் அகலின் சிறுகதைப் போட்டிகளில் புத்தகப் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. எனது கருத்து பாக்யா மக்கள் மனசு பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. என்னில் பாதி என் அன்பு மனைவி நித்யா, என் உயிராய் இரண்டு செல்வ(ல)ங்கள்... மகள் ஸ்ருதி, மகன் விஷால். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் எனக்கு பொழுதுபோக்கு மற்றும் தனிமை கொல்லி என் எழுத்து மட்டுமே. நிறைய எழுதுவேன்... இங்கிருப்பதால் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது குறைந்து விட்டது. எனது முதல் புத்தகமான் 'எதிர்சேவை' சிறுகதை தொகுப்பு (2020), தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது பெற்றிருக்கிறது. வேரும் விழுதுகளும் (2021), திருவிழா (2022) என்னும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. எனது புத்தகங்களை எனது நண்பர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் வெளியிட்டுள்ளார். நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை