மெத்தப் படித்த மேதையல்ல - நான்
கழிப்பறை பாடகர் கண்டிருப்பீர் !
நானும் அங்கனமே - என்
எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தில் எழுதுகிறன் - இன்று
குறை குடமே நான் - இங்கு
கூத்தாட வரவில்லை - நின்று
நிறை குடமாக மாற - நின்
அடி தேடி வந்தேன் .
எழுத்தில் பிழையிருக்கலாம் - என்
எண்ணத்தில் பிழையில்லை - ஒரு
கண்ணத்தில் அரைந்தால் - மறு
கண்ணத்தைக் காட்டி நிற்க - நான்
ஒன்றும் கர்த்தர் இல்லை - இந்தப்
பாவப் பட்ட உலகில் உதித்த - பல
பாமரரில் நானும் ஒருவன்.
பாட்டாளிகள் படும் பாட்டை - தினம்
பார்வையினால் கண்டவன் - நான்
விவசாயிகள் வேதனையில் - நித்தம்
வெந்து தனிவதைக் கண்டு - கேட்டு
நெஞ்சு பொருக்காமல் - அவர்
நஞ்சகற்றும் எண்ணம் கொண்ட
நல்லோரை நாடுபவன் நான்.
அள்ளிக் கொடுத்து வாழ - ஆசை
கொண்டோரில் நானும் ஒருவன் - இன்று
காலம் செய்த கோலம் - என்
அறிவைக் கொடுத்து வாழுகிறேன் - நான்
ஏட்டில் எழுதியவை அனைத்தும் - இங்கு
நாட்டில் நடந்தேறிடின் நன்மையே - இல்லை
கடலில் கரைத்த பெருங்காயமே அவை !
நான் ஒரு அமைப்பியல் பொறியாளர் . நிறைய வாசித்ததில்லை, கேட்டிருக்கிறேன்.நிறைகள் காணினும் குறைகள் காணினும் எழுதுங்கள் வாழ்த்துங்கள் நீங்கள் . வளர வேண்டும் நான்.
இப்படிக்கு
த.ப.
நன்றி...
கைபேசி எண் : 9600196852
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு